Monday, 19 May 2014

Com. Moni Bose 4th death anniversary on 19th May 2014. . .

நாம் அன்போடு மோனி போஸ் என அழைக்கப்படுபவரின் இயற்பெயர் தோழர்.மணி கோபால் பாசு ஆகும். தோழர். மோனிபோஸ் அவர்கள்  1925-ம் ஆண்டு 15- ம் தேதி, இன்றைய "பங்களா தேஷ்" ஆக உள்ள நாட்டின் ஒரு சிறு கிராமத்தில் பிறந்தார்.அதன் பின் அவருடைய குடும்பம் "கல்கத்தா"விற்கு இடம் பெயர்ந்தது. இவருடைய தந்தை முன்பே இறந்து விட்டார். தபால்-தந்தி  தொழிற்சங்க இயக்கத்தில் மிக முக்கிய தலைவராக திகழ்ந்த தோழர். கே.ஜி.போஸ், இவருடைய மூத்த சகோதரர் ஆவார்.
இவர்கள் இருவருக்கும் தபால்-தந்தி  துறையில் எழுத்தர் பனி கிடைத்தது. தோழர்.மோனி போஸ் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 25-ம்  நாள் கல்கத்தாவில் உள்ள D.E.T அலுவலகத்தில் எழுத்தர் பணியில் அமர்ந்தார். ஆனால் 1949 ஆம் ஆண்டு நடைபெற்ற வேலைநிறுத்தத்தை தலைமை தாங்கினார் என்று,கே.ஜி.போஸ் & மோனி போஸ் ஆகிய இருவரையும் இலாகா "டிஸ்மிஸ்" செய்தது. பின் இறுதிவரை அவர்களை மீண்டும் பணிக்கே எடுத்துக்கொள்ளவே இல்லை.  அதன் பின் தோழர் மோனி போஸ் "இந்டியன் ஆக்ஸிசன்  லிமிட்டெட்டில் பணிக்கு சேர்ந்தார்.
1949 ஆம்  ஆண்டு தபால்-தந்தி துறை பணியில்  இருந்து நீக்கப்பட்டாலும், தொடர்ந்து  தபால்-தந்தி துறை சங்கங்களின் நீண்ட தொடர்பை வைத்திருந்த தோடு, தொடர்ந்து தொழிலாளிகளுடன் தொடர்பை உயிரோட்டமாக வைத்திருந்த தோடு, அன்று தொழிற்சங்கத்தில் இருந்த திருத்தல்வாத  தலைமைக்கு  எதிராக தொடர் போராளியாக திகழ்ந்தார்கள்.
1991-ம் ஆண்டு போபாலில் நடை பெற்ற அகில இந்திய மாநாட்டில்  NFTE சங்கத்துடன் இணைக்கப்பட்ட அகில இந்திய டெலிகாம் எம்ப்ளாயிஸ்  யூனியன் 3-ம பிரிவுவின் பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 40 ஆண்டுகாலமாக பொதுச் செயலராக இருந்த O.P குப்தாவை தோற்கடித்து பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்.மோனி போஸ், அதே சங்கத்தில் 1994-ம் ஆண்டு அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2001-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி விசாகபட்டின அமைப்பு மாநாட்டில் , ஏற்கனவே செயல்பட்டு வந்த  டெலிகாம்  துறை BSNL என்ற கார்பரேசனாக மாற்றப்பட்ட சூழலில், அன்று டெலிகாம் பகுதியில் செயல்பட்டு வந்த 7 தொழிற்சங்கங்களை  ஒன்றாக இணைத்து " BSNL EMPLOYEES UNION" உருவாக்கி அதனுடைய "பார்டன்" ஆக பல ஆண்டுகள் செயல்பட்டு வந்தார் தோழர். மோனி போஸ்.
மேற்கு வங்க மாநில அரசின் "சம்பளக்குழு" கமிட்டியில் குழுவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதே போன்று "12-th கமிட்டியோடு தொடர்ந்து, நெருக்கமான தொடர்பை வைத்திருந்தார். மேலும் மேற்கு வங்க மாநிலத்தில் மிக சக்தியான இணைப்புக்குலுவை உருவாக்கி தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்தார். நல்ல பல ஆலோசனைகளை தொழிலாளர் வர்க்கம் பாராட்டக்கூடிய அளவில் அவ்வப்போது வழங்கிவந்தார்.
தோழர் மோனி போஸ் அவர்களுடைய மணைவி தோழியர்.ஜெயஷித்னா  தபால்-தந்தி துறை பணியில் இருந்தார். இவருடைய மகன் Dr.கெளதம் பாசு, மற்றும் சுஷ்மிலா பாசு என்ற மகனும்,மகளும் உள்ளனர். இந்நாளில் தோழர்.மோனி போஸ்  அவர்களின் நினைவை போற்றுவோம்.
---என்றும் தோழமையுடன் ...எஸ்.சூரியன்   D/S-BSNLEU.

No comments: