Tuesday 3 February 2015

ஒன்றுபடுத்தினார் காந்தி கொன்று குவித்தான் கோட்சே . . .


இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக அனைத்து மதத்தினரையும் இணைத்துப் போராடினார் காந்தி. அதனால் தான் அவரை நாட்டின் தேசத் தந்தை என்றனர். காந்தி இருந்த போது இப்போது உள்ளது போன்று அதிகமான ஊடகங்கள் இல்லை. அவர் பேசும் பொதுக்கூட்டங்களில் அவரது ஆங்கில உரையை ஆங்காங்கே 50க்கும் மேற்பட்டவர்கள் மொழிபெயர்த்து பேசுவார்கள். அவர் எந்த மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்தினாரோ அந்த மைதானங்களுக்கு காந்தி மைதானம் என்று பெயர் சூட்டி அழைக்கிறார்கள்.அவர் தனது போராட்டத்திற்கு நிதி கேட்பார். பெண்கள் தங்கள் நகைகளை கழட்டி வீசுவார்கள். அவர் ரயிலில் பயணம் செய்தார். ரயில் சென்ற பிறகு ரயில் தண்டவாளத்தை தொட்டுக் கும்பிட்டார்கள். அப்படி ஒரு வெறித்தனமான பக்தி கலந்த மரியாதை வைத்திருந்தனர். அதனால் தான் உலகையே அடக்கி ஆண்ட வெள்ளை ஏகாதிபத்தியம் காந்தியைக் கண்டு மிரண்டது. மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை செய்தது. ஆனால் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் ஒன்றுபடுத்தி சுதந்திரப் போராட்டத்தில் காந்தி ஈடுபடுத்தினார். இந்த செயல் வெள்ளையரை மட்டுமல்ல மதவெறியர்களையும் அச்சுறுத்தியது. இதனை விரும்பாததால் அன்றைய இந்துமகா சபா(இன்றையRSS)அமைப்பைச் சேர்ந்த நாதுராம் கோட்சே காந்தியை சுட்டுக் கொன்றான்.அன்றைக்கு இந்தியாவிற்கு வியாபாரம் செய்ய வாஸ்கோடாகாமா வந்தான். இங்கு விளையும் மிளகு,ஏலம் வாசனை திரவியங்கள் குறித்து தனது நாட்டிற்கு தகவல் கொடுத்தான். உடனே இந்தியாவிற்கு புறப்பட்ட கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டறிந்தான். அமெரிக்க செவ்விந்தியர்களை அழித்தான். இன்றைக்கு அந்த கொலம்பஸ் போல அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு ஒபாமா வந்து சென்றுள்ளார். இதை மோடிக்கூட்டம் வரவேற்றுள்ளது. ஒபாமாவும் மோடியும் மாறி மாறி டீக்குடித்துக் கொண்டு நமக்கு அல்வா கொடுத்து விட்டார்கள்.-என்.நன்மாறன் (திண்டுக்கல்லில் காந்தி நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு நடத்திய கருத்தரங்கில் பேசியதிலிருந்து...)

No comments: