வேலூர் கோட்டத்தில் பணிபுரிந்த BSNL ஒப்பந்தப் பணியாளர்கள் 140 பேரை திடீரென பணிநீக்கம் செய்ததைக் கண்டித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
BSNL ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலர் சி.ஞானசேகரன், தமிழ்நாடு தொலைதொடர்பு துறை ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலர் பி.அரிகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் பணியாளர்கள் BSNL பொது மேலாளர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தை தொடங்கினர்.
பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும். முறையற்ற மாற்றல்களை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி BSNLஊழியர் சங்கம் TNTCWU சங்க தோழர்கள் இணைந்து இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.நிர்வாகம் ஊழியர்களின் நியாமான கோரிக்கையை தீர்க்க முன்வராமல் பிடிவாதமாக இருப்பதால், வேலூர் ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆகஸ்ட் -5 மாநிலந் தழுவிய ஆதரவு ஆர்ப்பாட்டம்
ஆகவே, போராடும் வேலூர் தோழர்களின் கோரிக்கை வெற்றிபெற, ஆதரவாக தமிழகம் முழுவதும் கிளைகள் தோறும் ஆர்ப்பாட்டங்களை நடத்திட நமது BSNLEU + TNTCWUஇரு மாநில சங்கங்களும் கூட்டாக அறைகூவல் விடுத்துள்ளது. மாநில சங்க அறைகூவல் காண இங்கே கிளிக் செய்யவும்.நமது மதுரை மாவட்டத்தில் வாய்புள்ள அனைத்துக் கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம்.
மதுரையில் 05.08.14 செவ்வாய் கிழமை மதியம் 1 மணிக்கு, லெவல்-4 வளாகத்தில் மதுரை நகர கிளைகள் சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
--- என்றும் தோழமையுடன் ... எஸ்.சூரியன் --D/S-BSNLEU.
No comments:
Post a Comment