தமிழகத்திற்குப் புதிய(CGM) முதன்மைப் பொதுமேலாளர்
தென்மண்டலப்பராமரிப்பு STR பகுதியின் CGM ஆகப்பணிபுரிந்த, திரு. G.V.ரெட்டி அவர்கள் தமிழகத்தின் புதிய CGM முதன்மைப்பொதுமேலாளராகப் பதவியேற்கின்றார்.இதுவரை பணிபுரிந்த திரு.முகமது அஷ்ரப் கான் CGM அவர்கள் EXECUTIVE DIRECTOR (NEW BUSINESS) நிர்வாக இயக்குனர்(புது வணிகம்) பதவிக்கு தேர்வானதையொட்டிநேற்று 13/05/2014 தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு விடுவிக்கப்பட்டுள்ளார்.
JTO ஆளெடுப்பு
விதி
புதிய JTO ஆளெடுப்பு விதி 2014 BSNL நிர்வாகக்குழுவின்MANAGEMENT COMMITTEE ஒப்புதல் பெற்று BSNL BOARD வாரிய ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கட்டணத்தள்ளுபடி
வடகிழக்கு மாநிலங்களுக்கான நுண்ணலை மற்றும் அலைவரிசைக் கட்டணமாக DOT மற்றும்
ISROவிற்கு BSNL செலுத்த வேண்டிய 102 கோடி ரூபாய்க்கட்டணம் இந்த ஆண்டு தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. BSNLன் நிதிச்சுமையைக்குறைக்க அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளில் இதுவும் அடக்கம்.
கூட்டுறவு சங்க இயக்குநர்கள் தேர்தல்
சென்னைக் கூட்டுறவு சங்க இயக்குநர்கள் DIRECTORS தேர்தல்20/05/2014 அன்று சென்னை யில் நடைபெறும்.
JAO 10 சத
SC/ST காலியிடங்கள் - மறு ஆய்வு
ஆகஸ்ட் 2013ல் நடந்த JAO 10 சத காலியிடங்களுக்கான போட்டித்தேர்வில் SC/ST காலியிடங் களுக்குப் போதிய தோழர்கள் தேர்ச்சி பெறவில்லை. எனவே தேர்வு முடிவுகளை மறு ஆய்வு செய்யBSNL நிர்வாகம்
உத்திரவிட்டுள்ளது.இந்த உத்திரவின்படி..
அனைத்துப்பாடங்களிலும் தேர்ச்சி பெற்று கூட்டு மதிப்பெண்கள் AGGREGATE MARKS பெறாதவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.ஏதேனும் ஒரு பாடத்தில் தோல்வியுற்றவர்களுக்கு 5 கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். அதுவும் கீழ்க்கண்ட பாட வரிசையில் மறு ஆய்வு செய்ய வேண்டும்.
WORKS ACCOUNTS, SERVICE RULES AND BUDGET, TELECOM REVENUE, ACCOUNTING AND COSTING
No comments:
Post a Comment