Wednesday, 21 May 2014

மேற்கு வங்கத்தில் 26 கோடீஸ்வர M.Pக்கள்.

2009 மக்களவைத் தேர்தலை ஒப்பிடும்போது தற்போதைய தேர்தலில் மேற்கு வங்கத் திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கோடீஸ்வர எம்.பி.க்கள் 4 மடங்கு அதிகரித்திருப்பதாக மேற்குவங்க தேர்தல் கண்காணிப்பு என்ற அமைப்பு புள்ளி விவரங்களை வெளி யிட்டுள்ளது2009ஆம் ஆண்டு 6 கோடீஸ்வர எம்.பி.க்கள் மக்களவைக்கு தேர்ந் தெடுக்கப்பட்டனர். தற்போது இது 26ஆக அதிகரித்துள்ளது. மேலும் கிரிமினல் வழக்கு உள்ள எம்.பி.க்கள் எண்ணிக்கையும் 8 ஆக அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.26 கோடீஸ்வர எம்.பி.க்களில் 21 பேர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். காங்கிரஸ் கட்சியிலிருந்து 3 எம்.பி.க்களும், பாஜகவிலிருந்து 2 எம்.பிக்களும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.இதில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.1.24 கோடியிலிருந்து ரூ.3.9 கோடியாக அதிகரித்துள்ளது. கத்தால் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யும், பிரபல நடிகருமான தேவ் என்பவரது சொத்து மதிப்பு ரூ.15 கோடி. இவர்தான் மேற்குவங்கத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பணக்கார எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிமினல் வழக்கு உள்ள 8 எம்.பி.க்களில் 7 பேர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆவார்.

No comments: