Wednesday, 14 May 2014

75 ஆயிரம் ரேஷன் ஊழியர்களுக்கு,சம்பளம் - சிக்கல்...

கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கு, அரசு மானியம் வழங்கப்படாததால், அடுத்த மாதம் முதல், 75 ஆயிரம் ரேஷன் ஊழியர்களுக்கு,சம்பளம்வழங்குவதில்சிக்கல்ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், 33,520 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றை, கூட்டுறவு சங்கங்கள், நுகர்பொருள் வாணிப கழகம், மகளிர் சுய உ\தவி   குழுக்கள் நடத்துகின்றன.

மூடப்படும்அபாயம்மொத்த கடைகளில், 90 சதவீதம், 4,500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன.பொது வினியோக திட்டத் தின் கீழ், ரேஷன் கடைகளில், அரிசி இலவசமாகவும், சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு வகைகள் உள்ளிட்டவை, மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன.பெரும்பாலான, கூட்டுறவு சங்க ரேஷன் கடைகள், வாடகை கட்டடத்தில் இயங்குகின்றன. ஊழியர் சம்பளம், மாத வாடகை, மின் கட்டணம், போக்குவரத்து உள்ளிட்ட செலவினங்களை சமாளிக்க, கூட்டுறவு சங்கங்களுக்கு, நிதித்துறை மூலம், ஆண்டுதோறும், குறிப்பிட்ட தொகை, மானியமாக வழங்கப்படும். அதன்படி, இரண்டு ஆண்டு களாக, கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கு, 444 கோடி ரூபாய் மானிய தொகை வழங்க வேண்டும். ஆனால், இந்த தொகை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்படாததால், வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த, 20 ஆயிரம் ரேஷன் கடைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டது.நீண்ட இழுபறிக்கு பின், கடந்த பிப்ரவரி மாதம், 120 கோடி ரூபாய் மானிய தொகை வழங்கப்பட்டது. ஆனால், மீதி தொகையான, 324 கோடி ரூபாய், இதுவரை வழங்கவில்லை. இதனால்,கூட்டுறவு ரேஷன் கடைகளில் பணிபுரியும், 75 ஆயிரம் ரேஷன் ஊழியர்களுக்கு, அடுத்த மாதம் முதல், சம்பளம் வழங்குவதில்சிக்கல்ஏற்பட்டுஉள்ளது.
மீதிதொகைஇல்லைஅரசின் திட்டங்களை, கடை நிலையில் உள்ள மக்களுக்கு கொண்டு செல்லும் பணியை, ரேஷன் கடைகள் செய்கின்றன. ஆனால், கடந்த ஆட்சியில், ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம், இந்த ஆட்சியில் வழங்கப்படவில்லை.இதற்கு, நிதி, உணவு, கூட்டுறவு துறைகளின் அலட்சியமே காரணம். 'கடந்த பிப்ரவரியில், 120 கோடி ரூபாயும், மார்ச் மாதம், முழு தொகையும் வழங்கப்படும்' என, நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்; ஆனால், மீதி தொகை இதுவரை வழங்கவில்லை.
முதல்வருக்குகடிதம்கூட்டுறவு சங்கங்களின் தலைவர் மற்றும் துணை தலைவர்களாக, ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் உள்ளனர். நிதி நெருக்கடி யில் சிக்கியுள்ள ரேஷன் கடைகளின் வளர்ச்சிக்கு, இவர்களால், எதுவும் செய்ய முடியவில்லை.நிதி நிலைமை குறித்த தகவல்களை, முதல்வர் ஜெயலலிதாவின், கவனத்துக்கு கொண்டு செல்ல, அதிகாரிகளும் தயங்குகின்றனர். இதையடுத்து, ரேஷன் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒவ்வொருவரும், 'எங்கள் வாழ்வை காப்பாற்றுங்க!' என்ற தலைப்பில், முதல்வருக்கு, கடிதம் அனுப்பி வருவதாக கூறப்படுகிறது. அக்கடிதங்கள் முதல்வர் கவனத்திற்கு செல்கின்றனவா என்பது தெரியவில்லை.    -தின மலர்.

No comments: