பிரிட்டனில்மிகப்பெரிய பொதுத்துறைத் தொழிற்சங்கமான “யூனிசன்” சங்கம்தான் நாடு தழுவிய போராட்டத்திற்கு கடந்த 11ம் தேதியன்று அறைகூவல் விடுத்தது. போராட்டத்தின் ஒரு பகுதியாக தொழிற்சாலைகளின் முன் காலை முதல் பகல் முழுவதும் தர்ணா போராட்டங்களும் பிரச்சாரமும் நடைபெறும். வேலை நிறுத்தத் திற்குத் தொழிற்சங்க உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கான நடவடிக்கையை ஆரம்பிப்பதெனவும் இந்தச் சங்கம் தீர்மானித் துள்ளது. அதற்கான பிரச்சார நிகழ்ச்சிகளின் பகுதியாகவே ஜூன் 5ல் நாடுதழுவிய தர்ணாக்களுக்கும் ஊர்வலங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் கடந்த சில ஆண்டுகளாக பொதுத்துறையில் சம்பள உயர்வு என்பது ஏறக்குறைய முடக்கப்பட்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும். பொருளாதாரச் சீர்திருத்தம் என்பதன் பேரால் அரசு தனது உயர்நிலை சேவைப் பணிகளை தனியார் துறைக்கு விற்று விட முடிவு செய்து நடைமுறைப் படுத்துகிறது. சுகாதாரத் துறையில் மட்டும் கடந்த ஆண்டு 5 பில்லியன் பவுண்ட் (50,000 கோடி ரூபாய்) மதிப்பிலான சேவைகள் தனியார் துறைக்குக் கொடுக்கப்பட்டன. மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிற பல சேவைகளுக்கும் கட்டணம் விதிக்கிற நடவடிக்கையில் அரசு ஈடு பட்டுள்ளது.
பிரிட்டிஷ் அரசின் இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தொழிற்சங்கங்கள் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளன. போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டியது தொழி லாளர்களின் கடமை மட்டுமல்ல, எல்லா பிரிவு மக்களின் கடமையுமாகும் என்று `யூனிசன்‘ தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளர் டெயவ் ப்ரென்டிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் மற்ற முக்கிய தொழிற்சங்கங்களும் பங்கேற் றுள்ளன. பிரிட்டனில் முக்கிய தொழிற்சங்கமான “யுனைட்” என்ற சங்கம் தற்போதைய ஆளும் கட்சியின் தேசிய மாநாடு நடை பெற்ற இடத்தின் அருகே 50 ஆயி ரம் பேர் கொண்ட மிகப்பெரும் கண்டன தர்ணா போராட்டம் நடத் தியது.
No comments:
Post a Comment