ஒரு முறை விபசார விடுதியில் ஒரு நள்ளிரவு முழுக்க சந்தேகப்பட்டு போலீஸ் அடைத்து வைத்த போதும்கூட, சின்ன முகச்சுளிப்பை கூடமார்க்ஸை நோக்கி காட்டாத மங்கை அவர்.எங்கெல்ஸை ஏற்கெனவே ஒரு முறை சந்தித்திருந்த மார்க்ஸ் மீண்டுமொரு முறை சந்தித்தபொழுது எண்ணற்ற தளங்களில் தங்களின் சிந்தனை ஒத்திருப்பதை கண்டார்இவரைக் காப்பதை தன் வாழ்நாள் கடமையாக செய்தார்ஏங்கல்ஸ்.வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பிக்கொண்டே இருந்தார்.இங்கிலாந்தின் நூலகங்களில்தவங்கிடந்துமூலதனத்தை உருவாக்கினார்கள்.ஒரு பொருளை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால்,அதற்கு ஒரு விலை கொடுத்தே அதை வாங்குவீர்கள்.அந்தப் பொருளை பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகிதயாரிக்கும் தொழிலாளிக்கு,நீங்கள் கொடுக்கும் பணம் போய்சேர்கிறதா என்றால் இல்லை.மூலதனத்தை போட்டமுதலாளி ஒட்டுமொத்த லாபத்துக்கும் சொந்தக்காரர் ஆகிறார்.அப்படியில்லாமல்மூலத்தை உழைக்கிறவனுக்கும்,பிரித்து தரவேண்டும் என்பதே அதன் சாரம்.உலகின் பொருளாதரத்தை பற்றிமார்க்ஸ் எழுதியகாலத்தில்,வீட்டு நிலைமை ஏகத்துக்கும் மோசமானது.பிள்ளைகள் மாண்டு போனார்கள்."பிறந்தபொழுது உனக்கு தொட்டில் கட்ட காசில்லை;இப்பொழுது அடக்கம் செய்ய காசில்லை!" எனஜென்னி கண்ணீர் விடுகிற அளவுக்குநிலைமை மோசம்...பசியால் நொடிந்து போய் மார்பிலிருந்து ரத்தம்சொட்ட பிள்ளைக்கு பாலூட்டிய கொடுமையிலும்,மார்க்ஸைஅன்போடு காத்தார் ஜென்னிஜென்னி இறந்த இரண்டு வருடங்களில் ஏற்கனவே மனதளவில் இறந்து போயிருந்தமார்க்ஸ்மீளாத் துயில் கொண்டுவிட்டார்.காரல் மார்க்ஸ் கண்ட கனவான பாட்டாளிகளின் புரட்சி அடுத்தநூற்றாண்டில் பல நாடுகளில்காட்டாற்று வெள்ளம் போல பொங்கிப் பெருகிற்று.சூரியனின் கதிர்கள் போல உலகம் முழுக்க கம்யூனிசம் நீக்கமற மக்களின்சிந்தனையில் புகுந்தது.“வர்க்க பேதமற்ற, பொருளாதாரஏற்றத்தாழ்வுகள் இல்லாத உலகை கட்டமைக்கும் அருங்கனவு கண்ட நாயகன்மார்க்ஸ் ,மனிதனாக இறந்தார்.
காலத்தை வென்று அவரின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும்"
No comments:
Post a Comment