தமிழகத்தில் இருந்து ஏராளமான தடகள வீரர், வீராங்கனைகள் உருவாகியிருந் தாலும் ஓட்டப் பந்தயங்களில் தங்கம் வெல்வது என்பது பெரும்பாலும் கானல் நீராகவே இருந்தது.
இந்நிலையில் கேரளாவில் நடைபெற்று வரும் தேசியப் போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் தமிழக வீராங்கனை காயத்ரி.
12.02.15 நடைபெற்ற 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பங்கேற்ற காயத்ரி, மின்னல் வேகத்தில் இலக்கினை நோக்கி ஓடினார். இதனால் 100 மீட்டர் இலக்கினை 13.36 வினாடிகளில் கடந்து முதலிடம் பெற்றதோடு தங்கமும் வென்றார். தடகளத்தில் தங்கம் வெல்லும் தமிழகத்தின் கனவு காயத்ரி மூலம் நனவாகியுள்ளது. அந்த வகையில் காயத்ரி ஒரு தங்கம் வென்றிருந்தாலும் அது சொக்கத்தங்கம்தான்...!
1 comment:
காயத்ரியைப் பாராட்டுவோம்
Post a Comment