Wednesday, 14 May 2014

19.05.14 தர்ணாவிற்கு தயாராகிறது திண்டுக்கல் . . .

அருமைத்தோழர்களே!
 " மரம் சும்மா இருந்தாலும் - காற்று விடுவதாக இல்லை"  - என்று ஒரு கவிஞன்சொன்னான்  அது போல, நாம் நமது அலுவலக பணிகளை, தொழிற்சங்க பணிகளை அன்றாடம் முறையாக செய்து கொண்டு செல்வோம்,என் இருக்கின்ற போதே நம்மை வம்புக்கு இழுக்கிறார்கள் .....
காலம், காலமாக நடந்து கொண்டிருக்கின்ற சாதாரண ஒரு நிகழ்வை திண்டுக்கல்லில் ஒரு SDE முடித்துக்கொண்டிருந்த பணியை,அதையும் தாண்டி D.E இருந்தும்,அப்பணி முடிக்கப்படாமல் மதுரை G.M வரை இப் பிரச்சனைக்காக 3 முறை SDE/DE பயணிப்பதன் அர்த்தம் என்ன ? யாருக்காக இத்தனை சிரத்தை திண்டுக்கல் D.E-யால் எடுக்கப்படுகிறது.இதற்காக செலவிடப்படும்,நேர விரயமும்,அலைச்சலும் நியாயம் தானா?
சரிசெய்ய வேண்டியவரே! சதி செய்தால், யாரிடம் முறையிடுவது.இப்படி ஒவ்வொரு முறையும்,சின்ன,சின்ன பிரச்சனைக்கு எல்லாம் மதுரைக்கு காவடி தூக்கி,வழிகாட்டுதல் பெறுவது என்றால் ஸ்தல மட்டத்தில் இவ்வளவு பொறுப்புள்ள அதிகாரிகள் தேவையா ? என்று கீழ்மட்டத்தில் சாதாரண ஊழியர்கள் நியாயமான கேள்வியை எழுப்புகிறார்கள்.
சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து விடை கிடைக்குமா? எங்கே போய்கொண்டு இருக்கிறது திண்டுக்கல் கோட்ட நிர்வாகம்? எனவே இனியும் பொறுப்பதற்கில்லை, இரு முறை மதுரை மாவட்ட நிர்வாகம் வழிகாட்டிய பின்னும்,மீண்டும்,மீண்டும் குழப்பம் செய்கிற அந்த நல்ல அதிகாரி இனியேனும் திருந்துவாரா ?எனவே,நம்மை தர்ணாவிற்கு தள்ளிவிட்டு விட்டது நிர்வாகம். அதனால் தயாராகுறது திண்டுக்கல்...             
தர்ணாவில் சந்திப்போம் ,திண்டுக்கலில் 19.05.14 நடைபெறும் கூட்டுப் போராட்டம் வெற்றிபெற மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.
                             ---போராட்ட வாழ்த்துக்களுடன்,எஸ்.சூரியன்.--D/S-BSNLEU

No comments: