Friday 9 May 2014

+ 2 தேர்வு முடிவுகள் (மே 9) காலை 10 மணிக்கு .

மாணவர்கள் விடைத்தாள் நகல் கோரி தங்களது பள்ளிகள் மூலமாக வெள்ளிக்கிழமை முதல் புதன்கிழமை (மே 14) வரை விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக ஜூன் இறுதியில் சிறப்புத் துணைத் தேர்வு நடத்தப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.தமிழகத்தில் மார்ச் 3 முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெற்றது. மொத்தம் 2,242 தேர்வு மையங்களில் 8.79 லட்சம் மாணவ, மாணவியர் இந்தத் தேர்வை எழுதினர். பள்ளிகளின் மூலமாக 8.26 லட்சம் பேரும், தனித்தேர்வர்களாக 53 ஆயிரம் பேரும் தேர்வுகளை எழுதினர்.இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதியோரில் மாணவர்களை விட மாணவியரின் எண்ணிக்கை அதிகம். 65 ஆயிரம் மாணவிகள் கூடுதலாகத் தேர்வு எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது
தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள்:
தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே வெள்ளிக்கிழமை நேரில் சென்று மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். இவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளிலேயே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுவதால் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.பள்ளி மாணவர்கள் தங்களது பிறந்த தேதி, பதிவு எண்ணைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.முடிவுகள் வெளியாகும் இணையதள முகவரிகள்
www.tnresults.nic.in,www.dge1.tn.nic.in,www.dge2.tn.nic.in,www.dge3.tn.nic.in 
இதில் www.dge1.tn.nic.in என்ற இணையதள முகவரியில் ஸ்மார்ட் போன் மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்
எஸ்.எம்.எஸ். மூலம் அறிந்துகொள்ளலாம்
பி.எஸ்.என்.எல். சந்தாதாரர்கள் 53576 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். இந்த எண்ணுக்கு தேர்வு முடிவுகளை முன்கூட்டியே அறியும் வகையில் பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
HSC<space>"Registration Number" என்ற அடிப்படையில் அடித்து எஸ்.எம்.எஸ். செய்ய வேண்டும்.தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளும் எஸ்.எம்.எஸ். ஒன்றுக்கு ரூ.3 கட்டணமாக எடுத்துக்கொள்ளப்படும்
அதோடு, 09282232585 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். TNBOA RD<SPACE><REGISTERNO><DOB in DD/MM/yyyy> என்ற அடிப்படையில் எஸ்.எம்.எஸ். செய்ய வேண்டும்
ஜூனில் சிறப்பு துணைத் தேர்வு:
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள், அவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் மே 12 (திங்கள்கிழமை) முதல் மே 16 (வெள்ளிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம்.
இந்தத் தேர்வுக்காக தனி விண்ணப்பம் கிடையாது. மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுத விரும்பும் பாடங்களுக்கு உரிய கட்டணத்தைச் செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்
விடைத்தாள் நகலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்:
மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு மே 9 முதல் 14-ஆம் தேதி வரை தங்களது பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்துகொண்டு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
விடைத்தாள் நகல் கோரியவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு 5 நாள்கள் அவகாசம் உள்ளதால் மாணவர்கள் அவசரமின்றி விண்ணப்பிக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
விடைத்தாள் நகலைப் பெற மொழிப்பாடங்கள் மற்றும் ஆங்கில விடைத்தாள்களுக்கு தலா ரூ.550-ம், ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.275-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.மறுகூட்டலுக்கு மொழிப்பாடங்கள், ஆங்கிலம் மற்றும் உயிரியல் பாடங்களுக்கு தலா ரூ.305-ம், ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.205-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.இதற்கான கட்டணத்தை மாணவர்கள் விண்ணப்பிக்கும் பள்ளியிலேயே செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: