மேற்குவங்கத்தை உலுக்கி வரும் சாரதா சீட்டுக் கம்பெனி ஊழல் விவகாரத்தில் அடுத்தடுத்த முக்கியப் புள்ளி கள் சிக்கி வருகின்றன. இந்நிலையில் இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் என ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில், பிரபல வங்காள நடிகை அபர்ணா சென் மற்றும் மம்தா அரசின் ஜவுளித்துறை அமைச்சர் சியாமா முகர்ஜி ஆகியோரிடம் திங்களன்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.மேற்குவங்கத்தில் லட்சக்கணக்கான மக்களின் சிறுசேமிப்புப் பணத்தை சூறையாடியுள்ள சாரதா சீட்டுக்கம் பெனி ஊழல் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தஊழலில் ஆளும் திரிணாமுல் காங்கிர சின் முக்கியத் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலருக்கும் உள்ள தொடர்பு அம்பலமாகியுள்ளது.
முதலமைச்சர் மம்தாவுக்கும் இதில் உள்ள தொடர்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால் விசாரணையை முடக்குவதற்கு மாநில அரசு முயற்சித் துள்ளது. இந்நிலையில் இந்த ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை துவங்கி நடந்து வருகிறது.இந்தப் பின்னணியில் மக்களிடம் வசூலித்த சிறுசேமிப்புப் பணம் கோடிக்கணக்கான ரூபாயை சூறையாடி ஏப்பம்விட்ட குற்றத்தில் பிரபல நடிகை அபர்ணா சென் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர், மேற்கண்ட சாரதா சீட்டுக் குழுமம் நடத்தி வந்த ஒரு பத்திரிகையின் ஆசிரியராக செயல்பட்டு வந்துள்ளார். பணம் கைமாறியதில் அவருக்கும் தொடர்பிருக்கலாம் என கிடைத்த விவரங்களின் அடிப்படையில் அமலாக்கப்பிரிவு அதி காரிகள் திங்களன்று அவரிடம் விசாரணை நடத்தினர்.அமலாக்கப்பிரிவு விசாரணை வளையத்திற்குள் சிக்கியிருக்கும் மற் றொரு பிரமுகர் மாநில ஜவுளித்துறை அமைச்சர் சியாமா முகர்ஜி ஆவார்.
இவர் மேற்கண்ட சாரதா குழுமத்தின் சில முக்கிய சொத்துக்களை விற்று பணமாக்கியுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.சாரதா சீட்டுக் கம்பெனி மேற்குவங்கம் மட்டுமின்றி ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் உள்ள மக்களிடமும் பணத்தை சூறையாடியுள்ளது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இம்மூன்று மாநிலங்களிலும் ஐம்பதுக்கும் மேற் பட்ட இடங்களில் இந்தக் கம்பெனி தொடர்புடைய நபர்களின் இல்லங்கள் மற்றும் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. (பிடிஐ).
No comments:
Post a Comment