Tuesday, 6 May 2014

மாவட்ட சங்க நிர்வாகிகள் & கிளச்செயலர்கள் கவனத்திற்கு .

08.05.2014 மாவட்ட நிர்வாகத்தினை கூட்டாக சந்திப்பது 
அருமைத் தோழர்களே! நமது மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்விற்காக கடந்த 07.04.2014 & 09.04.2014 தேதிகளில் நமது மாவட்டசங்கத்தால் விரிவான கடிதம் கொடுக்கப்பட்டது. நமது மாநிலச் செயலர் தோழர்.எஸ். செல்லப்பா அவர்களும் மாநிலநிர்வகத்திடம் வலியுறித்தினார். அதன் பின் நாம் மாவட்டம் முழுவதும் ஊழியர்களை திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை 16.04.2014 அன்று திட்டமிட்டு செயல்படுத்திய சூழலில் மாவட்ட நிர்வாகம் நமது மாவட்ட சங்கத்துடன் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தி எழுத்துப் பூர்வமான உடன் பாட்டை எட்டியதால், நாம் போராட்டத்தை விளக்கி கொண்டோம். ஆனால் நம்மிடம் உடன்பாடு கண்ட மாவட்ட நிர்வாகம்,ஓரிரு பிரச்சனைகள் தவிர மற்ற பிரச்சனைகள் தீர்வில்,மெத்தனமும் அலட்சியமும் காட்டுகிறது குறிப்பாக . . .
  * திண்டுக்கல் மாற்றலில் எடுக்கும் தவறான நிலைபாடு 
  * தேனி P.C.பட்டி மாற்றலில் தவறான முறை 
  * ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனையில் கறார் தன்மையில்லை 
  * வத்தலக்குண்டு,நிலக்கோட்டை கோட்டத்தில் தவறான மாற்றல் 
  * மாவட்ட நிர்வாகத்தின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள கோளாறு 
  *  RJCM / LJCM முடிவுகளை அமுல்படுத்தாத நிலை 
  * ஸ்டோர் லைன் மேன் நியமனங்களை முறைப்படுத்துதல் 
  * பழங்காநத்தம்,அழகப்பநகர் அடிப்படை பிரச்சனைகள் தீர்வு 
இப்படி அதிமுக்கிய பிரச்சனைகளில் கூட  நிர்வாகத்தின் அக்கறையற்ற, அலச்சிய தன்மையை இனியும் அனுமதிக்க முடியாது என மாவட்ட செயலகம் முடிவு செய்து நிர்வாகத்திற்கும்,மாநில நிர்வாகத்திற்கும், நமது மாநில செயலருக்கும் கோரிக்கை மனு சமர்பித்துள்ளோம்.
08.05.2014 "MASS DEPUTATION"தயாராகுங்கள் 
எனவே,நமது மாவட்ட சங்கநிர்வாகிகளும்,கிளைச்செயலர்களும் தயார்நிலை இருக்க வேண்டு மாய்  மாவட்டசங்கம் கேட்டுகொள்கிறது.
     ---என்றும் தோழமையுடன் ....எஸ். சூரியன் D/S-BSNLEU

No comments: