அருமைத் தோழர்களே!மதுரை மாவட்டத்தில் NFTE சங்கம் அனைத்து சங்கங்களும் சேர்ந்தெடுத்த முடிவை காலில் போட்டு மிதித்து, உண்மையை மறைத்து தவறான செய்திகளை பரப்பிவருகிறது கடந்த 2007-2008 ஆண்டு முதல் காலம் காலமாக கொடைக்கானல் HILLS பகுதியில் அமலாகிவரும் மாற்றல் உண்மையை மூடி மறைத்து, ஏதோ டெண்யூர் முடித்தவர்களுக்கு மாற்றல் மறுக்கப்படுவதுபோல் நீலிக்கண்ணீர் வடித்து நாடகம் ஆடுகிறது. உண்மை அதுவல்ல என்பது மதுரை மாவட்டத்தில் உள்ள அத்தனை சங்கங்களுக்கும் அறிந்த உண்மை. பிரச்சனை அதுவல்ல மலைப்பகுதியில் டெண்யூர் முடித்தவர்களை கீழே மாற்றலில் வரவிடாமல் தடுத்துக் கொண்டிருப்பது NFTE சங்கம் தான் என்பது வெள்ளிடைமலை. காரணம் மலைப்பகுதிக்கு மாற்றலில் செல்லவிருப்பவர்கள் 3 பேரில் 2பேர் BSNLEU, ஒருவர் மட்டும் தான் NFTE, அதாவது O.மச்சகாளைக்கு மாற்றல் மலைப்பகுதிக்கு போடக்கூடாது என்ற திட்டத்தில் தான், மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்கவேண்டியவர்களை NFTE சங்கம் தடுத்து நிறுத்திக் கொண்டுள்ளது என்பதை இனியேனும் அந்த அப்பாவி ஊழியர்கள் உணரட்டும். NTFE சங்கத்தின் இந்த நிலைபாட்டை நினைத்தால் நமக்கு பழைய பாடல் தான் நினைவுக்கு வருகிறது......எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் ....
1 comment:
தோழர் மச்சக்காளை ஏற்கனவே மலைப்பகுதியில் வேலைபார்த்ததால் அவருக்கு மறுபடியும் கொடுக்கவேண்டுமா தோழரே?
Post a Comment