Friday 9 May 2014

வங்கிகளில் வாராக் கடன் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் கோடி. . .

கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் வரை ரூ.39 ஆயிரம் கோடியாக மட்டும் இருந்த வாராக்கடன் தொகை, 2013-ம் ஆண்டில் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கும் மேல் சென்றுவிட்டது. அதாவது கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் ரூ.4 லட்சத்து 95 ஆயிரம் கோடி புதிய வாராக்கடன்கள் உரு வாகியுள்ளன.அவ்வாறு கடனை திருப்பிச் செலுத்தாத 406 தொழில் நிறுவனங்களின் பட்டியலை தொழிற்சங்கம் வெளியிட்டுள்ளது. இந்த 406 நிறுவனங்கள் மட்டும் ரூ.70 ஆயிரத்து 300 கோடி கடன் தொகையை திருப் பிச் செலுத்தாமல் உள்ளன.
வங்கி கடனை திருப்பிச் செலுத்தாத 406 பெரும் தொழில் நிறுவனங்களின் பட்டியலை அகில இந்திய வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் வெளியிட்டனர். . . யார், எவ்வளவு?
* கிங் பிஷர் ஏர்லைன்ஸ் 2673 கோடி
* மும்பை எஸ்.குமார் ஜவுளி 1758 கோடி
* ஸ்டெர்லிங் குழுமம் 3672 கோடி
* சூர்யா வினாயக் இண்டஸ்ட்ரீஸ் 1446 கோடி
* வருண் இண்டஸ்ட்ரீஸ் 1129 கோடி
* வின்ஸம் டைமண்ட் 3156 கோடி
* ஜூம் டெவலப்பர்ஸ் 1809 கோடி
* தமிழகத்தின் ஆர்கிட் கெமிக்கல்ஸ் 938 கோடி
* அருப்புக்கோட்டை ஸ்ரீஜெயவிலாஸ் 31 கோடி
* தீன்தயாள் மருத்துவக் கல்வி நிறுவனம் 69 கோடி
* மோகன் புரூவரீஸ் அண்ட் டிஸ்டில்லரீஸ் 135 கோடி
* நியூ சென்னை டவுன்ஷிப் 233 கோடி
* வன்னியர் கல்வி அறக்கட்டளை 19 கோடி

No comments: