உத்தரகண்ட்
மாநிலத்தில் தொடர் மழை வெள்ளம், நிலச்சரிவு காரணமாக பலி எண்ணிக்கை 30 ஐ தாண்டியுள்ளது. ரிஷிகேஷ் - பத்ரிநாத் சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. இது போல் அசாம் மற்றும் உ . பி., மாநிலத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சில மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. மலை பகுதியில் 900 ஆயிரம் பேர் சிக்கி தவிப்பதாக தெரிய வந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் உத்தரகண்ட் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
புனித தலங்கள் உள்ள உத்தர்காசி, யாம்கேஸ்வர், ஹரித்துவார், ரிஷிகேஷ் பகுதிகள் முழு சேதத்தை சந்தித்திருக்கின்றன. இன்னும் மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் மேலும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பானபகுதிக்குசெல்லுமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரகாலமாக உத்தர்கண்ட் மாநிலத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ராஜ்பூர் பகுதியில் 3 வீடுகள் இடிந்து 7 பேர் பலியாயினர். மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. ரிஷகேஷ் - பத்ரிநாத் சாலை முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சர்தாம் யாத்திரை சென்ற பக்தர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். என்.எச்-70 பாதையில் உள்ள பாலங்கள் பலவீனமாக இருப்பதாக அலர்ட் செய்யப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment