Friday 2 May 2014

மதுரை SSA- யில் BSNLEU, 36 கிளைகளிலும் மே தினம் . . .

அருமைத் தோழர்களே! நமது மதுரை மாவட்டசங்கம் அனைவருக்கும் மீண்டும் மே தின புரட்சி வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது . . . 
நமது இந்த ஆண்டு 128 வது மேதினத்தை BSNLEU, ஒரு புதிய கோணத்தில், வித்தியாசமான முறையில், ஒரே நாளில் மே 1ம் தேதி நமது மாவட்டத்தில் உள்ள 36 கிளைகளிலும், வாய்ப்பு உள்ள இடங்களில் TNTCWU சங்கத்தோழர் களையும் இணைத்துக்கொண்டு, அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கும் கிளைகளை ஒதுக்கீடு செய்து, முன்கூட்டியே நோட்டிஸ் வெளியிட்டு, மே தினத்தை சிறப்பாக நடத்திட வேண்டுமாய் மாவட்டசங்கம் வழிகாட்டி இருந்தது. மாவட்டசங்கத்தின் புதிய திட்டத்தினை அனைத்து மாவட்டசங்க நிர்வாகிகளும்,கிளச்செயலர்களும்,ஒப்பந்த ஊழியர் சங்க தோழர்களும்  சிரமேற்கொண்டு அமல்படுத்தியதற்காக மதுரை மாவட்ட சங்கம் மனமார்ந்த பாராட்டுக்களை, வாழத்துக்களை பதிவு செய்கிறது.
கிளைச்சங்கங்களுக்கு மே தின கொடி ஏற்றத்திற்கு சென்றுவந்த மாவட்ட சங்க நிர்வாகிகள் அனைவரும் தங்களுக்கு கிளைகளில் கிடைத்த ஒவ்வொரு அனுபவத்தையும் மிக வெகுவாக பாராட்டி பதிவு செய்தார்கள்.குறிப்பாக இத்துனை ஆண்டுகளில், இந்த 2014-ம் ஆண்டு மே தின கொடியேற்று விழா நிகழ்ச்சிகள்  ஒவ்வொரு மாவட்டசங்க நிர்வாகிகளுக்கும் ஒவ்வொரு புதிய அனுபவத்தை கற்றுகொடுத்துள்ளது எண்டு சொன்னால் அது மிகையாகாது.
மதுரையில் CITU&AITUC சார்பாக மே தின பொதுக்கூட்டம் . . .

மே 1 அன்று மாலை 6 மணிக்கு  மதுரைமாநகரில் 1000-க்கனக்கானோர் கலந்து கொண்ட,அனைத்துதொழிற்சங்கங்களின்சார்பாகமாபெரும்பொதுக் கூட்டம்  தோழர்.M.நந்தா சிங், AITUC,மாநில நிர்வாக குழு உறுப்பினர்  தலைமையில் நடைபெற்றது. தோழர்.V.பிச்சை, CITU, மதுரை மாநகர் மாவட்ட செயலர்  முன்னிலை வகுத்தார்,பொதுக்கூட்டம் துவங்குவதற்கு முன்னதாக "கலைவாணர் கலைக்குழுவின்" நிகழ்ச்சி நடைபெற்றது. தொலை தொடர்பு சங்கங்களின் சார்பாக நமது BSNLEU மாவட்ட செயலர் தோழர். எஸ்.சூரியன், தோழர்.சேது ஆகியோரும் சிறப்புரையாக தோழர்.R.கருமலையான்,CITUதமிழ் மாநில துணை பொதுச்செயலர் அவர்களும் தோழர்.M.அப்பாத்துரை,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும் நிறைவுரை நிகழ்த்தினார்கள்.
நமது மாவட்ட செயலர் எஸ். சூரியன் தனது உரையில் .....பன்னாட்டு கம்பெனிகளின் வரவால் தொழிலாளர்களுக்கு ஏறப்பட்டுள்ள இன்னல்,புதிய பென்சன் திட்டத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள்,ஒப்பந்த ஊழியர்களின் நிலை,பரிவு அடிப்படையில் பணிநியமனம் உள்ளிட்ட சமுக பாதுகாப்பு திட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து,IT-துறையில் நமது இளைஞர்கள் சந்தித்துக்கொண்டிருக்கின்ற உழைப்புச் சுரண்டல் ஆகியவை மே தினத்திற்கு எழுந்துள்ள ஆபத்துகள்,அமைப்புசார தொழிலாளர்கள் நிலைமை ஆகியவை   பற்றி நினைவு கூர்ந்து, அவற்றிற்காக மே தின சூளுரை ஏற்கவேண்டினார்  நமது பகுதியில் மட்டும்  BSNLEU+TNTCWU சங்கங்களின் சார்பாக 16 பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர். 

No comments: