Sunday, 25 May 2014

நமது BSNLEU மத்திய சங்க(CHQ) செய்திகள்...

     
 * நமது துணை பொது செயலர் தோழர் அனிமேஷ் மித்ரா 23-05-2014 அன்று பொது மேலாளர் (ESTT )திரு R .K .கோயல் அவர்களை சந்தித்து பேசினார் .அப்போது திரு கோயல் அவர்கள் TTA மற்றும் JTO ஆளெடுப்பு விதிகளில் மாற்றம் செய்வதற்கு BSNL நிர்வாக கமிட்டி ஒப்புதல் கொடுத்து விட்டதாகவும் , ஜூன் முதல் வாரத்தில் கூடவுள்ள   BSNL போர்டு மீட்டிங்கில் அது ஒப்புதல் பெறப்படும் என கூறியுள்ளார் .இந்த முடிவால் officiating JTOs அனைவரும் ரெகுலர் ஆகுவதற்கும் , JTO போட்டி தேர்வில் பங்கேற்க சேவை காலம் 7 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறையும் வாய்ப்பும் உள்ளது .
      *    JTO போட்டி தேர்வில் இராணுவ சேவை காலத்தை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் என நமது BSNLEU சங்கம் நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது .தற்போது    மாண்புமிகு அலகாபாத்  நிர்வாக நீதி மன்றம் 20-05-2014 அன்று அளித்த தீர்ப்பின் படி குரூப் "C " கேடரில் பணியாற்றிய இராணுவ சேவை காலத்தை கணக்கில் எடுத்து கொண்டு 7 வருட சேவை இருப்பவர்களை அனுமதிக்க வேண்டும் என உத்தரவு வெளியிட்டு விட்டது .இந்த தீர்ப்பின் அடிப்படையில் போட்டி தேர்வின் முடிவில்  எக்ஸ் சர்வீஸ் மேன்கள் உரிமைகள் பாதுகாக்க நமது சங்கம் உரிய    நடவடிக்கை எடுக்கும் .
    *   இந்தி மொழிபெயர்ப்பாளர்களாக தற்காலிகப்பதவி உயர்வில் பணி புரியும் தோழர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பது பற்றி BSNL வாரிய ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.BSNL BOARD  வாரியக் கூட்டம் ஜுன் 6-ந்தேதி நடைபெறும்.
   *  இந்த ஆண்டு BSNLன் வருமானம் 2.5% சதம்  உயர்ந்துள்ள தாகவும்,  செல்  வருமானம்  5%சதம்  உயர்ந்துள்ளதாகவும்புள்ளி விவரங்கள் கூறுகின்றன 
  * மாதம் ரூ.2000/-க்கு மேல் தொலைபேசிக்கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி பில்களை நேரடியாக அவர்களது இருப்பிடத்திற்கு கொண்டுபோய் கொடுக்கவும்,  காசோலையை நேரடியாகபெற்றுக்கொள்ளவும் வசதிகள் செய்யுமாறு மாநில CGMகளை CMD கேட்டுக் கொண்டுள்ளார் இந்தப்பணிக்கு தொலைபேசி வருவாய்ப்பிரிவில் பணி புரியும் SR.TOA தோழர்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments: