Deloittee குழுவின் பிற்போக்குத் தனமான அறிக்கைக்கு எதிராக, 12-08-2014 அன்று பிரமாண்டமான நாடுதழுவிய ஆர்ப்பாட்டங்களை நடத்திட Forum of BSNL Unions and Associations அறைகூவல் விடுத்துள்ளது. நேற்று 04.08.2014 டெல்லியில் சந்திப்பு
நடைபெற்றது இதில் பிஎஸ்என்எல் உள்ள அனைத்து சங்கங்களும் கலந்து கொண்டன, Deloittee குழுவின்
பிற்போக்கு அறிக்கை எதிர்த்து, 12.08.2014 அன்று மாபெரும் தேசிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடத்த பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு அழைப்பு கொடுத்துள்ளது. Deloittee குழுவின் அறிக்கை இயற்கையில் முற்றிலும் தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரானவை ஆகும் . நமது BSNLEU - CHQ ஏற்கனவே Deloittee குழுவின் அறிக்கை குறித்து, 04.08.2014 அன்று CMD-BSNLக்கு ஒரு விரிவான கடிதம் நமது பொதுச் செயலர் தோழர்.பி.அபிமன்யு எழுதியுள்ளார். மாநில மற்றும் மாவட்ட செயலாளர்கள் Deloittee குழுவின் அறிக்கை எதிராக, ஊழியர்களிடம் விசயங்களை எடுத்துச் சொல்ல இந்த கடிதத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நமது CHQ 12.08.2014 அன்று ஆர்ப்பாட்டத்தை பெரும் வெற்றி பெற செய்ய உறுதிகொள்ள வேண்டுமாய் BSNLEU வின் தோழர்கள் ஒவ்வொருவரையும் கேட்டுக்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment