Tuesday, 19 August 2014

ஆகஸ்ட் 18 - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்...! நினைவு தினம்...!

1944 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிக்க புறப்பட்ட இந்திய தேசியராணுவ  வீரர்களுக்கு இடையே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய உரை என்னவெனில் . . . .

"அதோ அந்த நதியின் கரைக்கு அப்பால்அந்த அடர்ந்த காடுகளுக்கும் பின்னால்நம் கண்களில்படும் அந்த மலைகளுக்கும்பின்னால் நமக்காக உறுதியளிக்கப்பட்ட அந்த பூமி உள்ளது - எந்த மண்ணில் இருந்து நாம் உயிர்பெற்றோமோ - அந்த பூமியைநோக்கி நாம் திரும்புகிறோம்புறப்படுங்கள்இந்தியா அழைக்கிறது... ரத்தம் ரத்தத்தை அழைக்கிறதுகிளர்ந்தெழுங்கள்உங்கள்ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள்நம்மை அடிமையாக்கிய எதிரிகளின் படைகளை கிழித்துக் கொண்டு நமது பூமிக்குபாதை அமைப்போம் அல்லது இறைவனின் சித்தம் வேறானால் வீரர்களுக்குரிய தியாக மரணத்தை தழுவுங்கள்நமது கடைசிமூச்சில் டெல்லிக்கு செல்லும் நமது பாதைக்கு முத்தமிட்டுவிட்டுச் சாவோம்டெல்லிக்கு செல்லும் பாதைவிடுதலை நோக்கியபாதை.
ஆனால் இந்திய தேசிய ராணுவத்தின் வெற்றியை அப்போது பெய்த பெருமழை தடுத்ததுடன் தோலிவியடைய  செய்ததுஆனால்அப்போதுநேதாஜிவானொலிமூலம்வீரர்களுக்காகஉரையாற்றினார். . . . 

"நமது சரித்திரத்தில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வார்த்தை கூறவிரும்புகிறேன்இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள்நம்பிக்கையுடன் இருங்கள்உங்கள்உணர்வுகளை தளர விடாதீர்கள்எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும்நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள்இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும்ஆற்றல்இந்தஉலகில்எந்தசக்திக்கும்இல்லைநீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. . விரைவில் இந்தியா விடுதலை அடையும்.

இதை அவர் சொன்னது ஆகஸ்ட்-15 1945ம் ஆண்டு சரியாக அதிலிருந்து 2 ஆண்டுகளில் இந்தியா சுதந்திரமடைந்தது

நேதாஜி...! எங்கள் நேதாஜி...!
சுதந்திர வேள்வியில்
காந்திக்கு அப்பாற்பட்டு
மக்களுக்குள் மலர்ந்த மாணிக்கமே..!
பெருங்'குடி'யில் பிறந்ததால்
மக்களைப் பிள்ளைகளாய்
அரவணைத்துச் சென்றாயோ...?
இந்திய தேசிய ராணுவத்தை
பிறப்பித்த பெருமை உனக்கு...
உன்னில் கலந்து உயிர் நீத்த 
பெருமை எம் மறவர்களுக்கு..!
வங்கம் தந்த சிங்கம் 
என்பவர்கள் அறியவில்லை 
நீ பாரதம் பெற்ற பகலவன் என்பதை..! 
இந்தியாவில் பிறந்து... தைவானில் இறந்து...
இன்னும் வாழ்கிறாய்... ஜப்பானில் அஸ்தியாய்..!
ஊழல்கள் மலிந்துவிட்ட நாட்டில்
உத்தமன் உன் அஸ்திக்கு இடமில்லை... 
பாரதி இறப்புக்கு பத்துக்கு மேல்...
உன் அஸ்தி கண்டதோ பத்துக்கு கீழ்... 
உலகம் சுற்றும் தலைவர்களுக்கு
உன் அஸ்தி காண என்ன அசதியோ...?
இருந்தும் வாழ்கிறாய்
எங்கள் இதய சிம்மாசனத்தில்...
தியாகச் சுடராய் மட்டுமல்ல
தீச்சுடராகவும்...! 

No comments: