தோழர்களே! திண்டுக்கல் (BSNL-DE) கோட்டஅதிகாரியின் பாரபட்ச மான, மெத்தன போக்குகளை கண்டித்து, நிலைபாட்டை மாற்றக்கோரி, திண்டுக்கல் மெயின் தொலைபேசியகம் முன்பாக 19.05.14 திங்களன்று காலை 10 மணிக்கு தொடக்கி மாலை 5 மணிவரை BSNLEU, TEPU,BEAU ஆகிய 3 சங்கங்கள் சார்பாக தர்ணா போராட்டம் மிகவும் எழிச்சியுடன் நடைபெற்றது. தர்ணாவை BSNLEU மாநில துணைத்தலைவர்தோழர்.எஸ்.ஜான்போர்ஜியாதுவக்கிவைத்துஉரைநிகழ்த்தினார்....தர்ணாபோராட்டத்தின்கோரிக்கைகளாக ....CSC,கமர்சியல் மற்றும் செல் செக்சன் போன்ற இடங்களில்காலாவதியாகிப் போன கம்ப்யூட்டர்,பிரிண்டர்களை மாற்று.
..... ஊழியர்கள் பனி இடங்களில் அடிப்படை தேவையான குறைந்த பட்சம் குடி தண்ணீரை வழங்கு.
...... திண்டுக்கல் பகுதியில் வருடாவருடம் வழங்கப்படும் செக்சன் மாற்றலில் முறை கேடாக பாரபட்சம் செய்து காலம் தாழ்த்தும் போக்கை கைவிடு.
ஆகிய நியாமான கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் 7 பெண்கள் உட்பட 74 பேர் கலந்து கொண்டனர். கோரிக்கை யின் நியாயத்தை வலியுறித்தி தோழர்கள், மதனமுனியப்பன்,ஜோதிநாதன், ஆரோக்கியம்,மானுவேல்பால்ராஜ்,வைத்திலிங்கபூபதி,செல்வின்சத்திய ராஜ், முபாரக் அலி , சூரியன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
D.E - DDG அவர்கள் தேவையற்ற முறையில் ஒரு சாதாரண பிரச்சனையை முறையாக தீர்ப்பதில் கடைப்பிடிக்கும் அளவு கடந்த மெத்தன போக்கு, ஊழியர்கள் மத்தியில் எல்லைகடந்த கோபத்தை உருவாக்கி உள்ளது. இதை உரிய வேகத்துடன் ஒழுங்கு படுத்தவேண்டிய மாவட்ட நிர்வாகமும் நாளொன்றுக்கு ஒரு நிலை எடுப்பதும், கறார் தன்மையற்ற நிலைபாடு எடுப்பதும், பிரச்சனை தீர்விற்கு வழிவகுக்காது. மாறாக எதிர் விளைவைத்தான் உருவாக்கும் என அன்போடும், பொறுப்பாகவும், சொல்லி வைக்கின்றோம். ஸ்தல மட்டத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மாவட்ட நிர்வாகம் தனது கடமையை உணர்ந்து உரிய வழிமுறையை உடனுக்குடன் ஸ்தல மட்ட அதிகாரிகளுக்கு வழங்காதது என்பது அதுவும் ஒரு நியாய மறுப்பேயாகும். இந் நிலை தொடர்ந்தால் மாவட்ட அளவிலான பிரச்சனையாக மாறும் என எச்சரிக்கின்றோம்.
No comments:
Post a Comment