மறக்க முடியாத மக்கள் கலெக்டர்பிப்ரவரி மாதம் 4-ம் தேதி உலகப் புற்றுநோய் தினம். பிப்ரவரி முதல் தேதி, எளியவர்களுக்காகப் போராடிய ஸ்ரீபிரியாவைப் புற்றுநோய் பலிவாங்கிவிட்டது. 2004-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்ற இவர், மதுரை சட்டக் கல்லூரியில் படித்தவர். சட்டக் கல்லூரியில் பல்வேறு போராட்டங் களுக்குத் தலைமைதாங்கியவர். போராட்ட குணமிக்கவர். சட்டக் கல்லூரிகளில் இருந்த ப்ரேக்கிங் சிஸ்டத்தை அகற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவர். ஏதாவது ஒரு பாடத்தில் தேர்வு ஆகாமல் போனால், அந்த ஆண்டு படிப்பைத் தொடர முடியாது என்ற அந்த சிஸ்டத்தை உடைக்க உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர். தமிழ் மொழி மீது ஆர்வம் மிக்கவராக இருந்தார். முதுகலை சட்டப் படிப்பை முடித்ததும் டெல்லி சென்று உச்ச நீதிமன்றத்தில் வக்கீல் தொழிலை நடத்தி, அங்கு நடைபெறும் அதிகாரப் போக்கை பார்த்து ஐ.ஏ.எஸ் படிப்புக்கு மாறினார். தனது கல்லூரி நண்பரான லஜபதிராயை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து,. . .மேற்கு வங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றிய மதுரையை சேர்ந்த ஸ்ரீபிரியா ரெங்கராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.மதுரை கே.கே.நகரை சேர்ந்த ஸ்ரீபிரியா ரெங்கராஜன் (42), ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று மேற்கு வங்கம் ஹூக்ளி மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றினார்.கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ஸ்ரீபிரியா, மதுரையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.அவரது உடலுக்கு ஹைகோர்ட் நீதிபதி டி.அரிபரந்தாமன், மதுரை முன்னாள் கலெக்டர் சகாயம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.ஸ்ரீபிரியா ரெங்கராஜனின் கணவர் லஜபதிராய், ஹைகோர்ட்டில் வழக்கறிஞராக உள்ளார். இவர்களுக்கு அகிலன்ராய் (18), கயல்ராய் (15) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.அன்னாருக்கு நமது அஞ்சலியையும் உரித்தாக்குகிறோம்.
No comments:
Post a Comment