சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு
நேற்று (1.5.2014) காலை ஏழரை மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் கவுகாத்தி - பெங்களூர் எக்ஸ்பிரசில் குண்டு வெடித்து ஒருவர் இறந்துள்ளதாகவும், பலர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்த பயங்கரவாத செயலை நமது BSNLEU சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.குண்டுவெடிப்பு வன்முறைச் செயலுக்கு காரணமானவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துகிறது. மேலும் காயமுற்றவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் நமது சங்கம் வலியுறுத்துகிறது.
|
திருமண
கனவோடு, முதல் மாத சம்பளத்தில் குடும்பத்தினருக்கு பரிசு பொருட்களை வாங்கி கொண்டு ஊருக்கு செல்லும்போது சுவாதியை மரணம் தழுவிக் கொண்டுள்ளது.கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் பலியான சுவாதியின் தந்தை ராமகிருஷ்ணன் ஒரு விவசாயி. அவரது மனைவி காமாட்சி தேவி. இவர்கள் குண்டூரில் குடும்பத்துடன் வசித்து வருகின் றனர். ஹைதராபாத்தில் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக கடந்த மாதம் தான் பணிக்கு சேர்ந்துள்ளார் 24 வயதான சுவாதி.அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததால் ஒருமாத விடுப்பில் சென்னை வழியாக குண்டூருக்கு கவுகாத்தி ரயிலில் பயணம் செய்துள்ளார். தனது பாட்டியிடம் நேற்றிரவு தொலைபேசியில் பேசிய சுவாதி, முதல் மாத சம்பளத்தில் பரிசுப் பொருட்களை வாங்கி வருவதாக தெரிவித்திருக்கிறார் .இந்நிலையில் சுவாதியின் வருகைக்காக காத்திருந்த குடும்பத் தினருக்கு,
அவரது இறப்பு செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நமது அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.
|
No comments:
Post a Comment