BSNLEU ????? ???????? ?????? ?????? ???????????

Welcome

Welcome

Dist. E.C. 2.2.17

Dist. E.C. 2.2.17

Saturday, 2 August 2014

மானியங்களை வெட்டுவோம்! அருண் ஜெட்லி அபாயச்சங்கு..

நிதிப்பற்றாக்குறையை சமாளிப்பது என்ற பெயரில் மானியங்களை வெட்ட அரசு முடிவு செய்துள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி இதைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, நாடாளுமன்றத்தில் வெள்ளியன்று அருண்ஜெட்லி அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறியுள்ளதா வது:நிதிப்பற்றாக்குறையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும், மானியங்கள் தகுதியுடையவர்களுக்கு கிடைக்கவும் வழி செய்யும் படியாக மானியக் குறைப்புமேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காகஅரசு ‘செலவு மேலாண்மை ஆணையம்’ ஒன்றை அமைக்கவும் திட்டமிட்டுள் ளது. இந்த ஆணையத்தின் முக்கியப் பணியே மானியக் குறைப்பு குறித்த சட்டமுன்வரைவை கொண்டு வருவதாகும். 2013-14ம் ஆண்டில் தேசிய சராசரி உற்பத்தியில் 2.2 விழுக்காடாக உள்ள மானியத்தை 2014-15ற்குள் 2.03 விழுக்காடாக குறைப்பதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்படுகின்றன. வரும் 2015-17 ஆண்டுகளுக்குள் 1.6 விழுக்காடாக குறைந்துவிடும். இவ்வாறு கூறியுள்ளார்.
நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க நிலுவையிலுள்ள வரிகளை வசூலிக்கலாமே? என்ற கேள்வி ஒன்றுக்கு, “நிதி பற்றாக்குறை என்பது அரசின் செலவினங்கள் கட்டுப்பாடின்றி போகும்போதே ஏற்படுகின்றது. அப்போது வருமானம் உயராது” என்று ஒரு விளக்கத்தையும் அவர் வழங்கினார்.அரசு வழங்கும் மானியங்கள், ‘தகுதியற்றவர்களுக்கு’ தற்போது சென்று கொண்டிருப்பதாக கூறிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ‘தகுதியற்றவர்கள்’ பலன் பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.உணவுப்பொருட்கள், எரிபொருட்கள், விவசாயம், கல்வி, சுகாதாரம், கிராமப்புற வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரத்திட்டங்களுக்கு அரசு அளித்து வரும் மானியங்களை சரமாரியாக வெட்டிக்குறைக்கவும், படிப்படியாக மானியத்தையே ஒழித்துக்கட்டவும் நரேந்திர மோடி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதை பகிரங்கமாகவே அருண் ஜெட்லி தனது பதிலுரையில் தெரிவித் துள்ளார்.
கடந்த ஓரிரு நாட்களாக நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்துவோரின் செல்போன் எண்களுக்கு, ‘நீங்கள் நாட்டின் சிறந்த குடிமகன் என்றால், மானிய விலையில்சிலிண்டர் வாங்குவதை நிறுத்திக்கொள்ளுங்கள்’ என்று குறுஞ்செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. மானியத்துடன் கூடியசமையல் எரிவாயு சிலிண்டரை பெறு பவர்களை தேசவிரோதிகளாக சித்தரிக்கும் விதமாக இத்தகைய குறுஞ்செய்திகள் அரசுத்தரப்பிலிருந்து அனுப்பப்பட்டு வருகின்றன. எரிபொருள் மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் மானியத்தை வெட்டுவதும், மானியத்துடன் கூடிய பொருட்களை வாங்குவோரை குற்றம் சாட்டுவதும் என மோசமான பாதையில் மோடி அரசு தீவிரமாக நடைபோடத் துவங்கிவிட்டது என்பதையே அருண்ஜெட்லியின் பதிலுரை உணர்த்தியுள்ளது.
முதலாளிகள் சொல்வதை மோடி அரசு செய்கிறது-பேராசிரியர் பிரபாத் பட்நாயக் குற்றச்சாட்டு
நாட்டில் கோடிக்கணக்கான ஏழை, எளிய விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கிவரும் ‘மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலை உத்தரவாத சட்டத்தை’ ஒழித்துக்கட்டுவதற்கு நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு முயற்சித்து வருகிறது என பிரபல பொருளாதார அறிஞர் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் கூறினார்.மோடி அரசின் முதல்பட்ஜெட்டிலேயே இது அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது என்றும், நடப்பாண்டு குறைந்தபட்சம் தேசிய கிராமப்புற வேலை உத்தரவாதத்திட்டத் திற்கு ரூ.42 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்றும், ஆனால், வெறும் ரூ.34 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் விவரித்தார்.தெலுங்கானாவின் வாரங்கல் நகரில் நடைபெற்று வரும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 8வது அகில இந்திய மாநாட்டை துவக்கி வைத்து பேராசிரியர் பிரபாத் பட்நாயக் உரையாற்றினார்மாநாட்டைதுவக்கி வைத்து பேசிய பிரபாத் பட்நாயக், நமதுநாட்டின் கோடானு கோடி மக்கள் பட்டினியின் பிடியில் சிக்கியிருப்பதற்கு அடிப்படைக் காரணம் பன்னாட்டு நிதி மூலதனத்தின் லாப வேட்கையே எனக்குறிப்பிட்டார்.பன்னாட்டு பெரும் முதலாளிகளின் இந்த நிதி மூலதனத்திற்கு மேலும் மேலும் லாபத்தை வாரி வழங்குவதற்காக இந்தியாவில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசாங்கமும் சரி, தற்போதைய மோடி அரசாங்கமும் சரி தீவிரமாக பணியாற்றி வருகின்றன எனக்குறிப்பிட்ட அவர், இதன் விளைவாக விவசாயிகளும், விவசாயத்தொழிலாளர்களும் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார். இந்திய ஏழைகளுக்கு மானியம் வழங்காதே என்று பன்னாட்டு பெரும் நிறுவனங்களும், பெரும் முதலாளிகளின் நிதி மூலதனமும் உத்தரவு போடுகின்றன; அதை ஏற்று இங்குள்ள அரசாங்கம் மானியத்தை ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறது என்றும் பிரபாத் பட்நாயக் குறிப்பிட்டார்.

UPSC- தேர்வை தமிழில் நடத்துக! CPI(M) வலியுறுத்தல்...

மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வினை தமிழ் உள்பட அவரவர் தாய்மொழியில் நடத்திட வேண்டு மென   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர்   ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
IAS, IPS உள்ளிட்ட மத்திய அரசின் உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்துகிறது. மூன்று நிலைகளைக் கொண்ட இந்தத் தேர்வில் முதல் இரண்டு நிலைகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே கேள்வித்தாள்கள் இருப்பதால் ஆங்கிலத்தில் புரியாத கேள்விகளை இந்தி பேசும் மாநில மாணவர்கள் இந்தியில் படித்து புரிந்து விடையளிக்கும் வாய்ப்பினை பெறும் நிலை உள்ளது. ஆனால், தமிழ் உட்பட பிற தாய்மொழி பேசும் மாணவர்களுக்கு தங்கள் மொழியில் படித்துப் புரிந்து விடையளிக்கும் வாய்ப்பு இல்லை. இதனால் இந்தி அல்லாத தமிழ் உள்ளிட்ட பிறதாய்மொழி பேசும் மாணவர் களின் தேர்ச்சிக்குரிய மதிப்பெண்விகிதம் குறைகிறது.இதுபோல 2011ம் ஆண்டு முன்பிருந்த விருப்பப்பாடத்தாள் நீக்கப்பட்டு, அதற்குபதிலாக சிசாட் எனப்படும் சிவில் சர்வீஸ் திறனறித்தேர்வு சேர்க்கப்பட்டுள்ளது. சிசாட் தேர்வில் ஆங்கில மொழிக்கும், ஆய்வுத்திறனுக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், ஆங்கில வழிக்கல்வி பயிலாத தமிழ் உள்ளிட்ட தாய்மொழி வழிக்கல்வி மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.எனவே, சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வில் தமிழ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட பிற தாய்மொழிகளில் வினாத்தாள்கள் அமைவதையும், சிசாட் - திறனறிவுத் தேர்வில் தமிழ் உள்ளிட்ட தாய்மொழி வழிக்கல்வி மற்றும் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் மத்திய அரசு உறுதி செய்திட வேண்டுமென்றும், இதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது

ஆகஸ்டு- 1 நினைவு நாள்

1906-ல் தேசத் துரோகக் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி மீண்டும் திலகரை பர்மாவில் உள்ள மண்டலே சிறையிலடைத்தது ஆங்கிலேய அரசு. அப்போது கீதாரகசியா என்னும் நூலை எழுதினார். சிறையிலிருந்து வெளிவந்த திலகர் தீவிரவாதிகளையும் மிதவாதிகளையும் ஒன்றிணைக்கப் போராடினார். ஆனால் அவரது எண்ணம் ஈடேறவில்லை. 1916-ல் ஹோல் ரூல் இயக்கத்தைத் தொடங்கி இந்தியா முழுவதும் கிராமம் கிராமமாகச் சென்றார். 1919-ல் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் திலகரைக் கடுமையாகப் பாதித்தது. 1920-ம் ஆண்டு ஆகஸ்டு 1 அன்று திலகர் காலமானார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பம்பாயில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.  

நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது இலங்கை . . .

இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்ட அவதூறான கட்டுரை க்காக, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இலங்கை அந்த நாட்டு அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது.
இலங்கை அரசின் நெறியற்ற இச் செயல்பாட்டை நாமும் கண்டிக்கின்றோம்.

Friday, 1 August 2014

வேலூர் தோழர்களின் நீதி கோரும் போராட்டம். . .

அருமைத் தோழர்களே! இன்று 01.08.2014 வெள்ளியன்று வேலூர் BSNL மாவட்ட நிர்வாகம் திடிரென 140 ஒப்பந்த ஊழியர்களை தன்னிச்சையாக வேலை நீக்கம் செய்து இருக்கிறது. இப்படிப்பட்ட GM-VLR அராஜக போக்கை நாம் அனுமதிக்க முடியாது என வேலூர்  BSNLEU + TNTCWU இரு மாவட்ட சங்கங்களும் உண்ணாவிரதத்தில் ஈடு பட்டுள்ளனர். வேலூர் தோழர்களின் நீதி கோரும் போராட்டம் வெற்றி பெற BSNLEU மதுரை மாவட்டச் சங்கம் உளப்பூர்வமான, தோழமைபூர்வமான போராட்ட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

மாமனிதர்- தோழர் சுர்ஜித் நினைவு நாள்-Aug-1 (1916-2007)

1964ம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினராகச் செயல்பட்டு வந்த ஹர்கிஷன் சிங் சுர்ஜித், 1992ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14வது மாநாட்டில் பொதுச் செயலாளராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார்.அவர் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய 1992-2004ம் ஆண்டுக் காலத்தில் கட்சியின் பெருமையையும், புகழையும் இந்திய அரசியல் அரங்கில் வெகுவாக உயர்த்தினார்.குறிப்பாக, அமெரிக்க எகாதிபத்தியத்தின் சதிச் செயல்களுக்கெதிராக, இந்துத்துவா மதவெறியர்களுக்கெதிராக, பிற்போக் காளருக்கெதிராக நாட்டு மக்களை ஒன்று படுத்துவதில், ஜனநாயகக் கட்சிகளைத் திரட்டுவதில் அவர் ஆற்றிய பங்கு அளப் பரியது.மதவாதக் கட்சிகள் மற்றும் அதன் பரிவாரங்களுக் கெதிராக, மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகளை திரட்டுவதில் அவர் ஆற்றிய பங்கின் விளைவாகத்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்திய ஆட்சியில் அமர்ந்துள்ளது என்பதை யாரும் மறக்க முடியாது.நாட்டின் இறையாண்மை, பொருளா தாரச் சுயசார்பு, பொதுத்துறை பாது காப்பு, சிறுபான்மை மக்களின் உரிமை போன்றவற்றிற்காக, தொழிலாளி வர்க்கத்தின், விவசாயி மக்களின் நலன் காக்க அவர் எழுப்பிய முழக்கம் இன் றும் நமது செவிகளில் ஒலித்துக் கொண் டிருக்கிறது.
பிரகாஷ் காரத் அவரது பணியை சுட்டிக் காண்பிக் கிறார்.“கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில், சுர்ஜித், சர்வதேச வர்க்க சக்திகளின் சேர்மானம் மாறி யிருந்த புதிய நிலைமைக்கேற்ப தன்னை வடிவமைத்துக் கொள்ளும் கட்சியின் முயற்சிகளுக்கு தலைமை தாங்கி வழிகாட்டினார். சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுகளிலிருந்து எவ் வித சிராய்ப்பும் இன்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவெடுத்ததானது அவருடைய தலைமைக்கு சான்று பகரும். புதிய நிலைமைகளையும், சாவல்களையும் சந்திக்கும் விதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அதனுடைய கட்சித் திட்டத்தை மேம்படுத்தியது. இந்த மேம் படுத்தப்பட்ட திட்டத்தின் நகலை தயாரித்த திட்ட குழுவிற்கு சுர்ஜித் தலைவராக இருந்தார்.“தோழர் சுர்ஜித்தின் பங்கானது, கட்சித் தலைவர் என்பதைவிட மிகவும் விரிந்ததாகும்.
அவருடைய தாக்கம் தேசிய மட்டத்தில் உணரப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறை யில் அவர், பாரதிய ஜனதா கட்சியை தூரத்தில் வைப்பது என்ற கட்சியின் நடைமுறைக் கொள்கை வழியை நிறைவேற்றும் பொறுப்பில் வைக்கப்பட்டார். அவரு டைய ஓய்வறியா முயற்சிகளின் காரண மாகத்தான் 1996ம் ஆண்டில் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை உருவாக்கும் பொருட்டு காங்கிரசல்லாத மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றாகத் திரட்டப்பட்டன.“முன்னதாக, அவர் 1989ம் ஆண்டில் வி.பி.சிங் தலைமை யில் தேசிய முன்னணி அரசாங்கம் அமைக்கப்படுவதில் முக்கியப் பங்காற்றினார். பாபர் மசூதி தகர்க்கப்பட்ட இருண்ட காலகட்டத்தில் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளாலும் ஒரு தேசியத் தலைவரின் கருத்துக்கள் மரியாதையுடன் கேட்கப்பட்டதென்றால் அது தோழர் சுர்ஜித்தினுடையதுதான். இந்துத்துவா சக்திகளின் தாக்குதலைச் சந்தித்து மதச்சார்பின்மைக் கொடியை உயர்த்திப் பிடித்ததற்காக நாடு, அவருக்கு மிகவும் கடன் பட்டிருக்கிறது.
(என்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளமாமனிதர் சுர்ஜித் என்ற நூலிலிருந்து)

BSNL + MTNL சேவையை பயன்படுத்த ONGC- ஒப்பந்தம். . .

BSNL-MTNL in pact with ONGC to provide telecom services for 5 years
                                

                                            ONGC has entered into agreement with BSNL and MTNL 
                                        as they are providing complete telecom solution based on 
                                                            latest available technology. 

NEW DELHI: BSNL and MTNL today said they have inked a 5-year pact with ONGC to provide all telecom services to the state-owned oil firm on a pan-India basis.
"A tripartite MoU was signed among ONGC, BSNL and MTNL on July 28 at ONGC orporate Office for providing all telecom services such as basic telephones, mobile services, leased circuits including VSAT services to ONGC on pan India basis, including service areas of MTNL at Delhi and Mumbai," BSNL and MTNL  said in a joint statement.
Financial and other details related to the deal was not disclosed. 
"The MoU (Memorandum of Understanding) was signed by Shashi Shankar,Director (T&FS) ONGC,
 A. N. Rai, CMD BSNL and A. K. Purwar, CMD MTNL for a period of five years up toMarch 2019," the statement said.
ONGC has entered into agreement with BSNL and MTNL as they are providing complete telecom solution based on latest available technology all across country including remotest corners from Kashmir to Kanyakumari, it added.  
இது ஒரு நல்ல + நம்பிக்கையான சமிக்கையாகும்.
அருமைத் தோழர்களே! நமது இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான  ONGC (ஆயில் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்), நமது BSNL + MTNL நிறுவனங்களுடன், டெலிகாம் சேவையை பயன்படுத்த புர்ந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தடையில்லா சிறந்த சேவையை  BSNL+MTNL வழங்கி வருவதால் தான் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது என்று ONGC நிறுவனம்  தனது அறிக்கையில் கூறியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும். 

மாநில அளவிலான JACஅமைப்பும்-அறைகூவலும்...

அருமைத் தோழர்களே! நமது மதுரை மாவட்டத்திலும் JAC கூடி எதிர்வரும் 07.08.14 கோரிக்கை அட்டை அணிந்து, மதிய உணவு வேளை ஆர்ப்பாட்டத்தை மிக சக்தியாக நடத்துவது என முடிவு செய்யபட்டுள்ளது, அனைத்து கிளைகளுக்கும்  கோரிக்கை நோட்டிசும், கோரிக்கை(பேட்ஜ்) அட்டையும் அனுப்பி வைக்கப்படும். கிளைச் சங்கங்கள் இப்போதிருந்தே தயார்நிலை படுத்தவேண்டுகிறோம்.
---- என்றும் தோழமையுடன் .... எஸ். சூரியன் ---D/S-BSNLEU.