Sunday, 22 February 2015

40 மைக்ரோ கிராம் மாசு - நமது ஆயுளில் 3 வருடம் குறைகிறது.

மாசு படிந்த காற்றை சுவாசிப்பதால் இந்தியாவின் மக்கள் தொகையில் பாதி அல்லது 66 கோடி பேர் தங்கள் ஆயுளில் 3.2 வருடத்தை இழப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. காற்றில் தரநிலைகளை பின்பற்றினால் இந்தியாவில் 21 லட்ச ஆண்டுகள் வாழ்க்கை வரை காற்றை தரமானதாக சேமிக்க முடியும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.சிகாகோவின் எரிசக்தி கொள்கை நிறுவன இயக்குநர் மைக்கேல் கிரீன் ஸ்டோன், பொருளாதார நிபுணர்கள், யேல் மற்றும் ஹார்வார் பல்கலைக் கழகத்தின் பொதுகொள்கை வல்லுநர்கள் இணைந்து செயற்கை கோள் தரவுகளின் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள காற்றின் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வு நாட்டின் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி நடந்தது.அதில், 66 கோடிக்கு மேல் (54.5 சதவீதம்) மக்கள் வாழும் பகுதிகளில் ஒரு கன மீட்டருக்கு 40 மைக்ரோ கிராம் மாசு கலந்துள்ளது. 26.2 கோடி (21.7 சதவீதம்) மக்கள் வாழும் பகுதிகளில் 2 மடங்கு தரமான காற்றாக உள்ளது. கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்தியரும் மொத்த மக்கள் தொகையான 120.4 கோடி பெரில் (99.5 சதவீதம்) மீட்டருக்கு 2.5 என்ற அளவில் வசித்து வருகின்றனர்.கனமீட்டருக்கு 10 மைக்ரோ கிராம் மாசு காற்று உள்ள பகுதியை வழிகாட்டியாக உலக சுகாதார அமைப்பு ஆய்விற்காக எடுத்து கொண்டுள்ளது எனக் கூறப்பட்டு ள்ளது.இது குறித்து மைக்கேல் கிரீன் ஸ்டோன் கூறியதாவது:இந்தியா வளர்ச்சியின் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகிறது. ஆனால் மிக நீண்ட வளர்ச்சி, வழக்கமான வரையறையை விட காற்று மாசுபடுவதை அலட்சியம் செய்து சுகாதார விளைவுகளை ஏற்படுத்துகிறது.இந்த ஆய்வு காற்று மாசுபடுவதன் மூலம் மக்கள் இறப்பு வளர்ச்சி விகிதத்தை அதிகம் காட்டுகிறது. மேலும் இந்த ஆய்வு, காற்று மாசுபடுவதன் மூலம் மனித வேலைத் திறன் குறைவதைக் காட்டுகிறது. வாழ்நாளில் நோயின் பிடியில் அதிக நாட்கள் இருப்பதைக் காட்டுகிறது. இதற்காக ஒதுக்கப்படும் சுகாதாரச் செலவுகள் அதிகரிப்பதை காட்டுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments: