Sunday 24 August 2014

‘ஞானபீட’ விருது எழுத்தாளர் U.R.அனந்தமூர்த்தி மறைவு...

ஞானபீடவிருது பெற்ற எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி மறைவு ஆயிரக்கணக்கான மக்கள் - எழுத்தாளர்கள் - கலைஞர்கள் அஞ்சலி
உலகப் புகழ்பெற்ற இந்திய எழுத்தாளரும், ஞானபீட மற்றும் பத்மபூஷன் விருதுகளைப் பெற்ற படைப்பாளியுமான யு.ஆர்.அனந்தமூர்த்தியின் மறைவு, நாட்டின் அறிவுத் துறைக்கு பேரிழப்பாகும் அனந்தமூர்த்தி கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் தீர்த்த ஹள்ளி அருகேயுள்ள மெலிகே கிராமத்தில் 1932 டிசம்பர் 1ம்தேதி பிறந்தவர். இவரின் இயற்பெயர் உடுப்பிராஜகோபாலச்சார்ய அனந்தமூர்த்தி. இந்து மத வர்ணாசிரம ஏற்றத் தாழ்வுகளை கடுமையாகச் சாடுபவராக தன்னை வரித்துக் கொண்டதால் யு.ஆர்.அனந்தமூர்த்தியாக பெயர் சூட்டிக் கொண்டார்.ஆங்கிலப் பேராசிரியரான இவர்,1990களில் முழு நேரமாக ஆங்கிலத்தில் சமூக அரசியல் விமர்சனங்களை எழுதியதன் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தார்.கன்னடத்தில் மட்டுமில்லாமல் உலக அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் அனந்தமூர்த்தி இலக்கிய உலகில்உயரிய விருதாகக் கருதப்படும் ஞானபீட விருதை 1994ம் ஆண்டு பெற்றார். இலக்கிய உலகிற்கு ஆற்றிய பெரும் சேவைக்காக அனந்தமூர்த்திக்கு 1998ம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.மதவாதத்திற்கு எதிராக துணிச்சலுடன் நின்ற அனந்தமூர்த்தி சமீபகாலமாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்ட போதிலும் தொடர்ந்து எழுத்துப் பணியை நிறுத்தவில்லை. இந்நிலையில், வெள்ளியன்று மாலை அவரது உடல்நிலை மோசமாகி உயிர் பிரிந்தது.அனந்தமூர்த்தியின் மறைவுக்கு நாடு முழுவதும் உள்ள அறிவுத்துறையினர், எழுத்தாளர்கள், இடதுசாரிகள், மக்கள் அமைப்புகள் அஞ்சலி செலுத்தினர்.கர்நாடகாவில் அனந்தமூர்த்தியின் மறைவையொட்டி 3 நாள் துக்கம் கடைப்பிடிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளதுஇறுதி நிகழ்ச்சிமறைந்த அனந்தமூர்த்தியின் உடல் பொதுமக்கள் அஞ்சலியும் இறுதி மரியாதையும் செலுத்துவதற்காக பெங்களூரு ரவீந்திரா கலாச்சேத்ராவின் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று தங்களதுஇறுதி மரியாதையை செலுத்தினர்.கர்நாடக முதல்வர் சித்தராமையா, மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்களான அனந்தகுமார், டி.வி.சதானந்த கவுடா, கன்னட எழுத்தாளர்கள் கிரிஷ் கர்னாட், எம்.எஸ்.சத்யூ, கிரிஷ் கசரவள்ளி, நாகபரணா, கே.எஸ்.நிசார் அகமது உள்ளிட்ட திரைப்படக் கலைஞர்கள், கவிஞர்கள், அறிவுஜீவிகள் தங்களது இறுதி மரியாதையை செலுத்தினர்.இதையடுத்து அன்னாரது இறுதி நிகழ்ச்சி பெங்களூரு பல்கலைக் கழகத்தின் வளாகத்திற்குள் நடைபெற்றது. முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.அனந்தமூர்த்தி மதச்சார்பின்மை கொள்கைகளை உறுதியுடன் பின்பற்றியவர் என்பதால் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் கலாச்சேத்ராவில் இறைவழிபாடு நடத்தினர்.சோசலிசத்தில் ஆழ்ந்த பற்று கொண்டவர் CPI(M)- புகழஞ்சலிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:சிறந்த எழுத்தாளரும், சமூக செயல்பாட்டாளருமான யு.ஆர்.அனந்தமூர்த்தியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.சோசலிசத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட அனந்தமூர்த்தி மதச்சார்பின்மை விழுமியங்கள், பன்முகத் தன்மைகொண்ட பண்பாடு மற்றும் சமூகநீதி ஆகிய விழுமியங்களில் உறுதியாக பற்று கொண்டு கருத்துக்களை பரப்பி வந்தார். அவருடைய மறைவு நாட்டின் அறிவுத் துறைக்கு பேரிழப்பாகும். அன்னாரின் மறைவால் வாடும் அவரது மனைவி, மகள் மற்றும் மகனுக்கு இதயப்பூர்வமான அனுதாபங்களை அரசியல் தலைமைக் குழு தெரிவித்துக் கொள்கிறது.

No comments: