நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டத்தை விலக்கிக்கொள்ளக்கோரி விவசாயிகள்/விவசாயத் தொழிலாளர்களின் அமைப்புகளும், மதிய உணவு ஊழியர்கள் நிரந்தர ஊதியம் வழங்கக்கோரியும், BSNL ஊழியர்கள் BSNL நிறுவனத்தைப் பாதுகாத்திட வலியுறுத்தியும் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்துகிறார்கள்.மத்திய மோடி அரசாங்கம் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கும் விதத்தில் நிலங்களைக் கையகப்படுத்தி, கார்ப்பரேட்டுகள் மற்றும் ரியல்எஸ்டேட் பணமுதலைகளிடம் ஒப்படைக்கும் விதத்தில் ஓர் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்திருக்கிறது.இதனைக் கண்டித்தும், இதனை உடனடியாக விலக்கிட வலியுறுத்தியும் இரு அகில இந்திய விவசாயிகள் சங்கமும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமும் செவ்வாய் அன்றுகாலை நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி/ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.மதிய உணவு ஊழியர்கள்அதேபோன்று நாடு முழுவதும் உள்ள 12 லட்சம் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவு அளிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிய உணவு ஊழியர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மட்டும் மதிப்பூதியம் என்ற பெயரில் ஓர் அற்பத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் ஓராண்டில் பத்து மாதத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.இதனை மாற்றியமைப்பதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் சர்வதேச தொழிலாளர் 45ஆவது மாநாட்டில் உறுதிஅளித்தது. ஆயினும் அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனைக் கண்டித்தும், மதிய உணவு ஊழியர்களுக்கு நிரந்தர ஊதியம் வழங்குவதோடு, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்தக்கோரியும் மதிய உணவுஊழியர்கள் செவ்வாய் அன்று காலை நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி/ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இப்பேரணி/ஆர்ப்பாட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர்கள் தபன்சென், சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் உரை நிகழ்த்துகிறார்கள்.BSNL ஊழியர்கள்.பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியாருக்குத் தாரை வார்த்திட பல்வேறுவிதமான சூழ்ச்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை அம்பலப்படுத்தும் விதத்திலும், BSNL நிறுவனத்தைக் காத்திடவும் BSNLஊழியர்கள் 25.02.15 அன்று நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்துகிறார்கள்.
No comments:
Post a Comment