Wednesday, 13 August 2014

பாதுகாப்புத்துறையில், இன்சூரன்ஸ் 49% அந்நிய முதலீடு.

அருமைத் தோழர்களே! மத்திய பாஜக அரசு நமது நாட்டின் அதிமுக்கிய துறைகளான பாதுகாப்புத்துறையில், இன்சூரன்ஸ் துறையில்  49%(FDI) அந்நிய முதலீடு  என்ற தேச விரோத, மக்கள் விரோத கொள்கையை அறிவித் துள்ளதை கண்டித்து நாடு முழுமைக்கும் இந்திய தேசத்தை நேசிக்கின்ற ஜனநாயக சக்திகள் போராடிவருகின்றன. அதன்  ஒரு பகுதியாக மதுரை நகரில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக 12.08.14 அன்று மாலை 6 மணிக்கு ஜான்சி ராணி பூங்கா அருகே CITU சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்ட செயலர் தோழர்.தெய்வராஜ் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மிகவும் சக்தியாக நடைபெற்றது.

இவ் ஆர்பட்டத்தில் CITU, AIIEA, TNGEA, BEFI, TANSAG மற்றும் நமது BSNLEU போன்ற சங்கங்கள் கலந்துகொண்டன. நமது சங்கத்தின் சார்பாக 30 க்கும் மேற்பட்ட தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில கலந்து கொண்டு தோழமையை நல்கினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் 40 பெண்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன குரல் எழுப்பினர். இறுதியாக யுடைய தமிழ் மாநில துணை பொதுச் செயலர் தோழர். கருமலையான் அவர்கள் சிறப்பானதொரு நிறைவுரை நிகழ்த்தினார்.

No comments: