பியோங்யாங்: தென்கொரியாவுடன் இணைந்து எங்களுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அமெரிக்க தோல்வி வரலாற்றின் இறுதி பக்கங்களை நாங்கள் எழுதுவோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். கிழக்கு ஆசிய பகுதியில் கொரிய தீபகற்பத்தின் வடக்கே வடகொரியா அமைந்துள்ளது. இதன் 3 பக்கங்களிலும் சீனா, ரஷ்யா மற்றும் தென்கொரியாவின் எல்லைகள் அமைந்துள்ளன. தென்கொரியாவின் கடல் எல்லை பகுதி அருகே வடகொரியா அதிநவீன ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக, தென்கொரி யாவும் அமெரிக்காவின் ஆதரவுடன் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், வடகொரிய கடற்பகுதியில் அமெரிக்க போர்க் கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு அச்சுறுத்தி வருகின்றன. இருதரப்பிலும் எந்நேரமும் போர் நடைபெறலாம் என்ற சூழல் நிலவுகிறது.இதுகுறித்து வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: பலம் குறைந்த நாடுகளை ராணுவம் மற்றும் பணபலத்தை காட்டி அமெரிக்கா மிரட்டி வருகிறது. அவர்களுக்கு உடன்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. தென்கொரியாவுடன் அமெரிக்கா இணைந்து, எங்கள் மீது போர் தொடுத்தால், நாங்கள் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுப்போம். நாங்களும் அமெரிக்காவுடன் போர்புரிய கடல்வழி, தரைவழி, வான்வழி, இணையதள தாக்குதல் உட்பட எல்லா தாக்குதலுக்கும் தயாராக உள்ளோம். அமெரிக்காவின் தோல்வி வரலாற்றின் கடைசி பக்கங்களை நாங்கள்தான் எழுத வேண்டியிருக்கும்.இவ்வாறு கிம் ஜோங் உன் தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment