Friday, 22 August 2014

சந்தேகம் . . . சிவ . . . . சாமி . . . குரு . . .!!!

சிவா :  அண்ணே ! "All India Transfer " திட்டம் என்ன சொல்லுது  . . .
குரு   :  SSAவி  லேயே யார் ? "Long Standing" ஆக, எந்த ஊரில் இருந்தாலும் அவர்தான் மாற்றலில்     செல்ல வேண்டும்.
சிவா   :  அப்ப ! "All India Transfer " திட்டம் அமலாக்குனு நம்ம  NFTE, சொல்றதில எல்லா கேடருக்கும், எல்லா ஊர்லயும் Transfer பாதிப்பு வரும்ல. . . .
குரு     :   தம்பி ! இந்த விசயத்த  நம்ப   மெம்பருக்கே   அதனாலதான முழுசா சொல்லாம ....கார்பரேட், ...மாநில .... மாற்றல் உத்தரவின்னு கொளப்றோம்.
சிவா  :  அப்பிடின்னா ? எப்பிடிண்ணே ! பிச்சைகண்ணு தான் மாற்றலில் செல்ல வேண்டும்னு            நமது NFTE சொல்லுது. . . 
குரு    :  அதுதான் நமது NFTE சங்கத்தின் "ராஜ"தந்திரம்  தம்பி . . . 
சிவா   :  இப்ப "All India Transfer "திட்டத்தை அமல்படுத்த சொல்ற நமது NFTE, ஏன் ? அண்ணே !              கடந்த 6 ஆண்டுகளாக 3 முறை மாற்றல அனுமதிச்சோம் ....?
குரு      :   தம்பி ! அப்ப  நம்மகிட்ட "இப்ப இருப்பவங்க" அங்க இருந்தாங்கல்ல ...புரியுதா ?
சிவா    :   அண்ணே ! நீங்க குழம்பினது போக ... என்னையும்  குழப்பிரங்கே ...அது சரி !                            மச்சக்காளைய ஏன் ? மாற்றலிடக்கூடாது ....
குரு      :   தம்பி, அவரு 1986-ல RM மாயிருந்து 2 வருஷம் LM ஆக  மலையில வேல பாத்தாருல ....
சிவா    :   அண்ணே ! அவரு மாதிரி மலையில முன்பு LM ஆக இருந்த பெரியசாமியும் திரும்ப            மலைக்கு மாற்றல்ல சென்று வந்திருக்கிறாரே !
குரு      :   தம்பி ! இதான் BSNLEU கார்களிடம் அதிகம் பேசாதேன்னு  அண்ணே  சொல்றது...
சிவா    :  அண்ணே ! நீங்க போட்ட நோட்டிஸ்லேயே அது எழுதிருக்குன்னே, அதவிட்டுட்டு  சும்மா    BSNLEUவை  சொல்லாதிங்கன்னே !
குரு     :    தம்பி ! அந்த நோட்டிஸ் நான் எழுதலன்னு  ஏற்கனவே உன்னகிட்ட சொல்லிருக்கேன்ல..
சிவா    :   அண்ணே ! "All India Transfer" திட்டம் 2010, மதுரை மலைப்பகுதி மாற்றல் திட்டம் 2007-08          என்று இருக்கும்போது, 1986-ல மலைக்கு மாற்றல்ல அதுவும் RM to LM ஆக பதவிஉயர்வில                 சென்றதையும் ஏன்னே ? ஒப்பிடிரிங்க ....
குரு    :   தம்பி ! நா சீரியஸ் ஆயிடுவே, எதுவா இருந்தாலும் நம்ம NFTE சங்கம் சொல்றத                      மட்டுந்தா நம்பனும், புரிஞ்சதா ?
சிவா   :  அண்ணே ! ஏன்னே ...இதுக்குபோயி மாநில அளவுல உண்ணா விரதம் . . . நடக்குமுன்னு      சொல்றீங்க .....
குரு     :   தம்பி ! என்ன நடக்குது ... எப்பிடி...முடிக்கிறம் ... என்றத பொறுத்திருந்து ...பாரு தம்பி !
சிவா   :   அண்ணே ! ஆள விடுன்னே .... இனி உங்க   சங்காத்தமே . . .வேனாமுன்னே . . .!
குரு     :    தம்பி ! .. . நில்லு தம்பி !!.... ஓடாத   தம்பி !!! தப்பித்தவறி  அங்க போயிடாத தம்பி . . .
 ( NFTE மதுரை மாவட்ட சங்கம் தனது வலை தளத்தில் நம்மை தவறாக விமசித்ததால்  இதைஎழுத நேரிட்டது என்பதை தோழமையோடு சொல்லிவைக்கின்றோம்.)

No comments: