Friday, 15 November 2013

“தமிழக பண்பாட்டுச் சூழல்” புத்தக வெளியீட்டு விழா . . .

பேச்சுதாய்மொழி வழிக் கல்வியின் முக்கியத் துவத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்று விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின்தமிழக பண்பாட்டுச் சூழல்புத்தக வெளியீட்டு விழாவில் பேசும் போது வலியுறுத்தினார். பாரதியின் தேச விடுதலை பாரம் பரியத்தையும், பாரதி தாசனின் சமூக விடுதலை பாரம்பரியத்தையும், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் உழைப்பாளி மக்களின் போராட்ட பாரம்பரியத்தையும் தமுஎகச முன்னெடுத்துச் செல்கிறது.யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் அந்தக்காலத்திலேயே மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பாடங்கள் தமிழ்மொழியில் இருந்தன.
அதனை பெற்றாவது இங்கே கற்பிக்க வேண்டும் என்று அப்போதே மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சட்டமன்றத்தில் வலியுறுத்தினேன். அனைத்து நிலைகளிலும் தமிழ் மொழியே பயிற்று மொழி யாக கொண்டு வர வேண்டும். அரசு நினைத்தால் அதனை செய்யலாம்.ஆய்வுகளை தாய்மொழியில்தான் எளிதாக புரிந்து கொள்ள முடியும். தாய்மொழியில் படித்தால்தான் அறிவு பெருகும்.மதவெறிப் பிடித்த பாசிச ஆர்எஸ்எஸ், அவர்களுடைய அரசியல் கட்சிகள் 2014 தேர்தலில் ஆட்சியை கைப்பற்றி இந்து அரசு அமைக்கவும், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டவும் முயற்சிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கையை கடைப் பிடிக்கிறது.
ஏகபோக முதலாளிகளும், ஆளும் வர்க்கமும் இந்திய வளங்களை சூறையாடுகின்றன. இந்த இரண்டு பேராபாயத்தை தடுக்க இதற்கெதிரான முற்போக்கு, இடதுசாரி, ஜனநாயக சக்திகள் அணியாக ஒன்று திரள வேண்டும்.பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற பிரச்சாரத்திற்கு இஸ்லாமிய மக்கள் இரையாகக் கூடாது.பெரும்பான்மை மதவெறிக்கு சிறுபான்மை மதவெறி தீர்வல்ல. காந்தியின் வழியில் வளர்ந்தவர் வல்லபாய் பட்டேல். காந்தியை கொன்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழியில் வளர்ந்தவர் மோடி. சிலை வைப்பதன் மூலம் தங்களது மதவெறி நடவடிக்கைகளுக்கு வல்லபாய் பட்டேலை பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். ஜனநாயக சக்திகள் அணியாக ஒன்று திரள வேண்டும்.

Thursday, 14 November 2013

புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம். . .

அருமைத்தோழர்களே! அனைவருக்கும் வணக்கம்...
நமது BSNLEU சங்கத்தின் 7வது மாவட்ட மாநாட்டில் தேர்ந்து எடுக்கப்பட்ட நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் 14.11.2013 மதியம் 2 மணிக்கு மேல் மதுரை   GM அலுவலத்தில்,நமது  பொதுமேலாளர் அவர்களிடம் நடைபெற உள்ளது.அவ்வமயம் நமது மாவட்ட சங்க நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.அனைத்து நிர்வாகிகளுக்கும் ஏற்கனவே,செய்தி மொபைல் முலம் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . புதிய மாவட்ட செயற்குழு கூடுதல் உற்சாகத்துடன் தனது சங்க பணிகளை முன்னெடுத்து செல்லும்
.--வாழ்த்துக்களுடன்,எஸ்.சூரியன்-மாவட்டசெயலர். 

மாநில சங்க செய்தி. . .


ஒபாமாவின் செல்வாக்கு சரிந்துள்ளதாக கருத்துக்கணிப்பில். .

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் செல்வாக்கு சரிந்துள்ளதாக ஒரு கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துக்கணிப்பு
அமெரிக்க ஜனாதிபதியாக தொடர்ந்து இரண்டாவது முறையாக, ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒபாமா (வயது 52). ஆனால் சமீப காலமாக ஒபாமாவின் செல்வாக்கு சரிவு கண்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.ஒபாமாவின் தற்போதைய செல்வாக்கு நிலவரம் எப்படி என்பது குறித்து அங்குள்ள குயின்னிபியாக் பல்கலைக்கழகம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது. நாடு முழுவதும் கடந்த 6ந் தேதி தொடங்கி 11ந் தேதி வரை நடந்த சர்வேயில் 2,545 பதிவு செய்த வாக்காளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
செல்வாக்கு தடாலடி சரிவு
இந்த கருத்துக்கணிப்பின் முடிவில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒபாமாவின் செல்வாக்கு தடாலடியாக சரிவு கண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 54 சதவீதம் பேர் ஒபாமாவின் பணிகளை ஏற்கவில்லை. 39 சதவீதம் பேர் மட்டுமே ஒபாமாவின் பணிகளில் திருப்தி தெரிவித்துள்ளனர்.ஒபாமாவின் சரிவு, இதே காலக்கட்டத்தில் முன்னாள் ஜனாதிபதியும், குடியரசு கட்சி தலைவருமான ஜார்ஜ் புஷ் கண்ட சரிவுக்கு சமமாக அமைந்துள்ளது என வாஷிங்டன் தகவல்கள் கூறுகின்றன.
.....தினத்தந்தி

Wednesday, 13 November 2013

செய்தி துளிகளில் சில....

செய்தி குறிப்பு . . . 

தோழியர் K .K .விஜயா ( SR TOA கேரளா மாநிலம்)--- நெகிழ்ச்சி.... 
   நவம்பர் 6 முதல் 8 வரை நமது BSNLEU  கேரள மாநிலச்சங்கத்தின் 7 -வது மாநில மாநாடு கோட்டயத்தில் நடைபெற்றது. நமது பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார். அதற்குப்பின்னர் தோழர் ,தோழியர்களுக்கு சந்தேகங்கள் ,விளக்கங்கள் கேட்கலாம் என வழக்கம்போல் அறிவிக்கப்பட்டது. பலரும் தங்களது சந்தேகங்களை,விளக்கங்களை சீட்டில் எழுதி கொடுத்தனர். அதில் ஒரு சீட்டில் எழுதி இருந்ததை நமது பொதுச்செயலர் முகமலர்ச்சியோடு படிக்கிறார். அக்கடித வாசகம் ....
     தோழரே!,வணக்கம்.. என் மொத்த மாத சம்பளம் இப்போது அரை லட்சத்தை தாண்டிவிட்டது. நான் கனவில் கூட ஒரு நாள் என் சம்பளம்  அரை  லட்சத்தை தாண்டும்  என்று என் வாழ்வில் எதிர் பார்த்தது இல்லை . பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தால்  மட்டுமே இதை சாத்தியமாக்க  முடிந்தது. எனவே,BSNL ஊழியர்களின் பாதுகாவலன்,மற்றும் BSNL நிறுவன பாதுகாவலன் நமது BSNLEU சங்கத்திற்கு என்னை போன்ற அணைவரும் என்றென்றும் நன்றி கடன் பெற்றுள்ளோம்.
 "காஸியாபாத் பொதுமேலாளர் இடமாற்றம்
நவம்பர் 16, 2012-ல் யுனைட்டெட் போஃரத்தின் சார்பில் நாம் நடத்திய வேலைநிறுத்தத்தின்  காரணமாகவும் நமது மத்தியசங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாகவும் நமது  BSNL ஊழியர்சங்கத்தின் காஸியாபாத் மாவட்டசெயலர் தோழர் சுகேந்தர் பால் சிங் கொலையில் தொடர்புடைய காஸியாபாத் பொது மேலாளர் அதேஷ் குமார் குப்தாவை இவ்வளவு கால தாமதத்திற்கு பிறகாவது  கார்ப்பரேட் நிர்வாகம் இடமாற்றம் செய்துள்ளதே!
 விடுமுறை நாள் மாற்றம்      
                                     மொஹரம்  பண்டிகைக்கான  BSNL விடுமுறை 14-11-2013 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்பொழுது 15-11-2013 (வெள்ளி கிழமைஎன மாற்றப்பட்டு டெல்லி கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள நமது (CCM) முதன்மை பொது மேலாளர் அலுவலகமும்,15-11-2013 விடுமுறைக்கான உத்தரவிட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம். 
TTA தேர்வு முடிவுகள் . . .
 ஏற்கனவே,TTA தேர்வு எழுதி நமது மாவட்டம் உள்ளிட்ட ஒரு சில மாவட்டத்திற்கு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த TTA தேர்வு முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது நமது  மதுரை மாவட்டத்தில் கீழ்க்கண்ட தோழர்கள் TTA ஆக தேர்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு நமது  BSNLEU மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக் களையும் பாராட்டுக் களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
1. தோழர். R.நாகேந்திரன், Sr.TOA, உசிலம்பட்டி
2.    “      R.கனகராஜ், Sr.TOA, தெப்பக்குளம், மதுரை
3.    “      A.மருதுமணிகண்டன், Sr.TOA, சோழவந்தான்
4.    “      V.தங்கவேல், TM, திண்டுக்கல் 
5.    “      P.ரிச்சர்டு, Sr.TOA,தல்லாகுளம் , மதுரை
இவர்கள் அனைவருக்கும் எதிர்வரும் 25.11.2013 அன்று சென்னையில் TTA பயிர்ச்சி நடைபெற உள்ளது. 
---என்றும் தோழமையுடன் 
எஸ். சூரியன்,மாவட்டசெயலர்.

Tuesday, 12 November 2013

நமது தோழமை பூர்வமான வாழ்த்துக்கள்...

AIBSNLEAசங்கத்தின்  அகிலஇந்திய மாநாடு நாசிக் நகரில் நடைபெறுகிறது,அம்மாநாட்டில் நமது BSNLEU பொதுசெயலர் தோழர்.P. அபிமன்யு அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது FORUM OF BSNL சங்கங்கள் சாதித்தவற்றை நினைவு கூர்ந்தார்.மேலும் நமது ஒற்றுமையை உயர்த்திபிடித்து  வலுப்படுத்த வேண்டிய அவசியத்தையும்,சுட்டி காட்டினார்.BSNL-லில் பணி கலாச்சாரத்தை நாம் மேம்படுத்தவேண்டிய அவசியத்தையும்,அதே நேரத்தில் அரசின் தனியார்மய கொள்கைக்கும்,பொது துறைக்கு எதிரான அரசின் நடவடிக்கைக்கும் எதிராக நாம்  அனைவரையும்  இணைத்து போராடவேண்டிய கட்டாயத்தையும் சுட்டி காட்டினார்.AIBSNLEA அகிலஇந்திய மாநாடு எல்லாவகையுலும் வெற்றி பெற நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.

நமது BSNLEU மாவட்ட மாநாடு குறித்து சாத்தாவு ....


Sunday, 10 November 2013

திண்டுக்கல்..திருப்புமுனை ....மாநாடு...

திண்டுக்கல்..திருப்புமுனை ....மாநாடு...

அருமைத் தோழர்களே! அனைவருக்கும் வணக்கம்...  மதுரை மாவட்ட சங்கத்தின் 7வது மாவட்ட மாநாடு திண்டுக்கல்லில் மிக மிக சீரும் சிறப்புமாக நடைபெற்றது.முதலில் அனைத்து வழிகளிலும் சிறப்பாக மாநாட்டை நடத்திக் கொடுத்த திண்டுக்கல் மாவட்ட  தோழர்களுக்கு,மாவட்ட சங்கம் உளப்பூர்வமான வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் உரித்தாக்குகிறது. அடுத்தபடியாக மாநாட்டை வரவேற்புக்குழு தலைமை பொறுப்பு ஏற்று சிறப்பித்த மரியாதைக்குரிய மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தோழர். K. பாலபாரதி MLA, அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக் களையும், நன்றியையும் உரித்தாக்குகிறோம். மேலும் நமது அழைப்பினை ஏற்று வருகை புரிந்து சிறப்புரை வழங்கிய,CITUவின்அகிலஇந்திய நிர்வாகி தோழர்.பா.விக்ரமன் அவர்களுக்கும், திருமிகு.S.E. ராஜம் ITS, GM-BSNL,மதுரை அவர்களுக்கும், நமது BSNLEU மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள், A.பாபு ராதாகிருஷ்ணன்,-M.நாராயணசாமி,-C.பழனிசாமி,-C.செல்வின்சத்தியராஜ்,-   S.ஜான் போர்ஜியா ஆகியோருக்கும்,நமது BSNLEU  மாநாட்டு   பேரணியை துவக்கிவைத்த திரு.சோலை M. ராஜா அவர்களுக்கும்,வாழ்த்துரை வழங்கிய தோழர்கள்,N.சுரேஷ்குமார்,AIIEA,- S.சிவகுருநாதன்,NFTE,- J.பால சுப்ரமணியன்,AIBSNLEA,- L.கண்ணன்-WRU,-முபாரக்அலி-TNGEA, -N.சோணைமுத்து,TNTCWU  ஆகியோருக்கும்,தேசியக் கொடியை ஏற்றிவைத்த தோழர்.K.R.கணேசன்,உள் ஆட்சிதுறை ஊழியர்கள் சங்கத்தின் பொதுசெயலர் அவர்களுக்கும், நமது BSNLEU பேரியக்கத்தின் செங்கொடியை ஏற்றிவைத்த நமது மாவட்டசங்கத்தின் உதவி செயலர் தோழர்.G.K.வெங்கடேசன் அவர்களுக்கும்,நமது நன்றிதனை உரித்தாக்குகிறோம்.
நமது BSNLEU மதுரை மாவட்ட பேரணி செய்தி தினமலர்  பத்திரிகையில் 






























மாநாட்டின் சிறப்புகளில் சில...
  • மாநாட்டு பேரணியில் 100 க்கும் மேற்பட்ட மகளிர் தோழர்கள், ஒரே மாதிரியான சீருடை உடன் பங்கேற்றது மிக மிக சிறப்பம்சம் ஆகும்
  •  600க்கும் மேற்பட்டோர்   திண்டுக்கல் முக்கிய சாலைகளில் கோரிக்கைஅட்டை முழக்கங்களுடன் செங்கொடி ஏந்தி சென்றது நகரின் அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்தது 
  • தலைவர்கள்,அதிகாரிகள்,தோழமைசங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள்  இப்படி அனைவரின்   பங்கேற்பு மாநாட்டிற்கு சிறப்பு சேர்த்தது
  • இரண்டுநாட்கள் மாநாடு,சார்பாளர்கள்/பார்வையாளர்கள் சிறப்பம்சம்.
  • மாநாட்டு அறிக்கை ஏகமனதாக அனைவராலும் பாராட்டப்பட்டது.
  • இரண்டு நாட்கள் மாநாட்டில் அசைவ,மற்றும் சைவ உணவை அளவு கடந்த அன்போடு உபரிசத்த விதம் பாராட்டுக்குரியது
  • அனைத்திற்கும் மேலாக  ஒன்றுபட்ட மாவட்டநிர்வாகிகளை மாநாடு தேர்ந்து எடுத்தது மிக,மிக சிறப்பு அம்சமாகும்  
  • இம்மாதம் இலாக்கா பணிநிறைவு பெறும் தோழர் G.K.வெங்கடேசன் அவர்களுக்கு பாராட்டு விழா. 
  • மத்திய சங்கத்திற்கு ரூ. 50,000/-மும்,  மாநில சங்கத்திற்கு  ரூ. 25,000/-மும் நன்கொடையாக வழங்கப்பட்டது.
  • தோழர் H.ஸ்ரீராமன் TM(O)-CBM அவருக்கு ரூ. 10,000/- வழங்கப்பட்டது.

மாநாட்டில் தேர்ந்துஎடுக்கப்பட்ட நிர்வாகிகள் -மாநில சங்க நிர்வாகிகளுடன் 

                                                               
மாநாட்டின் துவக்க உரை நிகழ்த்துகிறார் தோழர்.A.பாபு ராதாகிருஷ்ணன் ACS-BSNLEU

மாநாட்டின் கருத்தரங்கத்தில் தோழர்.பா.விக்ரமன்.CITU கருத்தாழமிக்க உரை 

மாநாட்டை ஒட்டி நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட மகளிர் ஒரு பகுதி சீருடையில் 

மாநாட்டு அரங்கில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதி 
மாநாட்டு பேரணியை நமது சங்க கொடி அசைத்து  துவக்கி  வைத்தார் திரு.சோலை.M.ராஜா 

Thursday, 7 November 2013

நமது மாவட்ட மாநாடு குறித்து மாநில சங்க செய்தி . . ..

அருமைத் தோழர்களே! அனைவருக்கும் வணக்கம்...





-என்றும் தோழமையுடன் 
  எஸ்.சூரியன் ..மாவட்டசெயலர்.