Saturday, 30 April 2016
Friday, 29 April 2016
மே தின வரலாறு
“8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம்” என்ற கோஷத்தை முன்வைத்து போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக கடந்த 130 ஆண்டுகளாக உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.1856 ஏப்ரல் மாதம் 21ஆம் நாள் முதன்முதலில் வேலை நேரத்தை எட்டு மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று வேலை நிறுத்தம் செய்து போராடிய பெருமை ஆஸ்திரேலிய தொழிலாளர்களை சாரும். இதே கோரிக்கைக்காக இரண்டாவது வேலை நிறுத்தம் செய்த பெருமை இந்தியத் தொழிலாளர்களை சாரும். 1862-ல் “8 மணி நேர வேலை” கோரிக்கையை வலியுறுத்தி 1200 ரயில்வே தொழிலாளர்கள் கல்கத்தா நகரிலே வேலை நிறுத்தம் செய்தனர். இதைத் தொடர்ந்து 1863-ல் மும்பையில் நாவிதர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக வேலை நிறுத்தம் செய்தனர். அதே ஆண்டு கல்கத்தாவில் பல்லக்கு தூக்குபவர்கள் தாங்கள் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்தனர். 1873-ல் கசாப்பு கடைக்காரர்கள் சென்னையில் வேலை நிறுத்தம் செய்தனர்.
இந்தியாவில் முதன்முறையாக 1923 மே மாதம் 1ஆம் தேதி சென்னை கடற்கரையில் தோழர் சிங்காரவேலு அவர்களால் மே தினம் கொண்டாடப்பட்டது. தோழர் சிங்காரவேலர் அவருடைய மகளின் சிவப்பு நிறப் புடவையை கிழித்து மே தினக் கொடியை ஏற்றினார்.
1908-ல் இந்தியாவில் முதல் அரசியல் வேலை நிறுத்தம் நடைபெற்றது. சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் அவர்களுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் விதித்த ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை எதிர்த்து பஞ்சாலைத் தொழிலாளர்கள் நாடு முழுவதும் 5 நாட்கள் தொடர் வேலை நிறுத்தம் செய்தனர். போலீசாரின் மற்றும் இராணுவத்தினரின் அடக்குமுறையையும் எதிர்கொண்டு தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராடினர். கண்பத் கோவிந்த் என்ற தொழிற்சங்கத் தலைவர் இப்போராட்டத்தில் கொல்லப்பட்டார். இப்போராட்டத்தை உற்றுநோக்கிய மாமேதை லெனின், இந்தியாவின் தொழிலாளி வர்க்கத்தை மிகவும் பாராட்டினார். இப்படி பல போராட்டங்களுக்குப் பிறகுதான் இந்தியா வில் தொழிலாளர் நலச் சட்டங்களே ஒன்றன்பின் ஒன்றாக இயற்றப்பட்டன. 1926-ல் தான் தொழிற்சங்கச் சட்டம் இயற்றப்பட்டது. 1947-ல்தான் தொழிற் தகராறு சட்டம் இயற்றப்பட்டது.
Thursday, 28 April 2016
Tuesday, 26 April 2016
Saturday, 16 April 2016
மதுரை SSAயில் மேலும் வெற்றியை உறுதிபடுத்திடSEWA கூட்டணி.
மதுரை SSA-யில் மேலும், BSNLEU வெற்றியை உறுதிபடுத்திட SEWA கூட்டணி உடன்பாடு 15-04-16 அன்று ஏற்பட்டுள்ளது என்பதை மிக, மிக மகிழ்வோடு நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் அறிவிக்கின்றது.. . .
அருமைத் தோழர்களே ! இதுகாறும் நடந்துள்ள 6 சங்க அங்கீகாரத் தேர்தலிலும் நம்மோடு கூட்டாக இருந்த SEWA சங்கம், தொடர்ந்து இம்முறையும் நமது மதுரை மாவட்டத்தில் SEWA சங்கம் 7வது சங்க அங்கீகாரத் தேர்தலிலும்கூட்டாக இணைந்து பணியாற்றி அதிகபட்ச வெற்றியை மதுரை SSAயில் படைத்திட உறுதி பூண்டுள்ளது. 15-04-16 அன்று SEWA மாவட்ட சங்க அலுவலகத்தில், BSNLEU + SEWA இரு சங்கங்களுக்கிடையே பேச்சு வாரத்தை நடைபெற்றது. இப் பேச்சுவாரத்தையில், SEWA மாவட்ட செயலர் தோழர்.S. கந்தசாமி, BSNLEU மாவட்டத்தலைவர் தோழர்.C.செல்வின் சத்தியராஜ், மாவட்டச் செயலர் தோழர்.S. சூரியன், மாவட்ட அமைப்பு செயலர் தோழர்.N.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
SEWA மாவட்டச் செயலர் தோழர்.S. கந்தசாமி 14-04-16 அன்று நடை பெற்ற SEWA மாவட்ட செயற்குழு குறித்த தகவல்களை தெரிவித்தார். அதன் அடிப்படையில் மதுரை SSA-யில் SEWA+BSNLEU+SNATTA கூட்டாக 7வது சங்கத் தேர்தலில் பணியாற்றி, மிக அதிகப்படியான வாக்குகளை பெற்று வெற்றியை பெறுவது என உடன்பாடு ஏற்பட்டது. அதே போன்று, நமது வெற்றிக்குப் பின் அமைய விருக்கும் LJCM -மில் இணைந்து செயல்படுவது என்றும், கூட்டாக வாக்கு சேகரிப்பது, நோட்டிஸ், போஸ்டர் கூட்டாக வெளியிடுவது என்றும் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. ஆகவே, ஸ்தல மட்டத்தில் அனைத்து கிளைகளிலும் நமது கூட்டணி சங்கங்களின் இணைந்த செல்பட்டை உத்தரவாதப் படுத்த வேண்டுகிறோம்.
---வெற்றி வாழத்துக்களுடன்
Friday, 15 April 2016
Thursday, 14 April 2016
மதுரை SSA-யில் தேர்தல் சூராவளி சுற்றுபயணம்...
அருமைத் தோழர்களே ! நமது மதுரை SSA-யில், 7வது சங்க அங்கீகாரத் தேர்தலில் நமது BSNLEUசங்கம் தொடர்ந்து NO-1 வெற்றியை உத்தரவாதப் படுத்தும் வகையில் - மதுரை, தேனி - திண்டுக்கல் ஆகிய மூன்று ரெவன்யு மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களைத்தவிர அனைத்து இடங்களிலும் நமது மாநில, மாவட்ட சங்கநிர்வாகிகளும், கிளைச் செயலர்களும், முன்னனித் தோழர்களும் பெருவாரியாக பங்கேற்கும் வண்ணம் அனைத்து இடங்களிலும் வாக்கு சேகரிப்பு பணி மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விடுபட்ட இடங்களுக்கும் விரைவில் தேர்தல் பணிக்குழு தேர்தல் சூராவளி சுற்றுபயணம் சென்று வாக்குகளை சேகரிக்க உள்ளது .... கிளை மட்டத்தில் கிளைச்சங்கங்கள் கூடுதல் கவனம் செலுத்தி அதிகப்படியான வாக்குகளை பெறுவதற்கான அனைத்து உக்திகளையும் கடைபிடிக்க வேண்டுகிறோம். வாக்கு சேகரிப்பின் போது சில காட்சிகள் . . .
இந்தியா முழுவதும் BSNLதேர்தலின் வாக்காளர் விபரம் . . .
அருமைத் தோழர்களே! எதிர்வரும் 10.05.16 அன்று நமது துறையில் 7வது சங்க அங்கீகார தேர்தலில் இந்தியா முழுவதும் BSNL வாக்காளர்கள் மற்றும் பூத்துகள் போன்ற விபரங்களை நமது BSNL டெல்லி கார்பரேட் அலுவலகம் வெளியிட்டுள்ளது. கடந்த தேர்தலில் சில ஒப்பீடுகள் . . .
மொத்த மொத்த வாக்காளர்கள் = 164244
தமிழக மொத்த வாக்காளர்கள் = 12126மதுரை மாவட்ட மொத்த வாக்காளர்கள் = 1402
நாடு முழுவதும் மொத்த வாக்கு சாவடிகள் = 2148
அதிக பட்ச வாக்காளர்கள் ஆந்திர மாநிலம் = 19046
குறைந்த பட்ச வாக்காளர்கள்
ஜபல்பூர் T & D = 46
ஜபல்பூர் பயிற்சி மையம் = 70
அதிகமான வாக்காளர்கள் உள்ள ஆறு மாநிலங்கள்
ஆந்திரா = 19046
மகராஷ்டிரா = 16221
குஜராத் = 13752
கர்நாடகா = 12466
தமிழ்நாடு = 12126
கேரளா= 9941
கடந்த 6வது தேர்தலில் மொத்த வாக்காளர்கள் = 204463
இந்த 3 ஆண்டுகளில் 40239 வாக்காளர்கள் குறைந்துள்ளனர், அதாவது, இலாக்காவை விட்டு சென்றுள்ளனர். கடந்த 6வது தேர்தலில், BSNLEU சங்கம் 99380 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றது.
BSNLEU சங்கத்திற்கு NFTEBSNL சங்கத்தை
விட அதிக வாக்குகள் பெற்று தந்த, முதல் 5 மாநிலங்கள்
ஆந்திரா= 11056
மகராஷ்டிரா = 10394
குஜராத் = 6843
கர்நாடகா = 7937
கேரளா = 7734 மற்ற முழு விபரங்கள் காண இங்கே கிளிக் செய்யவும்.
Wednesday, 13 April 2016
Sunday, 10 April 2016
மடல் சொல்லும் உண்மை முகம் என்ன . . .?
BSNLEU தலைமையிலான
United Forum சார்பாக...
இரண்டு இலக்க....
"99 ரூபாய்" புகழ்...
NFTEBSNL - நிர்வாகத்தின்
கூட்டு சதியை எதிர்த்து...
போராட்ட பிரகடனம்
செய்த போது...,
நிர்வாகம் நம்மை மிரட்டும் தொனியில்,
கடிதம் கொடுத்தது.
NFTEBSNL சங்கம்...
" மடல் சொல்லும் உண்மையாக"
அதை வெளியிட்டு...
அழகு பார்த்தது. ….
ஒரு தொழிற்சங்கத்தை....
போராட்டத்தில் ஈடுபடுவதற்காக...
அரசு இயந்திரம் மிரட்டும் போது...,
அதை பார்த்து....
ஆனந்தக்கூத்தாடும் சங்கத்தை...,
"தொழிற் சங்கம்" என்று அழைப்பதா?...
அல்லது...
"வேறு பெயரை" சொல்லி அழைப்பதா...?
புரியவில்லை...
"போராட்ட புலி" வேடம்...
வேண்டாமென்று கூறுபவர்கள்...
"எலியை பிடிக்க...
மலையை தள்ளுகிறேன்"...
எனக்கூறுவது ஏன்?
06.04.2016 அன்று நிர்வாகம்...
நம் கன்னத்தில் அறைந்ததாக...
ஆனந்தப்படுவோருக்கு...
நாம் சொல்வது...
ஒன்றே ஒன்று தான்.
நிர்வாகத்தை எதிர்ப்பவர்களைத்தான்...
நிர்வாகம் அடிக்க ஆசைப்படும்...,
அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டு...,
கொத்தடிமைகளாக மண்டியிட்டு கிடப்பவர்களுக்கு...
அடி கொடுக்க போகிறவர்கள்,
நிகழ்வுகளை கூர்மையாக...
கவனித்து கொண்டிருக்கும்...
ஊழியர்கள் தான்...
என்பதை 12.05.2016 அன்று...
உலகம் அறியும்....
தைரியம் இருந்தால்...
நிர்வாகத்தின் 06.04.2016 மடலுக்கு...,
07.04.2016 அன்று சரியான பதிலை,
"நெத்தியடியாக" கொடுத்தோமே!...
அதை வெளியிடத்தயாரா?
பொய் சொல்லும் வாய்க்கு...
போஜனம் கிடைக்காது...
புறம் கூறும் சங்கத்திற்கு...
United Forum சார்பாக...
இரண்டு இலக்க....
"99 ரூபாய்" புகழ்...
NFTEBSNL - நிர்வாகத்தின்
கூட்டு சதியை எதிர்த்து...
போராட்ட பிரகடனம்
செய்த போது...,
நிர்வாகம் நம்மை மிரட்டும் தொனியில்,
கடிதம் கொடுத்தது.
NFTEBSNL சங்கம்...
" மடல் சொல்லும் உண்மையாக"
அதை வெளியிட்டு...
அழகு பார்த்தது. ….
ஒரு தொழிற்சங்கத்தை....
போராட்டத்தில் ஈடுபடுவதற்காக...
அரசு இயந்திரம் மிரட்டும் போது...,
அதை பார்த்து....
ஆனந்தக்கூத்தாடும் சங்கத்தை...,
"தொழிற் சங்கம்" என்று அழைப்பதா?...
அல்லது...
"வேறு பெயரை" சொல்லி அழைப்பதா...?
புரியவில்லை...
"போராட்ட புலி" வேடம்...
வேண்டாமென்று கூறுபவர்கள்...
"எலியை பிடிக்க...
மலையை தள்ளுகிறேன்"...
எனக்கூறுவது ஏன்?
06.04.2016 அன்று நிர்வாகம்...
நம் கன்னத்தில் அறைந்ததாக...
ஆனந்தப்படுவோருக்கு...
நாம் சொல்வது...
ஒன்றே ஒன்று தான்.
நிர்வாகத்தை எதிர்ப்பவர்களைத்தான்...
நிர்வாகம் அடிக்க ஆசைப்படும்...,
அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டு...,
கொத்தடிமைகளாக மண்டியிட்டு கிடப்பவர்களுக்கு...
அடி கொடுக்க போகிறவர்கள்,
நிகழ்வுகளை கூர்மையாக...
கவனித்து கொண்டிருக்கும்...
ஊழியர்கள் தான்...
என்பதை 12.05.2016 அன்று...
உலகம் அறியும்....
தைரியம் இருந்தால்...
நிர்வாகத்தின் 06.04.2016 மடலுக்கு...,
07.04.2016 அன்று சரியான பதிலை,
"நெத்தியடியாக" கொடுத்தோமே!...
அதை வெளியிடத்தயாரா?
பொய் சொல்லும் வாய்க்கு...
போஜனம் கிடைக்காது...
புறம் கூறும் சங்கத்திற்கு...
அங்கீகாரம் கிடைக்காது...
உண்மை தான்...
2004 முதல் 5 தேர்தல்களாக...
ஊழியர்கள்...,
பொய் சொன்ன வாய்க்கு... (NFTEBSNL சங்கத்திற்கு)
போஜனம் தர வில்லை....
புறம் சொன்னவர்களுக்கு... (NFTEBSNL சங்கத்திற்கு)
அங்கீகாரம் தரவில்லை...
நாம், BSNLEU சங்கம் தான்...
போஜனம்...
(இரண்டாவது சங்க அங்கீகாரம்)
பெற்றுக்கொடுத்தோம்....
திருந்துங்கள்!
அல்லது திருத்தப்படுவீர்கள்!!
என நாம் சொல்லவில்லை...
ஊழியர்கள் சொல்ல..
துவங்கி விட்டார்கள்...
நிர்வாகத்திடம் மண்டியிட்டு...,
ஊழியர் நலன்களை...
அடகு வைக்கத்
துடிப்பவர்களுக்கு...,
"மே 10" அன்று ஊழியர்கள்...
நல்ல பாடம் புகட்டுவார்கள்...
உண்மை தான்...
2004 முதல் 5 தேர்தல்களாக...
ஊழியர்கள்...,
பொய் சொன்ன வாய்க்கு... (NFTEBSNL சங்கத்திற்கு)
போஜனம் தர வில்லை....
புறம் சொன்னவர்களுக்கு... (NFTEBSNL சங்கத்திற்கு)
அங்கீகாரம் தரவில்லை...
நாம், BSNLEU சங்கம் தான்...
போஜனம்...
(இரண்டாவது சங்க அங்கீகாரம்)
பெற்றுக்கொடுத்தோம்....
திருந்துங்கள்!
அல்லது திருத்தப்படுவீர்கள்!!
என நாம் சொல்லவில்லை...
ஊழியர்கள் சொல்ல..
துவங்கி விட்டார்கள்...
நிர்வாகத்திடம் மண்டியிட்டு...,
ஊழியர் நலன்களை...
அடகு வைக்கத்
துடிப்பவர்களுக்கு...,
"மே 10" அன்று ஊழியர்கள்...
நல்ல பாடம் புகட்டுவார்கள்...
Friday, 8 April 2016
நமது PLI போராட்டத்தால் நிர்வாகத்தின் நிலைப்பாடு. . .
போனஸ் விவகாரத்தில் நாம் போராட அறிக்கை கொடுத்தவுடன் நிரவாகம் 06-04-2016 அன்று தோழர் அபிமன்யுவிற்கு போராட்டம் தேவையற்றது என்றும், சட்ட விரோதமானது என்றும், நிர்வாகம் எந்த முடிவு எடுக்கவில்லை எனவும், CMDயை குறை கூறுவது அதீதமானது எனவும் கடிதம் கொடுத்தது. அதற்கு நம் பொதுச் செய்லர் இன்று CMD நம் தலைவர்களிடம் பல தடவை 2 இலக்க போனஸ் தான் தரமுடியும் என்று கூறியது உண்மை என்றும், 29-03-2016 அன்று நிர்வாகம் ஒரு பவுண்டுக்கு நிகரான தொகையைதான் போனஸாக தர இயலும் என கூறினார் என்றும், அதனை நாம் ஏற்க முடியாது என்று கூறினோம் என்றும், எனவேதான் நிர்வாகம் CMDன் ஆசியுடன் அவசர அவசரமாக 30-03-2016 அன்று
NFTEயை மட்டும் வைத்து 2 இலக்க போனஸ் தர முடிவு எடுத்துள்ளது என்றும், இதனை பற்றி தான் கூறியது சரிதான் என்றும் அதனை வாபஸ் பெற முடியாது என்றும் கூறி தார்ணா நடக்கும் என்றும் கடிதம் கொடுத்துள்ளார். வேறு வழியின்றி நிர்வாகம் வெள்ளைக் கொடி காட்டி தோழர் அபிமன்யுவை பேச்சு வார்ரத்தைக்கு அழைத்தது. BSNLEU தரப்பில்
தோழர் அபிமன்யு பொதுச் செயலர், தோழர்.R.S.செளஹான் அமைப்புச் செயலர், தோழர்.குல்தீப் சிங் உதவிப்பொருளாளர் ஆகியோர் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். நிர்வாகத்தரப்பில் செல்வி.சுஜாதா ராய் DIR(HR), திரு.D.சக்ரவர்த்தி GM(PERS), செல்வி. மதுஅரோரா GM(ESTT), திரு.A.M.குப்தா GM(SR), திரு.ஷியோ சங்கர் பிரசாத் DGM(ESTT), திரு. ராம் ஷக்கல் ADDL GM(SR) ஆகியோர் கலந்து கொண்டனர். தோழர். அபிமன்யு ஒருநாள் கால அவகாசத்தில் நம் பொதுச் செயலர் வர முடியாது என தெரிந்தும் நிர்வாகம் PLI கூட்டம் 30-03-2016 நடத்தியதும், CMDன் ஆசிய்டன் நிர்வாகம் 2 இலக்க போனஸ் தொகைக்கு தோழர். இஸ்லாம் அஹமத் NFTE தலைவருடன் ஒப்பந்தம் போட்டதும்தான் பிரச்சனைக்கு காரணம் என்று உறுதியாக கூறினார். DIR(HR) இனி இதுபோல் ஒருபோதும் நடைபெறாது எனவும், போனஸ் பற்றிய முடிவு தேர்தலுக்குப் பின்தான் எடுக்கப்படும் என்றும் உறுதி கூறினார். நாம் குறைந்தபட்ச போனஸ் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், ஆயினும் இந்த தார்ணாவிற்குப் பின் தேர்தல் முடியும் வரை எந்த போராட்டமும் நடக்காது என்றும் கூறினோம். ஆனாலும் 08-04-2016 முதல் நிர்வாகத்திற்கு கொடுத்த ஒத்துழைப்பை விலக்கி கொள்வதாகவும் அறிவித்தோம். தோழர். அபிமன்யு கொடுத்த கடிதத்தை இணைப்பில் காண்க.. துரோக ஒப்பந்தம் போட்ட NFTE யை புறமுதுகிட்டு ஓடச் செய்வொம்.வெற்றி நமதே...
NFTE + BSNL நிர்வாகத்துடன் செய்த கூட்டுசதிக்கு கண்டனம்...
அருமைத் தோழர்களே ! BSNLலில் பணிபுரியும் அனைவருக்கு ஒரு நியாமான PLI வழங்கப்பட வேன்டு\மென நாம் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ள சூழலில் , NFTEசங்கம் திடிரென வழக்கம் போல் BSNLநிர்வாகத்துடன் கூட்டுச் சேர்ந்து 7வது சங்க அங்கீகார தேர்தல் வேலை மும்பரமாக நடந்து கொண்டிருக்கின்ற இந்த வேலையில், தனது வாடிக்கையான "லோ கொட்டேசன்" பாணியில் "இரு இலக்க" PLIக்கு திட்டம் தீட்டியதை கண்டித்து நமது BSNLEU சங்கம் சார்பாக நாடு முழுவதும் நடைபெற்ற தர்ணாவின் ஒரு பகுதியாக, மதுரை தல்லாகுளம், லெவல்-4 பகுதியில் நடைபெற்ற தர்ணாவிற்கு, மாவட்டதலைவர் தோழர். சி. செல்வின் சத்தியராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் தோழர்.எஸ். ஜான் போர்ஜியா தர்ணாவை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். மாவட்ட செயலர் தோழர்.எஸ். சூரியன் கோரிக்கைய விளக்கி உரை நிகழ்த்தினார். மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள். வி.சுப்புராயலு, பி.தேசிங்கு, எ.வைத்திலிங்கபூபதி, TNTCWU மாவட்ட செயலர் தோழர்.என். சோனைமுத்து ஆகியோர் பேசினர். தர்ணாவை முடித்துவைத்து மாவட்டபொருளர் தோழர்.எஸ்.மாயாண்டி உரையாற்றினார். தர்ணாவில் NFTE + BSNL நிர்வாகத்துடன் இணைந்து செய்த கூட்டுசதிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது அத்தோடு மத்திய சர்கார் சமிபத்தில் அறிவித்துள்ள குறைந்த பட்ச PLI ரூபாய் 7000 BSNLஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது. இறுதியாக எ. நெடுஞ்செழியன் மாவட்ட உதவிச் செயலர் நன்றி கூற தர்ணா நிறைவுற்றது ...
Subscribe to:
Posts (Atom)