அடுத்தடுத்த விபத்துகளால் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 6 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் கடந்த மார்ச் மாதம் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு பறந்து வந்தபோது, இந்திய பெருங்கடல் மேலே திடீரென்று காணாமல் போனது. அதில் பயணம் செய்த 239 பயணிகள் நிலை என்னவாயிற்று என்பது இதுவரை தெரியவில்லை. கடந்த ஜூலை மாதம் இதேபோல் மலேசியா பயணிகள் விமானம் ஒன்று உக்ரைன் கிழக்கு பகுதியில் பறந்தபோது ஏவுகணையால் தாக்கப்பட்டு வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 298 பேரும் பரிதாபமாக இறந்தனர்.அடுத்தடுத்த இரு விபத்துகளால் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இதனால் இந்த நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதை சரி செய்ய 6 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இப்போது 20 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.இதில் 30 சதவிகித ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள். மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 69 சதவிகித பங்குகளை வைத்துள்ள கழனால் நசினால் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இழப்பை சரிக்கட்டி, புனரமைக்க 109 கோடி டாலர் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment