Saturday, 9 August 2014

12.08.14 இந்தியா முழுவதும் BSNL-லில் ஆர்ப்பாட்டம்.

Hold powerful demonstrations on 12.08.2014, against the retrograde report of the Deloittee Committee. The Forum of the Unions and Associations of BSNL, has called upon the employees to hold powerful demonstrations at the Corporate Office, Circle Office and SSA levels on 12.08.2014, against the retrograde recommendations of the Deloittee Committee. CHQ calls upon all the Circle and District Unions to implement the call successfully.  
Deloittee குழுவின் பிற்போக்கு அறிக்கைக்கு எதிராக, 12.08.2014 அன்று இந்திய நாடு முழுவதும் சக்திவாய்ந்த ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டுமாய் BSNLலில் உள்ள அனைத்து ஊழியர்கள் + அதிகாரிகள்  சங்கங்களின் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளதை மதுரை மாவட்டத்தில் போராட்டத்தை மிகவும் சக்தியாக நடத்திட 08.08.2014 மாலை 5.30 மணிக்கு மதுரை மாவட்ட BSNLEU சங்க அலுவலகத்தில் 12.08.2014 ஆர்ப்பாட்ட தயாரிப்பு கூட்டம் NFTE-DS, தோழர்.S.சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் நமது கூட்டமைப்பில் உள்ள சங்கங்களின் நிர்வாகிகள்  இருந்து கீழ்க்கண்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
1.  தோழர்கள்,S.சிவகுருநாதன், K.முருகேசன் - NFTE
2.  தோழர்கள்,C.செல்வின்சத்யராஜ்,S.சூரியன்,S.மாயாண்டி,A.நெடுஞ்செழியன் - BSNLEU
3.  தோழர்கள்,V.K.பரமசிவம்,S.கருப்பையா,A.ஆண்டியப்பன்- AIBSNLEA 
4.  தோழர்கள்,D.மகேஸ்வரி,N.முருகன் -TEPU
5.  தோழர்.M.சந்திரசேகர் -SNEA 
6.  தோழர்.S.முத்துகுமார் -FNTO
கூட்டமைப்பின் கன்வீனரும், BSNLEU மாவட்டச் செயலருமான தோழர். S.சூரியன்  Deloittee  குழுவின் பிற்போக்கு அறிக்கைகுறித்து விவரித்து நமது மத்திய சங்கங்களின் கூட்டமைப்பு விடுத்துள்ள ஆர்ப்பாட்ட அறைகூவலை மதுரை மாவட்டத்தில் சக்தியாக நடத்திட அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் கருத்துக்களை வழங்க வேண்டுமாய் கோரினார். அதன்பின் அனைத்து சங்க நிர்வாகிகளும்,12.08.14 ஆர்ப்பாட்ட போராட்டத்தை மதுரை மாவட்டத்தில் மிகவும் சக்தியாக நடத்துவதற்க்கான ஆலோசனைகளை வழங்கியதோடு, Deloittee  குழுவின்  பிற்போக்கு   அறிக்கை குறித்து ஊழியர்களிடம் விரிவாக எடுத்துச் செல்ல உறுதி பூண்டனர்.
இறுதியாக, 12.08.2014 ஆர்ப்பாட்டத்தை விளக்கி 2500 நோட்டிஸ், 200 லித்தோ போஸ்டர் வெளியிடுவது என்றும், 12.08.14 ஆர்ப்பாட்டத்தை தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மூன்று இடங்களிலும் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.அனைத்து கிளைகளுக்கும் உடனடியாக நோட்டிஸ்,போஸ்டர் அனுப்பி வைக்கப்படும். கிளச்சங்கங்கள் இப்போதிருந்தே திட்டமிட்டு செயலாற்றி 12.08.14 ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக்கிட மதுரை மாவட்ட  கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.  ..... என்றும் தோழமையுடன், எஸ்.சூரியன்.

No comments: