Saturday 2 August 2014

மானியங்களை வெட்டுவோம்! அருண் ஜெட்லி அபாயச்சங்கு..

நிதிப்பற்றாக்குறையை சமாளிப்பது என்ற பெயரில் மானியங்களை வெட்ட அரசு முடிவு செய்துள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி இதைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, நாடாளுமன்றத்தில் வெள்ளியன்று அருண்ஜெட்லி அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறியுள்ளதா வது:நிதிப்பற்றாக்குறையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும், மானியங்கள் தகுதியுடையவர்களுக்கு கிடைக்கவும் வழி செய்யும் படியாக மானியக் குறைப்புமேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காகஅரசுசெலவு மேலாண்மை ஆணையம்ஒன்றை அமைக்கவும் திட்டமிட்டுள் ளது. இந்த ஆணையத்தின் முக்கியப் பணியே மானியக் குறைப்பு குறித்த சட்டமுன்வரைவை கொண்டு வருவதாகும். 2013-14ம் ஆண்டில் தேசிய சராசரி உற்பத்தியில் 2.2 விழுக்காடாக உள்ள மானியத்தை 2014-15ற்குள் 2.03 விழுக்காடாக குறைப்பதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்படுகின்றன. வரும் 2015-17 ஆண்டுகளுக்குள் 1.6 விழுக்காடாக குறைந்துவிடும். இவ்வாறு கூறியுள்ளார்.
நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க நிலுவையிலுள்ள வரிகளை வசூலிக்கலாமே? என்ற கேள்வி ஒன்றுக்கு, “நிதி பற்றாக்குறை என்பது அரசின் செலவினங்கள் கட்டுப்பாடின்றி போகும்போதே ஏற்படுகின்றது. அப்போது வருமானம் உயராதுஎன்று ஒரு விளக்கத்தையும் அவர் வழங்கினார்.அரசு வழங்கும் மானியங்கள், ‘தகுதியற்றவர்களுக்குதற்போது சென்று கொண்டிருப்பதாக கூறிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ‘தகுதியற்றவர்கள்பலன் பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.உணவுப்பொருட்கள், எரிபொருட்கள், விவசாயம், கல்வி, சுகாதாரம், கிராமப்புற வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரத்திட்டங்களுக்கு அரசு அளித்து வரும் மானியங்களை சரமாரியாக வெட்டிக்குறைக்கவும், படிப்படியாக மானியத்தையே ஒழித்துக்கட்டவும் நரேந்திர மோடி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதை பகிரங்கமாகவே அருண் ஜெட்லி தனது பதிலுரையில் தெரிவித் துள்ளார்.
கடந்த ஓரிரு நாட்களாக நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்துவோரின் செல்போன் எண்களுக்கு, ‘நீங்கள் நாட்டின் சிறந்த குடிமகன் என்றால், மானிய விலையில்சிலிண்டர் வாங்குவதை நிறுத்திக்கொள்ளுங்கள்என்று குறுஞ்செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. மானியத்துடன் கூடியசமையல் எரிவாயு சிலிண்டரை பெறு பவர்களை தேசவிரோதிகளாக சித்தரிக்கும் விதமாக இத்தகைய குறுஞ்செய்திகள் அரசுத்தரப்பிலிருந்து அனுப்பப்பட்டு வருகின்றன. எரிபொருள் மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் மானியத்தை வெட்டுவதும், மானியத்துடன் கூடிய பொருட்களை வாங்குவோரை குற்றம் சாட்டுவதும் என மோசமான பாதையில் மோடி அரசு தீவிரமாக நடைபோடத் துவங்கிவிட்டது என்பதையே அருண்ஜெட்லியின் பதிலுரை உணர்த்தியுள்ளது.
முதலாளிகள் சொல்வதை மோடி அரசு செய்கிறது-பேராசிரியர் பிரபாத் பட்நாயக் குற்றச்சாட்டு
நாட்டில் கோடிக்கணக்கான ஏழை, எளிய விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கிவரும்மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலை உத்தரவாத சட்டத்தைஒழித்துக்கட்டுவதற்கு நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு முயற்சித்து வருகிறது என பிரபல பொருளாதார அறிஞர் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் கூறினார்.மோடி அரசின் முதல்பட்ஜெட்டிலேயே இது அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது என்றும், நடப்பாண்டு குறைந்தபட்சம் தேசிய கிராமப்புற வேலை உத்தரவாதத்திட்டத் திற்கு ரூ.42 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்றும், ஆனால், வெறும் ரூ.34 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் விவரித்தார்.தெலுங்கானாவின் வாரங்கல் நகரில் நடைபெற்று வரும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 8வது அகில இந்திய மாநாட்டை துவக்கி வைத்து பேராசிரியர் பிரபாத் பட்நாயக் உரையாற்றினார்மாநாட்டைதுவக்கி வைத்து பேசிய பிரபாத் பட்நாயக், நமதுநாட்டின் கோடானு கோடி மக்கள் பட்டினியின் பிடியில் சிக்கியிருப்பதற்கு அடிப்படைக் காரணம் பன்னாட்டு நிதி மூலதனத்தின் லாப வேட்கையே எனக்குறிப்பிட்டார்.பன்னாட்டு பெரும் முதலாளிகளின் இந்த நிதி மூலதனத்திற்கு மேலும் மேலும் லாபத்தை வாரி வழங்குவதற்காக இந்தியாவில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசாங்கமும் சரி, தற்போதைய மோடி அரசாங்கமும் சரி தீவிரமாக பணியாற்றி வருகின்றன எனக்குறிப்பிட்ட அவர், இதன் விளைவாக விவசாயிகளும், விவசாயத்தொழிலாளர்களும் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார். இந்திய ஏழைகளுக்கு மானியம் வழங்காதே என்று பன்னாட்டு பெரும் நிறுவனங்களும், பெரும் முதலாளிகளின் நிதி மூலதனமும் உத்தரவு போடுகின்றன; அதை ஏற்று இங்குள்ள அரசாங்கம் மானியத்தை ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறது என்றும் பிரபாத் பட்நாயக் குறிப்பிட்டார்.

No comments: