மேற்குவங்க மாநிலம் சாரதா சீட்டு நிறுவன மோசடி வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் கடைசி கட்ட தேர்தல் நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ளன. சாரதா சீட்டு நிறுவன மோசடியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் நிறைய பேருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மம்தா அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் ஜார்கண்ட், அசாம் உள்ளிட்ட வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஏராளமான கிளைகளை தொடங்கியது. இந்த நிறுவனத்தை பிரபல தொழில் அதிபர் சுதிப்தா சென் நடத்தி வந்தார். இவற்றில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. சுதிப்தா சென் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
இந்நிலையில் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது -தி ஹிந்து
No comments:
Post a Comment