BSNLEU ????? ???????? ?????? ?????? ???????????

Welcome

Welcome

Dist. E.C. 2.2.17

Dist. E.C. 2.2.17

Saturday, 1 February 2014

தொழிற்சங்க -கலங்கரை விளக்கம் - தோழர் கே.ஜி.போஸ்

இந்தியாவில் தபால் தந்தி ஊழியர்களின் தொழிற்சங்க வரலாற்றோடு பின்னிப்பிணைந்தது தோழர் கே.ஜி.போஸ் அவர்களின் வாழ்க்கை என்றால் மிகையல்ல. இந்தியாவில் ஒரு போர்க்குணமிக்க தொழிற்சங்க இயக்கத்தை கட்டியவர்களில் முக்கியமானவர்க ளில் ஒருவர். மேற்குவங்கத்திற்கே உரித்தான எளிமையாக, தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தபோதும் வாழ்க்கை முழுவதும் ஏழ்மை துரத்திக் கொண்டிருந்தபோதும் தான் கொண்ட லட்சியத்தில் இருந்து பிறழாதவர். ஏராள மான தொழிற்சங்கத் தலைவர்களை உருவாக்கியவர். அப்படிப்பட்ட உன்னத மான தலைவரின் வாழ்க்கை வரலாற்றை தொழிற்சங்கப்பணியில் உள்ளவர்கள் மட்டுமல்லாது பொதுவாழ்வில் தங்களை இணைத்துக்கொண்ட அனைவரும் படிக்கவேண்டியது அவசியமாகும்.
சுதந்திர இந்தியாவில் தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டபோது அடக்குமுறைக்கு எதிராகவும் பழிவாங்கலுக்கு இடையிலும் சக்தி மிக்க போராட்டங்களுக்கு வியூகம் அமைத்து அதனை வெற்றிகரமாக வழிநடத்திச் சென்று தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்க இயக்கத்திற்கும் முன் உதாரணமாக அமைந்தவர் கே.ஜி.போஸ். அவர் எப்போதும் தொழிற்சங்க ஒற்றுமையைப் பேசினார். கூட்டு இயக்கத்தின் அவசியத்தை வலி யுறுத்தினார். இதனால் தான் சங்க வித்தியாசம் இன்றி அவருக்கு தொழிலாளர்கள் மத்தியில் மகத்தான ஆதரவு இருந்தது. வேறு எந்த துறையிலும் இல்லாத வகையில் தபால் தந்தி துறையில்தான் ‘ஈடி’ என்ற தற்காலிக தொழிலாளர்கள் அதிகமாக இருந்தனர். அவர்களுக்காக தொடர்ச்சியாகப் போராடிய தலைவர் கே.ஜி.போஸ். ஈடி ஊழியர்களை நிரந்தர இலாகா ஊழியர்களுடன் ஒப்பிட முடியாது என்று நிர்வாகத்தின் கருத்துடன் சில தொழிற்சங்கத் தலைமை ஒத்துப்போன போது, அத்தகைய சமரசவாத தலைமைகளுக்கு எதிராக சரியான பதிலடியை கொடுத்து, ஈடி ஊழியர்களின் கோரிக்கைக ளுக்காக அகில இந்திய அளவில் தில்லியில் கோரிக்கை மாநாடு ஒன்றையும் நடத்தி போராட்ட திட்டங்களை வகுத்து தந்தவர் போஸ்.
மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக ரயில்வே, தபால் தந்தி உள்ளிட்ட அனைத்துத்துறை ஊழியர்களையும் மேற்கு வங்கத்தில் இணைத்து 3வது ஊதியக்குழு அமைக்கக் காரணமாக இருந்தார்.ஒன்றுபட்ட சங்கத்தில் தலைமையில் இருந்தவர்கள் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டபோது ஒத்த கருத்துள்ள அனைவரையும் அணி திரட்டி சந்தர்ப்பவாத நிலையை மேற்கொண்டவர்களின் நிலை தவறு என்பதை அவர் நிரூபித்தார். புரட்சிகரமான தொழிற்சங்க இயக்கம் என்பது வெறும் பொருளாதார கோரிக்கைகளுக்கு மட்டுமல்லாமல் மக்களை பாதிக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் போஸ். மதச்சார்பின்மையை உயர்த்தி கடை பிடித்தகாரணத்தால் தான் நாடு சுதந்திரம் அடைந்தபோது, வங்கப்பிரிவினையின் போது மேற்கு வங்காளத்தில் இந்து- முஸ்லீம் ஒற்றுமைக்காக உயிரையும் பொருட் படுத்தாது தொழிலாளர்களை திரட்டி தெருவில் இறங்கி துணிச்சலாக செயல்பட்ட வர் போஸ். இந்து முஸ்லீம் இளைஞர்கள் முன்னணியை ஏற்படுத்தி ஒற்றுமையை பாதுகாத்ததோடு மத வெறியர்களிடமிருந்து சிறுபான்மையினரை பாதுகாத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு பிரிவினையை நோக்கிச் சென்றபோது கொல்கத்தாவில் பெருந்திரளாகத் திரண்டிருந்த தொழிலாளர் களிடையே போஸ் உரையாற்றும்போது “இந்துக்களும் முஸ்லீம்களும் சகோதரர்கள். இந்த பிரிவினை எங்கள் நெஞ்சங்களைக் கனக்கவைக்கிறது. பாசத்துடன் நேசத்துடன் பழகிவந்த சகோதரர்கள் பிரியும் இத்தருணத்தில் ஒன்றாக அமர்ந்து பணியாற்றிய இடத்தில் மேஜைகளையும் நாற்காலிகளை யும் பிரிக்க எங்களுக்கு எப்படி மனம் வரும்? ’’ என்று அவர் குறிப்பிட்டபோது கண்ணீர் விடாத தொழிலாளர்களே இல்லை. போனஸ் என்பது பிச்சையல்ல. அது தொழிலாளர்களின் உரிமை என்று அவர் குரல் கொடுத்தபோது சில தொழிற்சங்கத் தலைவர்கள் எள்ளி நகையாடினார்கள். அனைவருக்கும் போனஸ் என்றால் எவருக் கும் போனஸ் இல்லை என்றனர். ஆனால் தொடர்ச்சியான போராட்டம் காரணமாக வரலாறு கே.ஜி.போஸ் கூற்று சரியென நிரூபித்துள்ளது. தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக பல முறை சிறை சென்ற தோழர் கே.ஜி. போஸ் மேற்குவங்க சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி யுள்ளார்.
மார்க்சிய கொள்கைகளின் பால் இறுதிவரை போராடிய அவரை கொடு மையான புற்றுநோய் ஆட்கொண்டிரா விட்டால் மேலும் பல ஆண்டுகள் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடியிருப்பார். உழைப்பாளி மக்களின் முன்னேற்றமே தனது லட்சியமாகக் கொண்டிருந்த போஸ் போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாறு என்றென்றும் தொழிற்சங்க இயக்க முன்னோடிகளுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழும். அந்த வகையில் தொலைபேசித் துறையில் இருந்து ஒய்வு பெற்ற ஊழியர் தோழர் ஆர். விஜயலட்சுமி தொகுத்துள்ள ‘ கே.ஜி.போஸ்- தபால் தந்தி தொழிற்சங்க இயக்கத்தில் ஒரு சகாப்தம்’ என்ற நூல் அனைவரும் படித்து கற்றுணர வேண்டிய நூலாகும்.
 கே. ஜி. போஸ்தபால் -தந்தி தொழிற்சங்க இயக்கத்தின் ஒரு சகாப்தம், ஆர். விஜயலட்சுமி வெளியீடு: பாரதி புத்தகாலயம்7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டைசென்னை - 600 018பக்: 112 விலை ரூ. 60.

பொறுப்பு மாவட்டச் செயலர் தோழர்.ஆர்.ரவிச்சந்திரன் . . .

அருமைத் தோழர்களே!நமது மதுரை BSNLEU  மாவட்டச் செயலர்,எஸ்.சூரியன்  ஒருவாரம் விடுப்பில் செல்வதால், நமது மாவட்ட உதவி செயலர் தோழர். ஆர்.ரவிச்சந்திரன்,அவர்கள் 02.02.2014 முதல் ஒரு வாரத்திற்கு மாவட்டச் செயலர் பொறுப்பில் செயல்படுவார்,அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.உங்கள் அன்புத் தோழன் .........எஸ். சூரியன்.

Thursday, 30 January 2014

பணி நிறைவு - உளப்பூர்வமாக வாழ்த்துகின்றோம்...

          நமது மாநில உதவிச் செயலர்     அருமைத் தோழர்.எம்.நாராயணசாமி அவர்கள் தருமபுரி மாவட்டத்தில் 
31-01-2014 இன்று
பணி நிறைவு பெறுகிறார் ...
 
        
அவரின்
 
பணி நிறைவுக்காலம்
சிறப்புடன் அமைய நமது BSNLEU மதுரை
மாவட்ட சங்கத்தின் சார்பாக         உளப்பூர்வமாக வாழ்த்துகின்றோம்...
--என்றும் தோழமையுடன் எஸ்.சூரியன்.D.S-BSNLEU 

விருதுநகர் மாவட்ட மாநாடு - AIBSNLEA

அருமைத் தோழர்களே ! நமது தோழமை சங்கமாக உள்ள சங்கங்களில் ஒன்றான AIBSNLEA விருதுநகர்  மாவட்டசங்கத்தின்  மாநாடு 28/01/2014-ந் தேதி  மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தோழர்.T.ராதா கிருஷ்ணன் , மாவட்டசெயலராகவும், தோழர்.சின்னமுனியாண்டி,தலைவராகவும்,தோழர்.P.சேகர்,நிதிசெயலராகவும் பொறுப் பெடுத்துக் கொண்டுள்ளனர்கள்.அச் சங்கத்தின்  மாநிலச்செயலர். தோழர். வீரபாண்டியன், மாநிலத்துணைச் செயலர். தோழர்.துரையரசன், தோழர்.VKP, ஆலோசகர்CHQ, தோழர். அருணாசலம் CWC-MEMBER, மற்றும் மதுரை மாவட்டத்தின் AIBSNLEA சார்பாக மதுரை மாவட்டசெயலர்.தோழர்.கருப்பையா உள்ளிட்ட பத்துத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்துள்ளனர். விருதுநகர்  AIBSNLEA மாவட்ட  கிளை சிறப்பாகச் செயல்பட நமது தோழமை பூர்வமான வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .தோழர்.ராதாகிருஷ்ணன்  அவர்கள் குருப் "சி"ஆக பணியாற்றிய காலம் தொட்டு தொழிற்சங்கத்தில் பற்றும்,பிடிப்பும்,செயல்பாட்டு ஊக்கமும்  கொண்டவர் என்பது குறிப்பிடதக்கதாகும். 

Wednesday, 29 January 2014

"தகடூர் தந்த தலைவன் எம்.என்".பணிநிறைவு பாராட்டுவிழா.

அருமைத் தோழர்களே! தபால்-தந்தி துறையில் அடிப்படை பணிபுரியும் காசுவல் லேபர் களின் வாழ்வில் தீப ஒளி ஏற்றிய அருமைத் தோழன் "தகடூர் தந்த தலைவன், "எம்.என்" என்று அனைவராலும் அன்பாய் அழைக்கப்படும் அருமைத்தோழன் எம். நாராயணசாமி,மாநில உதவிச் செயலருக்கு.பணி நிறைவு பாராட்டுவிழா எடுக்கிறது தருமபுரி மாவட்டசங்கம். எம்.தோழன் எல்லா நலன்களும் பெற்று,குடும்பத்தாருடன் பல்லாண்டு வாழ்க, வாழ்க வென வாழ்த்துகிறது மதுரை மாவட்ட சங்கம்......




பார்சிலோனாவில் தோழர் V A N நம்பூதிரி . . .

அனைத்துலக ஓய்வூதியர்களின் கூட்டம், ஸ்பெயின் நாட்டின், பார்சிலோனா நகரில் பிப்ரவரி 5, 6 தேதிகளில் நடைபெற உள்ளது. சர்வதேச ஓய்வூதியர்கள் தொழிற்சங்கத்தைக் கட்டமைப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. உலகத்தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பும் சில  ஓய்வூதியர்கள் அமைப்பும் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக் கின்றன. BSNLEU வின் அகில இந்தியத் தலைவரும், AIBDPA ஆலோசகருமானதோழர். V A N நம்பூதிரி அவர்கள் கலந்து கொள்கிறார்.
மேலும் தோழர். டி.கோபாலகிருஷ்ணன் மற்றும் தோழர் . ஜி .நடராஜன் , அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியம் சங்கத்தின் சார்பாக முறையே தேசிய துணை தலைவர் மற்றும் பொது செயலாளர் , முதல் சர்வதேச காங்கிரஸ் பிரதிநிதிகள் என  தமிழ்நாட்டிலிருந்து  இரண்டு மற்றும் நாட்டில் இருந்து ஒருவர்  தேர்ந்தெடுக்கப்பட  இருக்கின்றன வர்த்தக ஓய்வூதியம் மற்றும் ஓய்வு சங்கங்கள் உலக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பிப்ரவரி5,6ம்நடைபெற உள்ளது.முதன்முறையாக WFTU அமைப்பு இம் முயற்ச்சியை எடுத்துள்ளது.தமிழ்நாடு மற்றும் சென்னை தொலைத்தொடர்பு வட்டங்களில் உள்ள 7,500 உட்பட சுமார் 40,000 பிஎஸ்என்எல் ஓய்வூதியம் பெறுவோர் உரிமைகளை மற்றும் பொதுநல , போராடும் ஒரு அமைப்பு ஏற்படுத்தி ,செயல்பட்டு வருகின்றனர்.  
" நாம் உச்சி மாநாட்டில் விவாதிக்கப்படும்  முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக ஓய்வூதிய சீர்திருத்தங்கள் மூலம் , ஓய்வு பெற்ற நபர்கள் செலவு மீண்டும் குறைத்து பல்வேறு நாடுகளின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள,"திரு.கோபாலகிருஷ்ணன் கூறினார்.ஓய்வு பெறும் வயதை மத்திய அரசு 60 ஆண்டுகள் மற்றும் மாநில அரசு துறைகள் 58 ஆண்டுகள் செய்யப்பட்டது இந்தியாவில் உள்ள நலன்புரி பயன்கள் கிடைப்பது ஓய்வூதிய திட்டங்கள் மற்றும் பிரச்சினைகள் ஒரு முன்னோக்கு வைத்து  ஒவ்வொரு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் ஓய்வூதியம் மற்றும் ஓய்வு நலன்கள் குறித்து  உலக சந்திபில் தமிழ்  மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு செல்ல  இருக்கிறார்கள் அருமை மூத்த தோழர்களின்  வெளிநாட்டு பயணம் சிறக்க நமது BSNLEU  மதுரை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.