Tuesday 12 August 2014

ஆஹா . . .வென ...எழுந்தது 12.08.14 ஆர்ப்பாட்டம்.

அருமைத் தோழர்களே! "Deloittee"குழுவின் பிற்போக்குத் தனமான பரிந்துரை அறிக்கைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம், நமது BSNLலில் உள்ள ஊழியர்கள் + அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் அறைகூவலுக்கு இணங்க மதுரை மாவட்டத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மூன்று இடங்களிலும் பல நுற்றுக்கணக்கான அதிகாரிகளும், ஊழியர்களும் ஒருங்கே திரண்டு கலந்து கொண்ட ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி, முண்டாசு கவிஞன் பாரதி பாடியது போன்று   "ஆஹா . . .வென ...எழுந்தது" யுகப் புரட்சி என்பது போல் 12.08.14 ஆர்ப்பாட்டம் அனைவரும்  வியக்கும் வண்ணம் அத்தனை சிறப்பாக அமைந்தது என்றால் அது மிகை ஆகாது.
இந் நிகழ்ச்சியின் பெண்கள் மட்டுமே நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு என்பது   அனைத்து சங்கங்களின்  ஒற்றுமை முயற்சிக்கு  கிடைத்த பலனாக கருதுகிறோம். இந்த ஒற்றுமை தொடரவேண்டுமென நமது BSNLEU சங்கம் மனதார விரும்புகிறது.


No comments: