Friday 1 August 2014

மாமனிதர்- தோழர் சுர்ஜித் நினைவு நாள்-Aug-1 (1916-2007)

1964ம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினராகச் செயல்பட்டு வந்த ஹர்கிஷன் சிங் சுர்ஜித், 1992ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14வது மாநாட்டில் பொதுச் செயலாளராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார்.அவர் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய 1992-2004ம் ஆண்டுக் காலத்தில் கட்சியின் பெருமையையும், புகழையும் இந்திய அரசியல் அரங்கில் வெகுவாக உயர்த்தினார்.குறிப்பாக, அமெரிக்க எகாதிபத்தியத்தின் சதிச் செயல்களுக்கெதிராக, இந்துத்துவா மதவெறியர்களுக்கெதிராக, பிற்போக் காளருக்கெதிராக நாட்டு மக்களை ஒன்று படுத்துவதில், ஜனநாயகக் கட்சிகளைத் திரட்டுவதில் அவர் ஆற்றிய பங்கு அளப் பரியது.மதவாதக் கட்சிகள் மற்றும் அதன் பரிவாரங்களுக் கெதிராக, மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகளை திரட்டுவதில் அவர் ஆற்றிய பங்கின் விளைவாகத்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்திய ஆட்சியில் அமர்ந்துள்ளது என்பதை யாரும் மறக்க முடியாது.நாட்டின் இறையாண்மை, பொருளா தாரச் சுயசார்பு, பொதுத்துறை பாது காப்பு, சிறுபான்மை மக்களின் உரிமை போன்றவற்றிற்காக, தொழிலாளி வர்க்கத்தின், விவசாயி மக்களின் நலன் காக்க அவர் எழுப்பிய முழக்கம் இன் றும் நமது செவிகளில் ஒலித்துக் கொண் டிருக்கிறது.
பிரகாஷ் காரத் அவரது பணியை சுட்டிக் காண்பிக் கிறார்.“கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில், சுர்ஜித், சர்வதேச வர்க்க சக்திகளின் சேர்மானம் மாறி யிருந்த புதிய நிலைமைக்கேற்ப தன்னை வடிவமைத்துக் கொள்ளும் கட்சியின் முயற்சிகளுக்கு தலைமை தாங்கி வழிகாட்டினார். சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுகளிலிருந்து எவ் வித சிராய்ப்பும் இன்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவெடுத்ததானது அவருடைய தலைமைக்கு சான்று பகரும். புதிய நிலைமைகளையும், சாவல்களையும் சந்திக்கும் விதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அதனுடைய கட்சித் திட்டத்தை மேம்படுத்தியது. இந்த மேம் படுத்தப்பட்ட திட்டத்தின் நகலை தயாரித்த திட்ட குழுவிற்கு சுர்ஜித் தலைவராக இருந்தார்.“தோழர் சுர்ஜித்தின் பங்கானது, கட்சித் தலைவர் என்பதைவிட மிகவும் விரிந்ததாகும்.
அவருடைய தாக்கம் தேசிய மட்டத்தில் உணரப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறை யில் அவர், பாரதிய ஜனதா கட்சியை தூரத்தில் வைப்பது என்ற கட்சியின் நடைமுறைக் கொள்கை வழியை நிறைவேற்றும் பொறுப்பில் வைக்கப்பட்டார். அவரு டைய ஓய்வறியா முயற்சிகளின் காரண மாகத்தான் 1996ம் ஆண்டில் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை உருவாக்கும் பொருட்டு காங்கிரசல்லாத மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றாகத் திரட்டப்பட்டன.“முன்னதாக, அவர் 1989ம் ஆண்டில் வி.பி.சிங் தலைமை யில் தேசிய முன்னணி அரசாங்கம் அமைக்கப்படுவதில் முக்கியப் பங்காற்றினார். பாபர் மசூதி தகர்க்கப்பட்ட இருண்ட காலகட்டத்தில் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளாலும் ஒரு தேசியத் தலைவரின் கருத்துக்கள் மரியாதையுடன் கேட்கப்பட்டதென்றால் அது தோழர் சுர்ஜித்தினுடையதுதான். இந்துத்துவா சக்திகளின் தாக்குதலைச் சந்தித்து மதச்சார்பின்மைக் கொடியை உயர்த்திப் பிடித்ததற்காக நாடு, அவருக்கு மிகவும் கடன் பட்டிருக்கிறது.
(என்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளமாமனிதர் சுர்ஜித் என்ற நூலிலிருந்து)

No comments: