Tuesday, 10 February 2015

டெல்லி முடிவுகள் மதவாதத்துக்கு கிடைத்த மரண அடி :

டெல்லி தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பானது மதசார்பின்மைக்கு கிடைத்த வெற்றியாகும். வகுப்புவாத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசிய  பாஜ தலைவர்களாலேயே பாஜ வீழ்த்தப் பட்டதுடெல்லியில் தற்போது நடந்து முடிந்துள்ள சட்ட மன்ற தேர்தல் தேசம் முழுவதும் உள்ள மக்களுக்கு ஒரு வரலாற்று  செய்தியை முன்னிறுத்துவது போல் உள்ளது. குறிப்பாக மத்தியில் பாஜ ஆட்சியில் இருந்த போதும், ஆள் பலம், படை பலம், பண பலம் இருந்த போதும் மக்களின் முடிவு  எப்போதும் நல்லிணக்கத்திற்கும், மதசார்பின்மைக்கும் கொடுக்கும் ஆதரவுதான் இந்தியாவில் மிகவும் உறுதியானது என்பதை நிரூபித்துள்ளது.டெல்லியில் தேர்தல் அறிவிக்கப்பட்ட போதும் சரி, அதற்கும் முன்பும் சரி BJP தலைவர்கள் மிகவும் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி நாடு முழுவதும் பரபரப்பை  ஏற்படுத்தி வந்தனர். நாடு முழுவதும் உள்ள மதசார்பற்ற சக்திகள் இதுகுறித்து பிரதமர் மோடியின் கவனத்திற்கு எடுத்து சென்ற போதும் வகுப்புவாத உணர்வுகளை  தூண்டும் வகையில் பேசிய தலைவர்களின் மீது பெரிய அளவில் நடவடிக்கை எதுவும் பாயவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு மாலேகான் குண்டு வெடிப்பில்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாத்வி பிரக்யா தாகூர் பரோலில் வெளியே வந்தார்மத்திய பிரதேசம் போபாலில் உள்ள தனது ஊரில் மரண படுக்கையில் இருக்கும் தாயாரை சந்திக்க வந்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த காங்கிரஸ்  ஆட்சியில் தான் இந்து தேசிய வாதிகளை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தினர். ஆனால் அவர்கள் தேசியவாதிகள். தற்போது பிரதமர் மோடியும் மிக சிறந்த  தேசியவாதி. எனவே எனது வழக்கில் ஒரு சிறந்த முடிவை எடுப்பார் என்றார்.ஆனால் இந்து மதமாக இருந்தாலும் சரி, வேறு எந்த மதமாக இருந்தாலும் சரி இந்திய  வரலாற்றில் மதத்தின் மீதான தீவிர பற்றை மக்கள் ஒருபோதும் சகித்து கொண்டதில்லைஇதனால் தான் நேரு இந்திய பிரதமராக முதன்முறையாக பொறுப்பேற்றுக் கொண்ட போது இந்தியாவின் அரசியல் சாசனம் மதசார்பற்ற கொள்கையின்  அடிப்படையில் உருவாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதிலும் சுதந்திரத்தின் போது ஏற்பட்ட பிரிவினையின் வன்முறை, இந்திரா காந்தி சுட்டுக்  கொல்லப்பட்ட போது ஏற்பட்ட கலவரம் போன்றவற்றின் நேரடி பாதிப்பாளர்களாக டெல்லி வாசிகள் இருந்து வருகின்றனர்.இதனால் தானோ என்னவோ எப்போது BJP  போன்ற கட்சிகளால் டெல்லியில் ஒருபோதும் ஆட்சியை பிடிக்க முடிந்ததில்லை. கடந்த 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி விடைபெற்ற போதும் சரி, அங்கு BJPவை  அமர வைக்க டெல்லி வாசிகள் விரும்பவில்லை என்பதை இந்த தேர்தல் பட்டவர்த்தமாக தெரிவித்துள்ளது.தேர்தலுக்கு முன்பு BJPவுக்காக அங்கு பிரசாரம் செய்த மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பேசுகையில், பிரதமர் மோடியை ஏற்றுக் கொள்ளாதவர்கள்  பாகிஸ்தானுக்கு ஓடுங்கள், இந்திய மக்கள் அனைவரும் ராமனின் பிள்ளைகள் என்று பேசினார். இதனால் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரே முடங்கியதுஆனாலும்  நிரஞ்சன் ஜோதி மீது பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை. அதே போல் BJP எம்பி மகராஜ் பேசுகையில் நிறைய பெண்களை திருமணம் செய்து  கொள்வது, வதவதவென்று பிள்ளைகளை பெற்றுக் கொள்வது நமது கலாசாரம் இல்லை, இந்து பெண்கள் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று  பேசினார்இதுவும் BJPக்கு பெரிய அளவில் நாடு முழுவதும் அதிருப்தியை சம்பாதித்து கொடுத்தது. ஆனால் வகுப்பு துவேஷத்தை பேசியும் அவர் மீதான நடவடிக்கை எதையும்  BJP செய்யவில்லை. இதனால் அவர் ஒருபடி மேலே சென்று கோட்சே ஒரு தேசபக்தர், அவருக்கு கோயில் கட்ட வேண்டும் என்றார். டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு  ஆதரவு அளிப்பதாக டெல்லி இமாம் அறிவித்தார். ஆனால் இதனை கெஜ்ரிவால் மறுத்துவிட்டார். இதுகுறித்து கெஜ்ரிவால் கூறுகையில், இமாம் தனது மகனின்  பதவியேற்பு விழாவுக்கு இந்திய பிரதமரை அழைக்காமல், பாகிஸ்தான் பிரதமரை அழைத்தார். எனவே அவரது ஆதரவை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுத்தார்.இதனால் டெல்லி மக்கள் மத்தியில் ஆம் ஆத்மி மற்றும் கெஜ்ரிவால் மீதான மரியாதை மேலும் அதிகரித்ததுவகுப்பு வாதம் மற்றும் தீவிரவாதம் போன்றவற்றின் கருப்பு தடயங்களை சந்தித்து வந்த டெல்லி மக்கள் இதில் இருந்து மீள்வது குறித்து எப்போதும் விரும்பினர்மேலும் விஐபி கலாசாரம், அமைச்சர்கள் வருகையால் நெருக்கடிக்கு உள்ளாகும் அன்றாட வாழ்க்கை, மின்கட்டண உயர்வு, தண்ணீர் மாபியாக்களின் அட்டூழியம்டெல்லி நகரை உருவாக்க அன்றாடம் உழைக்கும் மக்களுக்கு ஒண்டுவதற்கு கூட ஒரு இடம் இல்லாமல் தவித்தது இவை அனைத்தையும் ஆம் ஆத்மி நிச்சயம் செய்து  தரும் என்று டெல்லி மக்கள் நம்பினர். இவை அனைத்தும் சேர்ந்துதான் தற்போது டெல்லியில் ஒரு அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. எனவே இந்த  தேர்தல் மதவாதத்திற்கு மக்கள் கொடுத்த மரணஅடி.மதசார்பின்மைக்குமக்கள்கொடுத்தகவுரம்.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மையிலேயே இத் தேர்தல் முடிவு ஒரு திருப்பு முனைதான் ஐயா