Thursday, 28 August 2014

அனைத்து ஊழியர்களின் உடனடி கவனத்திற்கு...

அருமைத் தோழர்களே! அனைத்து ஊழியர்களின் உடனடி கவனத்திற்கு......
நமது SSA-யில் ERP பணிகள் நடந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அனைத்து ஊழியர்களும் தங்களது HR மற்றும் SERVIC PARTICULARS, NOMINATION போன்ற அனைத்து விபரங்களையும் சரிபார்த்துக் கொள்ள நிர்வாகத்தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைவரும் தங்களது விபரங்களை அவரவர் "SERVICE BOOK" நேரில் வந்து பார்த்து, ஏதேனும் விபரங்கள் விடுபட்டிருந்தாலும், சேர்க்கவேண்டி இருந்தாலும் உடனடியாக சரிசெய்து கொள்ளவேண்டுகிறோம்.
ERP பணிகள் நடந்தேறி விட்டால் அதன் பின் DATA இணைப்பது மிகவும் சிரமத்திற்குள்ள பிரச்சனையாக மாறிவிடும் என்பதால் தாமதமின்றி இக் காரியத்தை அனைவரும் செய்து முடிக்க வேண்டுகிறோம். 
இப் பணியை நினைவு படுத்தி நமது கிளைச் செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் உடனடியாக வழிகாட்டி உதவிட வேண்டுகிறோம்.
இப் பிரச்சனை அவசர,அவசியம் கருதி செயல் பட வேண்டுகிறோம்.

No comments: