Tuesday, 6 May 2014

ஆப்கான் நிலச்சரிவில் ஒரு கிராமமே புதையுண்டது . . .

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள படாக்ஸான் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு கிராமமே புதைந்துள்ளது. இதுவரை 350 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 2000க்கும் அதிகமானவர்கள் மண்ணில் புதைந்துள்ளதாக அஞ்சப்படுகிறது.ஆப்கானிஸ்தானின் பதக்சான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 300 வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில் 350 பேர் வரை உயிரிழந்தனர். மேலும் என்றும் அங்கு வசித்த 2000 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.இது குறித்து பதக்சான் மாகாண கவர்னர் ஷா வலியுல்லா அதீப் கூறுகையில், கடுமையான மழை காரணமாக மலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. மலை அடிவாரத்தில் இருந்த 300 க்கும் மேற்பட்ட வீடுகள் இந்த நிலச்சரிவில் மண்ணில் புதைந்துள்ளன. இதில் வசித்த சுமார் 2000க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. இதில் மொத்தம் உள்ள வீடுகளில் 75 சதவீத வீடுகள் புதைந்துள்ளன என்றார்.மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று முழுவீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் போதுமான கருவி மற்றும் மண் தோண்டும் கருவிகள் இல்லாததால் அவர்களால் வேகமாக பணியைச் செய்ய முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். நிலச்சரிவு ஏற்பட்ட மாகாணம் இந்து குஷ் மற்றும் பாமீர் மலைத்தொடரிலும், சீனாவின் எல்லையிலும் அமைந்துள்ளது. மண் சரிவில் புதந்திருப்பவர்களை மீட்க அதிக நேரம் எடுத்துக்கொண்டதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

பிரச்சார மேடையில் ராமர் படம்:மீண்டும் சர்ச்சையில் மோடி...

உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் நரேந்திர மோடி. மோடி பிரச்சாரம் செய்த மேடையின் பின்னணியில் ராமர் படம் இருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.பிரச்சாரத்தின் போது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத காங்கிரஸ் கட்சிக்கு ராமர் பிறந்த பூமியில் வசிக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என மோடி பேசினார் .ராமர் கோயிலை மீண்டும் கட்டுவது குறித்து நேரடியாக பேசாவில்லை. தேர்தலில் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சிகளை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என மோடி வலியுறுத்தியதோடு ராமர் பிறந்த பூமியில் பிறந்த மக்கள் வாழ்க்கையை இழந்தாலும் வார்த்தை தவற மாட்டார்கள் என மறைமுகமாக ராமரை மேற்கோள்காட்டி பேசினார்இந்நிலையில், மேடையின் பின்னணியில் ராமர் படம் இருந்தது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது. இத்தகவலை .பி. தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா உறுதிபடுத்தியுள்ளார்.
அண்மையில் குஜராத் மாநிலம் காந்திநகரில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நரேந்திர மோடி பாஜக தாமரை சின்னத்தை கையில் வைத்துக் கொண்டு பேசியது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

Monday, 5 May 2014

மே-5 தோழர் காரல் மார்க்ஸ் பிறந்த நாள்

உலகின் தலைசிறந்த காதல்நட்புசித்தாந்தம் எல்லாம் ஒரே ஒருமனிதன் வசம் என்றால்,காரல்மார்க்ஸுக்கு தான் அப்பெருமைபோய்ச்சேரும். போராட்டம்வறுமைவலிகள்பசி இவையேவாழ்க்கையின்ஒவ்வொரு அங்குலத்திலும்நிறைந்திருந்தபோதுஎளியவர்களும்,பாட்டாளிகளும்எப்படிதுன்பத்தில்இருந்துவிடுதலை பெறுவது என ஓயாமல் சிந்தித்தஅசாதாரணமான மனிதர் அவர்.ஜெர்மனியில் மே 5,-1818 இல்பிறந்த மார்க்ஸு க்கு அவரின்  அப்பா எல்லையற்ற சுதந்திரம்தந்தார் மகனின் போக்கிலேயே இருக்க விட்டார்.மார்க்ஸ்இறக்கும் வரை அப்பாவின் புகைப்படம் சட்டைப்பையில்இருக்கிற அளவுக்கு இருவருக்குமான பந்தம் உறுதியானது.தத்துவ ஞானி  ஹெகலைஆதரித்த குழுவில் தன்னையும்இணைத்துக்கொண்ட மார்க்ஸ்,மதத்தைமறுத்தார்.மதம் என்பதுமனிதத்தன்மைஅற்றது,அது போதைப்பொருளை போன்றதுஎனகடுமையான விமர்சனங்களை ,அவரைவிட 7 வயது முதிர்ந்த ஜென்னியிடம் காதல் பூத்தது.கரடுமுரடான சுபாவம் கொண்டஏழ்மையில் உழன்றமார்க்ஸை  அரச குல நங்கையான ஜென்னி மனதார நேசித்தார்அவர்களின் காதல் பல வருடங்கள் காத்திருப்புக்கு பின் கனிந்தது.அப்பொழுதுதான் மார்க்ஸ் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர் ஆகியிருந்தார்அவரின் எழுத்துகள் பாட்டாளிகள்எப்படிமுதலாளிகளால்சுரண்டப்படுகிறார்கள் என தெளிவுப்படுத்தின எப்படி சிலரிடம் செல்வம் தேங்கி  கிடக்கிறதுஎன்பதையும் விளக்கினார் .எல்லாவிதஅடக்குமுறைகளையும் பாட்டாளிகள் தகர்த்தெறிய ஒன்று சேரவேண்டும்எனஅவரின்எழுத்துகளின் மூலம்உத்வேகப்படுத்தினார்.ரஷ்ய அரசு நாடு கடத்தியது.இவரின் சிந்தனை வேகத்தைபார்த்து பிரான்ஸ் அரசுஒரு நாளுக்குள்  நாட்டைவிட்டுவெளியேற வேண்டும் என்றது. பெல்ஜியத்தில் போய் குடியேறினார் மார்க்ஸ்நிலைமை இன்னமும் மோசம்எல்லா இடங்களுக்கும்ஜென்னி  புன்னகைமாறாமல்உடன்வந்தார்.
ஒரு முறை விபசார விடுதியில் ஒரு நள்ளிரவு முழுக்க சந்தேகப்பட்டு போலீஸ் அடைத்து வைத்த போதும்கூட, சின்ன முகச்சுளிப்பை கூடமார்க்ஸை நோக்கி காட்டாத மங்கை அவர்.எங்கெல்ஸை ஏற்கெனவே ஒரு முறை சந்தித்திருந்த  மார்க்ஸ் மீண்டுமொரு முறை சந்தித்தபொழுது எண்ணற்ற தளங்களில் தங்களின் சிந்தனை  ஒத்திருப்பதை கண்டார்இவரைக் காப்பதை தன் வாழ்நாள் கடமையாக செய்தார்ஏங்கல்ஸ்.வருடத்திற்கு ஒரு  குறிப்பிட்ட தொகையை அனுப்பிக்கொண்டே இருந்தார்.இங்கிலாந்தின் நூலகங்களில்தவங்கிடந்துமூலதனத்தை உருவாக்கினார்கள்.ஒரு பொருளை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால்,அதற்கு ஒரு விலை கொடுத்தே அதை வாங்குவீர்கள்.அந்தப் பொருளை பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகிதயாரிக்கும் தொழிலாளிக்கு,நீங்கள்  கொடுக்கும் பணம் போய்சேர்கிறதா என்றால் இல்லை.மூலதனத்தை  போட்டமுதலாளி ஒட்டுமொத்த லாபத்துக்கும் சொந்தக்காரர் ஆகிறார்.அப்படியில்லாமல்மூலத்தை உழைக்கிறவனுக்கும்,பிரித்து தரவேண்டும்  என்பதே அதன் சாரம்.உலகின் பொருளாதரத்தை பற்றிமார்க்ஸ் எழுதியகாலத்தில்,வீட்டு நிலைமை  ஏகத்துக்கும் மோசமானது.பிள்ளைகள் மாண்டு போனார்கள்."பிறந்தபொழுது உனக்கு தொட்டில் கட்ட காசில்லை;இப்பொழுது அடக்கம் செய்ய காசில்லை!" எனஜென்னி கண்ணீர்  விடுகிற அளவுக்குநிலைமை மோசம்...பசியால் நொடிந்து போய் மார்பிலிருந்து ரத்தம்சொட்ட பிள்ளைக்கு பாலூட்டிய  கொடுமையிலும்,மார்க்ஸைஅன்போடு காத்தார் ஜென்னிஜென்னி இறந்த இரண்டு வருடங்களில் ஏற்கனவே மனதளவில் இறந்து போயிருந்தமார்க்ஸ்மீளாத் துயில் கொண்டுவிட்டார்.காரல் மார்க்ஸ் கண்ட கனவான பாட்டாளிகளின் புரட்சி  அடுத்தநூற்றாண்டில் பல நாடுகளில்காட்டாற்று வெள்ளம் போல பொங்கிப் பெருகிற்று.சூரியனின் கதிர்கள் போல உலகம் முழுக்க கம்யூனிசம் நீக்கமற மக்களின்சிந்தனையில் புகுந்தது.“வர்க்க பேதமற்றபொருளாதாரஏற்றத்தாழ்வுகள்  இல்லாத  உலகை கட்டமைக்கும் அருங்கனவு கண்ட நாயகன்மார்க்ஸ் ,மனிதனாக இறந்தார்
காலத்தை வென்று அவரின்  பெயர் என்றும் நிலைத்து நிற்கும்"  

Friday, 2 May 2014

திருமண கனவோடு ஊருக்கு செல்லும்போது சுவாதி மரணம்!

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு 

நேற்று (1.5.2014) காலை ஏழரை மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் கவுகாத்தி - பெங்களூர் எக்ஸ்பிரசில் குண்டு வெடித்து ஒருவர் இறந்துள்ளதாகவும், பலர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்த பயங்கரவாத செயலை  நமது BSNLEU சங்கம்  வன்மையாக கண்டிக்கிறது.குண்டுவெடிப்பு வன்முறைச் செயலுக்கு காரணமானவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துகிறது. மேலும் காயமுற்றவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் நமது சங்கம் வலியுறுத்துகிறது.
திருமண கனவோடு, முதல் மாத சம்பளத்தில் குடும்பத்தினருக்கு பரிசு பொருட்களை வாங்கி கொண்டு ஊருக்கு செல்லும்போது சுவாதியை மரணம் தழுவிக் கொண்டுள்ளது.கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் பலியான சுவாதியின் தந்தை ராமகிருஷ்ணன் ஒரு விவசாயி. அவரது மனைவி காமாட்சி தேவி. இவர்கள் குண்டூரில் குடும்பத்துடன் வசித்து வருகின் றனர்ஹைதராபாத்தில் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு பெங்களூருவில் உள்ள தனியார்  நிறுவனத்தில்  மென் பொறியாளராக  கடந்த  மாதம் தான் பணிக்கு சேர்ந்துள்ளார் 24 வயதான சுவாதி.அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததால் ஒருமாத விடுப்பில் சென்னை வழியாக குண்டூருக்கு கவுகாத்தி ரயிலில் பயணம் செய்துள்ளார்தனது பாட்டியிடம் நேற்றிரவு தொலைபேசியில் பேசிய சுவாதி, முதல் மாத சம்பளத்தில் பரிசுப் பொருட்களை வாங்கி வருவதாக தெரிவித்திருக்கிறார் .இந்நிலையில் சுவாதியின் வருகைக்காக காத்திருந்த குடும்பத் தினருக்கு, அவரது இறப்பு செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நமது அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.

மதுரை SSA- யில் BSNLEU, 36 கிளைகளிலும் மே தினம் . . .

அருமைத் தோழர்களே! நமது மதுரை மாவட்டசங்கம் அனைவருக்கும் மீண்டும் மே தின புரட்சி வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது . . . 
நமது இந்த ஆண்டு 128 வது மேதினத்தை BSNLEU, ஒரு புதிய கோணத்தில், வித்தியாசமான முறையில், ஒரே நாளில் மே 1ம் தேதி நமது மாவட்டத்தில் உள்ள 36 கிளைகளிலும், வாய்ப்பு உள்ள இடங்களில் TNTCWU சங்கத்தோழர் களையும் இணைத்துக்கொண்டு, அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கும் கிளைகளை ஒதுக்கீடு செய்து, முன்கூட்டியே நோட்டிஸ் வெளியிட்டு, மே தினத்தை சிறப்பாக நடத்திட வேண்டுமாய் மாவட்டசங்கம் வழிகாட்டி இருந்தது. மாவட்டசங்கத்தின் புதிய திட்டத்தினை அனைத்து மாவட்டசங்க நிர்வாகிகளும்,கிளச்செயலர்களும்,ஒப்பந்த ஊழியர் சங்க தோழர்களும்  சிரமேற்கொண்டு அமல்படுத்தியதற்காக மதுரை மாவட்ட சங்கம் மனமார்ந்த பாராட்டுக்களை, வாழத்துக்களை பதிவு செய்கிறது.
கிளைச்சங்கங்களுக்கு மே தின கொடி ஏற்றத்திற்கு சென்றுவந்த மாவட்ட சங்க நிர்வாகிகள் அனைவரும் தங்களுக்கு கிளைகளில் கிடைத்த ஒவ்வொரு அனுபவத்தையும் மிக வெகுவாக பாராட்டி பதிவு செய்தார்கள்.குறிப்பாக இத்துனை ஆண்டுகளில், இந்த 2014-ம் ஆண்டு மே தின கொடியேற்று விழா நிகழ்ச்சிகள்  ஒவ்வொரு மாவட்டசங்க நிர்வாகிகளுக்கும் ஒவ்வொரு புதிய அனுபவத்தை கற்றுகொடுத்துள்ளது எண்டு சொன்னால் அது மிகையாகாது.
மதுரையில் CITU&AITUC சார்பாக மே தின பொதுக்கூட்டம் . . .

மே 1 அன்று மாலை 6 மணிக்கு  மதுரைமாநகரில் 1000-க்கனக்கானோர் கலந்து கொண்ட,அனைத்துதொழிற்சங்கங்களின்சார்பாகமாபெரும்பொதுக் கூட்டம்  தோழர்.M.நந்தா சிங், AITUC,மாநில நிர்வாக குழு உறுப்பினர்  தலைமையில் நடைபெற்றது. தோழர்.V.பிச்சை, CITU, மதுரை மாநகர் மாவட்ட செயலர்  முன்னிலை வகுத்தார்,பொதுக்கூட்டம் துவங்குவதற்கு முன்னதாக "கலைவாணர் கலைக்குழுவின்" நிகழ்ச்சி நடைபெற்றது. தொலை தொடர்பு சங்கங்களின் சார்பாக நமது BSNLEU மாவட்ட செயலர் தோழர். எஸ்.சூரியன், தோழர்.சேது ஆகியோரும் சிறப்புரையாக தோழர்.R.கருமலையான்,CITUதமிழ் மாநில துணை பொதுச்செயலர் அவர்களும் தோழர்.M.அப்பாத்துரை,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும் நிறைவுரை நிகழ்த்தினார்கள்.
நமது மாவட்ட செயலர் எஸ். சூரியன் தனது உரையில் .....பன்னாட்டு கம்பெனிகளின் வரவால் தொழிலாளர்களுக்கு ஏறப்பட்டுள்ள இன்னல்,புதிய பென்சன் திட்டத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள்,ஒப்பந்த ஊழியர்களின் நிலை,பரிவு அடிப்படையில் பணிநியமனம் உள்ளிட்ட சமுக பாதுகாப்பு திட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து,IT-துறையில் நமது இளைஞர்கள் சந்தித்துக்கொண்டிருக்கின்ற உழைப்புச் சுரண்டல் ஆகியவை மே தினத்திற்கு எழுந்துள்ள ஆபத்துகள்,அமைப்புசார தொழிலாளர்கள் நிலைமை ஆகியவை   பற்றி நினைவு கூர்ந்து, அவற்றிற்காக மே தின சூளுரை ஏற்கவேண்டினார்  நமது பகுதியில் மட்டும்  BSNLEU+TNTCWU சங்கங்களின் சார்பாக 16 பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர். 

Thursday, 1 May 2014

அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள் . . .































மே தின வாழ்த்துக்களுடன் . . . எஸ்.சூரியன் ---D/S-BSNLEU