Wednesday 7 May 2014

GM - உடன் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் . . .

அருமைத் தோழர்களே ! அனைவருக்கும் வணக்கம்   .  .  .
நமது மாவட்டசங்கம் 08.05.2014 நடத்த இருந்த "MASS DEPUTATION" 06.05.2014 அன்று நமது மாவட்டசங்கத்திடம்  நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் அடிப்படையில் போராட்டம் விளக்கி கொள்ளப் படுகிறது. 
தோழர்களே ! நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்துடன் கடந்த 15.04.2014 அன்று மதுரை மாவட்ட நிர்வாகம் எழுத்து பூர்வம்  ஏற்படுத்திய உடன்பாட்டை அமுல்படுத்தாமல் திண்டுக்கல், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை,தேனி ஆகிய பகுதிகளில் புதிய பிரச்னையை நிர்வாகம் உருவாக்கியது. இது  குறித்து நிர்வாகத்துடன் சுட்டிகாட்டிய போது உரியமுறையில் பரிசீலிக்கவில்லை. எனவே, நமது மாவட்ட சங்கம் சார்பாக 03.05.2014 அன்று   உடனடியாக மதுரை  மாவட்ட நிர்வாகத்திற்கு08.05.2014"MASSDEPUTATION" அறிவிப்பை கொடுத்தோம்.
அதன்பின் மாவட்ட நிர்வாகம் 06.05.2014 அன்று நமது மாவட்ட சங்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதனடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக GM / DGM(HR) / AGM(HR) / SDE(HR) ஆகியோரும், நமது மாவட்டசங்கத்தின் சார்பாக  தோழர்கள்,சி .செல்வின் சத்தியராஜ், எஸ்.சூரியன், ஆர்.ரவிச்சந்திரன், வி.சுப்புராயலு ஆகியோரும் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் நமது கோரிக்கைகளின் நியாயத்தை புரிந்து கொண்ட மாவட்ட நிர்வாகம், குறிப்பாக GM அவர்கள் கிட்டத்தட்ட அனைத்து பிரச்சனைகளிலும் சுமூக தீர்வை ஏற்படுத்தியதால் நாம் அறிவித்திருந்த தொழிற் சங்க நடவடிக்கையான "MASS DEPUTATION" விளக்கி கொள்ளப் பட்டது. கீழ்க்கண்ட கடிதத்தை நிர்வாகத்திற்கு நமது மாவட்ட சங்கம் இன்று (07.05.2014) கொடுக்கிறது.
--என்றும்  தோழமையுடன் ....எஸ்.சூரியன்  D/S-BSNLEU 

No comments: