அண்ணா !தலையில மிளகாய் அரைக்கிறதுன்னு சொல்வாங்களே அது என்ன ? நண்பா ! காதுல பூ சுத்துறதா சொல்றாங்களே அது என்ன ? நிச்சயமாய் இதுக்கும் நான் சொல்லப்போறதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது ?அமித் ஷா அவருதான் கலவர மூர்த்தி பாஜக தலைவர் தமிழ்நாட்டில ஒரு பொதுக்கூட்டத்தில பேசும்போது சொன்னார் மோடி ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் விலை குறைஞ்சுபோச்சு ! நானும் யோசிச்சுப் பார்த்தேன் ! இருக்கும் .. இருக்கும்
.மோடி தொலைபேசியிலே மிரட்டி அரபு நாடுகளைப் பணியவச்சு பெட்ரோல் விலையை குறைச்சிட்டே வர்ராரு போல..பெட்ரோலை சும்மா கொடுப்பாரு போலன்னு நினைச்சுகிட்டே இருந்தேன் . வயசானாலே பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது..2002 வருடம் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு ரூ.3135. 48 விற்றது;
அப்போது பெட்ரோல் விலை ரூ. 28.27 டீசல் விலை ரூ . 18.35-2008 வருடம் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு ரூ .9099.04 விற்றது;
அப்போது பெட்ரோல் விலை ரூ. 53.49 டீசல் விலை ரூ . 38.05-2015 வருடம் அதுதான் இப்போது கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு ரூ .3074.00 என குறைந்து விட்டது; அப்போது பெட்ரோல் விலை ரூ. 65.60 டீசல் விலை ரூ . 54.59.அட ! இன்னொரு கணக்கு கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 147 டாலர்னு விற்றபோது பெட்ரோல் விலை ரூ . 67. இப்போது கச்சா எண்ணெய் விலை மூன்றில் ஒரு பகுதியாக 45 டாலராக வீழ்ந்து விட்டபோதும் பெட்ரோல் விலை அதே ரூ.67. ஆம், உண்மையில் மூன்றில் ஒரு பாகமாகக் குறைந்திருக்க வேண்டாமா? ஏன் குறையவில்லை? மோடி அரசு நாலுமுறை வரியை சுமார் ரூபாய் 8 க்கு மேல் ஏற்றிவிட்டது. ஆமாம், கடந்த ஆட்சியில் பெட்ரோல் வரியைக் குறைக்கக் கோரி கூச்சல் போட்ட இவர்கள் இப்போது விலையை ஏற்றுகிறார்கள்!!
இரண்டாவது, கணக்கீடு முறையில் தில்லுமுல்லு செய்து விலை வீழ்ச்சியின் பலன் ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் கிடைக்காமல் ஏமாற்றுகிறார்.இதுதான் மோடி வித்தையோ? முதலில் குறிப்பிட்ட வரிகள் யாருக்கு, எதற்கு, நீங்களே யோசியுங்கள்.- சு.பொ.அ.
No comments:
Post a Comment