Sunday 3 August 2014

கற்பு போன்றது நட்பு: AUG-3 உலக நண்பர்கள் தினம் -

"உன் நண்பனைப் பற்றிச் சொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்' என்று ஒரு பழமொழி இருக்கிறது. நட்பு என்பது அந்த அளவுக்கு நெருக்கமான, இனிமையான, தூய்மையான ஓர் உறவு. நண்பர்கள் இல்லாதவர் என யாருமில்லை. நண்பர்கள், எல்லோருடைய வாழ்விலும் முக்கிய இடத்தை வகிக்கின்றனர். ஏழை - பணக்காரன், ஆண் - பெண், வெள்ளை - கருப்பு, ஜாதி - மதம், வயது - வரம்பு, நான் - நீ, போன்ற வேறுபாடுகளை கடந்தது நட்பு
இன்றைய வேகமான உலகில் கூட்டுக் குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குடும்பத்துக்குள் பகிர்ந்து கொள்ள முடியாத பல விஷயங்களை, நண்பர்களுக்குள் பகிர்ந்து கொள்ள முடிகிறது. நட்புக்கு மதிப்பளிக்கும் விதமாக, ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை (ஆக.,3) உலக நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
தினமும் சந்திக்கும் நண்பர்களை நினைவுபடுத்த தேவையில்லை. எனினும், பள்ளிக்கூட, கல்லூரி கால நண்பர்களை நினைவுபடுத்தி, சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது நண்பர்கள் தினம்.குறைந்தது ஒருமுறை: ஒவ்வொரு காலகட்டத்திலும், புதிய, புதிய நண்பர்களின் பழக்கம் கிடைக்கும். இவர்களை நேரில் சந்திக்க முடியாவிட்டாலும் மொபைல், சாட்டிங், -மெயில், வாழ்த்து அட்டை அனுப்புவதன் மூலம், அவர்களுடன் அந்த நாள் நினைவுகளை பகிர்ந்து கொள்ள முடியும். புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வது வரவேற்கத்தக்கது. அதற்காக பழைய நண்பர்களை மறந்துவிடக்கூடாது. நண்பர்களிடையே வரக்கூடாத விஷயம், "பகைமை'. தவிர்க்க முடியாத காரணங்களினால் முறிந்து விட்ட நட்பை, திரும்பவும் உயிர்ப்பிக்கும் நாளாகவும் இந்நாள் அமைகிறது. கருத்து வேற்றுமையினால் நண்பர்களுக்கு பிரிவு வருவது இயற்கை தான், அதை அடுத்த சில மணி நேரங்களில் உணர்ந்து தாமாக பேச முன்வர வேண்டும். நட்பு எந்த ஒரு மனிதனும் தனி தீவாக ஒதுங்கிவிடாமல் காப்பாற்றுகிறது
நண்பனைப் பற்றி:
*
நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு, ஒருபோதும் நண்பனை விட்டுக் கொடுக்காதே.
*
உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
*
உன் நண்பர்களை காட்டு... உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.
*
ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்.
*
நமது நண்பர்கள் தான், நமது உண்மையான சொத்துகள்.
*
உன்னை பற்றி முழுதாக அறிந்திருந்தும், உன்னை விரும்புபவனே உன் நண்பன்
.

No comments: