தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை, மோசடியான முறையில் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய தலைமை கணக்காயர் (சிஏஜி) அலுவலகம் தெரிவித்துள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, கடந்த 2007ம் ஆண்டு தொலை தூரத்தில் உள்ள, 27 மாநிலங்களைச் சேர்ந்த 500 மாவட்டங்களுக்கு இணைப்பு கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் டெலிகாம் உள்ளிட்ட 14 நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால், குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்கள், தொலைதூர மாவட்டங்களுக்கு இணைப்பு தரும் விஷயத்தில் விதிமீறல் செய்திருந்தன.இது குறித்த புகாரின் பேரில், அந்த நிறுவனங்களுக்கு 600 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்பெக்டரம் ஊழல் காரணமாக அப்போதைய அமைச்சர் ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார்.அவர் ராஜினாமா செய்த சில நாட்களிலேயே, சத்தமில்லாமல் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை குறைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் அரசுக்கு 595 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதைத் தற்போது சிஏஜி அலுவலகம் கண்டு பிடித்துள்ளது.
No comments:
Post a Comment