Saturday 17 May 2014

காங்கிரஸ் எதிர்ப்பு அலையால் பாஜக ஆதாயம். . .

16ஆவது மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு எதிரான அலையால் பாஜக ஆதாயமடைந்துள்ளது.:“16ஆவது மக்களவைக்கான தேர்தல் முடிவுகள்  தெளிவாகவும் தீர்மானகரமாகவும் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை என்பது காங்கிரஸ் கட்சியையும், ஐமுகூட்டணியையும் துடைத் தெறிந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு எதிரான இந்த அலையிலிருந்து பாஜக ஆதாயம் அடைந்து, அதன் காரணமாக பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்குமான தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளிக்கக் கூடியதாக இருக்கின்றன. கேரளாவில் இடது ஜனநா யக முன்னணி  தனது முந்தைய பலத்தை உயர்த்தி இருக்கிறது..திரிபுராவில் இடது முன்னணி கூடுதல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆயினும், மேற்கு வங்கத்தில் மிகவும் விரிவான அளவிற்கு நடைபெற்ற தேர்தல் மோசடி, வன்முறை மற்றும் அச்சுறுத்தல் தேர்தல் முடிவுகளை சிதைத்துள்ளது. தேர்தல் முடிவுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடது முன்னணிக்கும் உள்ள மக்களின் ஆதரவைப் பிரதிபலிக்கக்கூடியதாக இல்லை. மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்டத்திலிருந்து ஐந்தாம் கட்டம் வரையும் நடைபெற்றத் தேர்தல் மோசடிகளை சரி செய்யக்கூடிய விதத்தில் தலையிட தேர்தல் ஆணையம் தவறிவிட்டது. இத்தேர்தல்களின்போது இடை விடாது தொடர்ந்து தாக்குதல்கள் தொடுக்கப்பட்ட போதிலும் அவற்றை எதிர்கொண்டு தைரியமாக செயல்பட்ட இடது முன்னணியின் பல்லாயிரக்கணக்கான முன்னணி ஊழியர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் வாழ்த்துக்கள் 
மக்கள், விலைவாசி உயர்வு, விவசாய நெருக்கடி மற்றும் ஊழல் ஆகிய வற்றிற்கு வழிவகுத்த காங்கிரஸ் தலைமையிலான கொள்கைகளுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். அவர்கள் தங்களைப் பாதித்துள்ள பிரச்சனைகளிலிருந்து தீர்வு காண ஒரு மாற்றம் வேண்டி வாக்களித்திருக்கிறார்கள்.  உழைக்கும் மக்களின் நலன்களைக் காத்திடவும், நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக கட்டமைப்பைக் காத்திடவும் தொடர்ந்து தொழிலாளி வர்க்கம் பணியாற்றும்.’’

No comments: