Saturday, 30 August 2014

மதுரை புத்தகத் திருவிழா தொடங்கியது

மதுரை 9வது புத்தக கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.  தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ( பபாசி ) சார்பில் நடைபெறும் மதுரை 9 வது புத்தகத்திருவிழாவை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகத்திருவிழா தொடக்கவிழா வெள்ளியன்று மாலை நடைபெற்றது. நல்லிகுப்புசாமி விழாவிற்கு தலைமை வகித்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க மெ.மீனாட்சி சோமசுந்தரம் வரவேற்புரையாற்றினார். மதுரை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். திரைப்பட இயக்குநர் மிஷ்கின் கருத்துரையாற்றினார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க செயலாளர் கே.எஸ்.புகழேந்தி நன்றிகூறினார். விழாவில் கரிசல் திருவுடையானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.புத்தகத் திருவிழா செப்டம்பர் 7 ம் தேதி வரை நடைபெறுகிறது.புத்தகத்திருவிழாவில் சனிக்கிழமையன்று மாலை 6 மணியளவில்வாசித்தலே சுவாசித்தல் ’’ என்ற தலைப்பில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,“சங்க இலக்கியக் கொடைஎன்ற தலைப்பில் முனைவர்சுந்தர ஆவுடையப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.பாரதி புத்தகாலய அரங்கு மதுரை புத்தகத்திருவிழாவில் பாரதி புத்தகாலயத்தின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.170 மற்றும் 171 ஆகிய அரங்குகளில் பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு புத்தகங்கள் கிடைக்கும்.

No comments: