Monday, 25 August 2014

செய்தி . . . துளிகள் . . .

  • டிஜிட்டல் இந்தியா திட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக, தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 69,500 கோடியை மத்திய அரசு முதல் கட்டமாக ஒதுக்கியுள்ளது.நாட்டிலுள்ள 2.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளையும் டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையில் இணைக்க பிராட்பேண்ட், மொபைல்போன் வசதி நெட்வர்க் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவற்றை மேம்படுத்த மத்திய அரசு ரூ. 32,000 கோடி ஒதுக்கியுள்ளது.
  • இதுவரை மொபைல் போன் தொடர்பு வசதி இல்லாத 42,300 கிராமங்களுக்கு மொபைல்போன் கட்டமைப்பு வசதியை அளிக்க ரூ. 16,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் இண்டர்நெட் வசதி அமைக்க ரூ. 4,750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், தேசிய தகவல் கட்டமைப்பை உருவாக்கவும் ரூ. 15,686 கோடி ஒதுக்கப்பட உள்ளது.
  • 2011-12ம் ஆண்டிற்கான வருமானத்தை BSNL நிறுவனம் குறைத்துக் காட்டியதாக கூறி வருமான வரித்துறை 6234 கோடிக்கு வரிகேட்பு அறிவிப்பு செய்துள்ளது. 2011-12ல் BSNL 8850 கோடி நட்டத்தை சந்தித்துள்ளது. இப்பிரச்சினையைத் தீர்ப்பது  பற்றி நமது இலாக்கா அமைச்சர் நிதியமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
  • ஓய்வு பெற்ற தோழர்களுக்கான 78.2 சத IDA இணைப்பு சம்பந்தமாக செலவின இலாக்கா DEPARTMENT OF EXPENDITURE  எழுப்பிய சந்தேகங்களுக்கு 40 நாள் கழித்து DOT தனது பதிலை அனுப்பியுள்ளது.  ஓய்வு பெற்ற, ஓய்வு பெறப்போகும் பல தோழர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை வழக்குகள் பல காலமாகத்தேங்கிக் கிடக்கின்றனஇத்தகைய வழக்குகளை உடனடியாக விரைந்து முடிக்க வேண்டும் என BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.

No comments: