சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, பழங்காநத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டி.ஓய்.எப்.ஐ.) மற்றும் இந்திய மாணவர்கள் சங்கம் (எஸ்.எப்.ஐ.) சார்பில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, எஸ்.எப்.ஐ. மாவட்டத் தலைவர் க. செல்வா தலைமை வகித்தார்.
சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்களைத் தாக்கிய காவல் துறையினரைக் கண்டித்தும், பாரிமுனையில் உள்ள சட்டக் கல்லூரியை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், எஸ்.எப்.ஐ. மாநிலத் தலைவர் வி. மாரியப்பன், டி.ஒய்.எப்.ஐ. மாவட்டத் தலைவர் ஜெ. லெனின், மாவட்டச் செயலர் பி. கோபிநாத், எஸ்.எப்.ஐ. மாவட்டச் செயலர் பாவெல்சிந்தன், கே. குரோனிசெந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment